திருக்கார்த்திகை வீட்டில் ஏன் 27 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும்

புதன், 11 டிசம்பர், 2019

இன்று திருக்கார்த்திகை தினம். அன்று கோவில் மட்டும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவோம். வீடுகளில் ஏற்றும்போது எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும், எந்தெந்த இடத்தில் ஏற்ற வேண்டும்
 என்பது குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.திருக்கார்த்திகை 
நாளைத் தான் நாம் கார்த்திகை தீபமாகக் காலங்காலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.இந்த திருக்கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேருகின்ற நாள் தான் திருக்கார்த்திகை. அந்த நாளில் காலங்காலமாக மக்கள் தங்களுடைய வீடுகளிலும் கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, மிக வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.
வீட்டில் ஏற்றப்படும் 27 தீபங்களில் முதல் 4 தீபங்களை மட்டும் வீட்டினுடைய முற்றப் பகுதிகளில் ஏற்றினால் போதும். இப்போதெல்லாம் எந்த வீடுகளிலும் குறிப்பாக நகரங்களில் உள்ள அடுக்கு மாடி வீடுகளில் முற்றம் என்பதே கிடையாது. அதனால் ஹாலில் நான்கு 
விளக்குகளை ஏற்றுங்கள்.
சமையலறை:சமையல் அறையில் ஈசானி மூலையில் ஒரே ஒரு விளக்கு மட்டும் ஏற்றி வையுங்கள்.வீட்டில் முற்றத்துக்கும் வீட்டின் மற்ற அறைகளுக்கும் இடையே இருக்கிற நடைப்பகுதியில், இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும்.
வீட்டுக்குள்ளும் வீட்டின் முன் புறத்திலும் விளக்கேற்றும் நாம் வீட்டின் பின்புறத்தைக் கண்டு கொள்ளவே மாட்டோம். ஆனால் திருக்கார்த்திகையில் கட்டாயம் வீட்டின் பின்கட்டுப் பகுதியில் 
விளக்குகள் ஏற்ற வேண்டும். அதிலும் 4 விளக்குகள் ஏற்ற வேண்டும்.வீடுகளில் சிறியதாக குழி போன்று வாசலுக்கு இரண்டு புறமும் மாடங்கள் அமைத்திருப்பார்கள். அப்படி மாடங்கள் இருந்தால் இதில் இரண்டு விளக்குகள் ஏற்றி வையுங்கள். இல்லையென்றால் அப்படியே அந்த வாசல் பகுதிக்கு நேராக இரண்டு புறங்களிலும் இரண்டு விளக்குகளை 
ஏற்றுங்கள்.
நிலைப்படி:வீட்டின் பிரதான கதவு உள்ள பகுதி தான் இது. அந்த வாயிலின் நிலைப்படியில் இரண்டு புறமும் விளக்குகள் ஒவ்வொன்றாக வையுங்கள்.கடவுள் படங்கள்கடவுளின் படங்கள் வைத்திருக்கும் இடங்களில் இரண்டு புறமும் இரண்டு விளக்குகளை
 ஏற்றி வையுங்கள்.
வீட்டுக்கு வெளியே:வீட்டுக்கு வெளிப்புறத்தில் தீபாவளி அன்று ஏற்றுவது போல் இன்றும் ஒரேயொரு எமதீபம்
 ஏற்றி வையுங்கள்.
கோலத்தில்:திருக்கார்த்திகை அன்று கட்டாயம் வீட்டின் முன் மாக்கோலம் போடுவது வழக்கம். அந்த கோலத்தில் 5 விளக்குகள் ஏற்றுங்கள்.கிராமங்களில் திண்ணை இல்லாத வீடுகளையே பார்க்க முடியாது. அந்த திண்ணைப் பகுதியில் 4 தீபங்கள் ஏற்றி 
வைக்க வேண்டும்.
ஏன் 27 ? இப்படி மொத்தம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. அது என்ன 27 என்று நீங்கள் கேட்கலாம். 27 என்பது 27 நட்சத்திரங்களைக் குறிக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக