காரைநகரில் கொரோனா அச்சத்தால் இழுத்து மூடப்பட்ட பாடசாலை

திங்கள், 30 நவம்பர், 2020

யாழ் காரைநகர் இந்துக் கல்லூரி மூன்று தினங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.
காரைநகர் பகுதியில் உள்ள ஒருவருக்கு 
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், குறித்த தொற்றாளருடன் காரைநகர் இந்துக் கல்லூரி ஆசிரியர் ஒருவர் பழகியுள்ளார்.இவர் கடந்த 
கிழமை பாடசாலைக்கு சமூகம் கொடுத்துள்ளார்.இவருக்கு 
எதிர்வரும் 02.12-20.புதன்கிழமை PCR பரிசோதனை 
மேற்கொள்ளப்படவுள்ளது. இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படாவிட்டால் எதிர்வரும்.03-12-20.வியாழக்கிழமை 
வழமைபோல் பாடசாலை நடைபெறும் எனவும், அதுவரை எதிர்வரும் புதன்கிழமை வரை பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் 
அறிவிக்கப்பட்டுள்ளன

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக