கோழி பண்ணை உரிமையாளர்கள் உணவு தட்டுப்பாட்டால் பல்வேறு இன்னல்களுக்கு

புதன், 18 நவம்பர், 2020

விலங்கு உணவு தட்டுப்பாடு காரணமாக அம்பலாங்கொடை, பலபிட்டிய மற்றும் அஹூங்கல்ல ஆகிய பகுதிகளில் வாழும் சிறியளவான கோழி பண்ணை உரிமையாளர்கள் இன்னல்களுக்கு 
முகம்கொடுத்துள்ளனர்.
முட்டையிடும் கோழிகள், நிறுவனங்களினால் வழங்கப்படும் தீவகத்திற்கு மாத்திரம் பழக்கப்பட்டுள்ளதாக அவர்கள் 
தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றால் 2 வார காலமாக கோழி தீவகப் பணிகள் தடைப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தீவகம் இன்றி கோழிகள் இறந்து 
வருவதாக கோழி பண்ணை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் வர்த்தக அபிவிருத்திக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை செலுத்த முடியாது கடும் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பலாங்கொடை, பலபிட்டிய மற்றும் அஹூங்கல்ல ஆகிய பகுதிகளில் வாழும் சிறியளவான கோழி பண்ணை உரிமையாளர்கள் 
கோரியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக