அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு நோய்களுக்கு உட்பட்ட மிருகங்கள் இறைச்சிக்காக சந்தைக்கு வழங்கப்படுவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
அரச மிருக வைத்தியர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக அறுப்பதற்காக கொண்டு செல்லப்படும் மாடு, ஆடு, பன்றி போன்றவற்றுக்கு கடந்த பல வாரங்களாக சுகாதார சான்றிதழ் விநியோகிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாகவும்
கூறப்படுகின்றது.
இதனால், உணவுக்காக சந்தையில் வைக்கப்பட்டுள்ள கால்நடை இறைச்சி வகைகளின் சுகாதாரத் தன்மை சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளதாகவும் அரச மிருக வைத்தியர் சங்கத்தின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக