நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறவந்தவர்களின் தகவல்

வியாழன், 3 பிப்ரவரி, 2022

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப்பிப்பதற்கும் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வந்த 1213 பேரில் 145 பேர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்
   தெரிவித்தார்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிக்கைகளினால் இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் 
தெரிவித்தார்.
இவர்களில் பெரும்பாலானோர் லொறி சாரதிகள் எனவும் அவர்களில் 21 பேர் பஸ் சாரதிகள் எனவும் இது ஆபத்தான நிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு கிடைத்த தகவல்களின்படி, போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10% ஆக அதிகரித்துள்ளது.
போதைப்பொருள் பாவனையில் இதுவரை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பிடிபட்டுள்ள போதிலும், போதைப்பொருள் சாரதிகள் தொடர்பில் கவனம் செலுத்தாமையால் வீதிப் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் போதைக்கு அடிமையான சாரதிகளும் போதைக்கு அடிமையானவர்களும் பிடிபடுவார்கள் எனவும் தெரிவித்தார். 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறவந்தவர்களின் தகவல்

நாட்டில் பெண்களின் திருமணத்தில்இனி ஏற்படும் பாரிய மாற்றங்கள்

புதன், 2 பிப்ரவரி, 2022

நாட்டில் பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவதாக தெரியவந்துள்ளது.இந்தநிலையில், பெண்களுக்கான ஆகக்குறைந்த திருமண வயதை 21 அல்லது 25 ஆக மாற்றியமைக்க வேண்டும் என முஸ்லிம் பெண்கள் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர்.
முஸ்லிம் பெண்கள் அமைப்பொன்றினால் இந்த யோசனை, “ஒரு நாடு ஒரு சட்டம்” ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.முஸ்லிம் பெண்கள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, வைத்தியர் மரினா ரிஃபாய் மற்றும் ஊடகவியலாளர் சுபா காசிம் உள்ளிட்ட குழுவினரே இந்த யோசனையை 
முன்வைத்துள்ளனர்.
இதன்போது, காதி நீதிமன்ற முறைமை குறித்தும் சில விடயங்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த நடைமுறையில் காணப்படும் குறைபாடுகள் திருத்தப்பட வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.குறிப்பாக தகுதியில்லாதவர்கள் காதி நீதிமன்றத்திற்கு நியமிக்கின்றமை பிரச்சினைக்குரியது என அவர்கள் கூறியுள்ளதாக
 அறிய முடிகின்றது.
அத்துடன், பெண்கள் திருமணம் செய்துக்கொள்ளும் ஆகக்குறைந்த வயது 21ஆக திருத்தியமைக்கப்பட வேண்டும் என வைத்தியர் மரீனா ரிஃபாய் தெரிவித்துள்ளார். அத்துடன், பெண்களின் திருமண வயது 25ஆக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என ஊடகவியலாளர் சுபா காசிம் குறிப்பிட்டுள்ளார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் பெண்களின் திருமணத்தில்இனி ஏற்படும் பாரிய மாற்றங்கள்

நாட்டில் 12 மாவட்டங்களில் டெங்கு அபாய வலயங்கள் அறிவிப்பு

திங்கள், 31 ஜனவரி, 2022

நாட்டில் டெங்கு பரவும் அபாயத்தில் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 81 பிரதேச செயலாளர் பிரிவுகளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளம் கண்டுள்ளது.கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, அம்பாறை, திருகோணமலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய

மாவட்டங்களில் கடுமையான டெங்கு அளவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஜனவரி மூன்றாம் வாரத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 411 பேரும், கம்பஹாவில் 305 பேரும், களுத்துறையில் 120 பேரும், குருநாகலில் 109
பேரும், புத்தளத்தில் 96 பேரும், காலியில் 83 பேரும், கண்டியில் 73 பேரும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த வருடத்தில் இதுவரை 7,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் 12 மாவட்டங்களில் டெங்கு அபாய வலயங்கள் அறிவிப்பு

நாட்டில் அடுத்த மாதம் மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

அடுத்த மாதம் அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.இந்தியாவில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய கடன் எல்லையை பயன்படுத்துவதற்கான
ஏற்பாடு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் இறக்குமதிக்காக இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்க முன்வந்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கடன் பத்திரங்களைத் திறப்பதற்காக மத்திய வங்கி 16 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவித்துள்ளதாகவும், அதனால் உடனடி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் அடுத்த மாதம் மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

நாட்டில் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் நேர அட்டவணை உள்ளே

சனி, 29 ஜனவரி, 2022

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
அனுராதபுரம் அவ்வப்போது மழை பெய்யும்
மட்டக்களப்பு அவ்வப்போது மழை பெய்யும்
கொழும்பு பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
காலி பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
யாழ்ப்பாணம் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கண்டி பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
நுவரெலியா அடிக்கடி மழை பெய்யும்
இரத்தினபுரி சிறிதளவில் மழை பெய்யும்
திருகோணமலை அவ்வப்போது மழை பெய்யும்
மன்னார் அடிக்கடி மழை பெய்யும்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


READ MORE - நாட்டில் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் நேர அட்டவணை உள்ளே

இலங்கையில் அதி உச்சத்தைத் தொட்ட சீமெந்தின் விலை

வெள்ளி, 28 ஜனவரி, 2022

நாட்டில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டாலும், சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு சீமெந்தை தொடர்ந்தும் விற்பனை செய்வதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.பெரும்பாலான பகுதிகளில், சீமெந்து மூடையின் விலை 1,600 முதல் 1,800 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நுகர்வோரிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் காரணமாக, நுகர்வோர் அதிகார சபை, கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பாகங்களில், அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாடுகளை
 முன்னெடுத்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - இலங்கையில் அதி உச்சத்தைத் தொட்ட சீமெந்தின் விலை

ஜோதிடத்தில் 30 வருடத்திற்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனியால் 4 ராசிக்கு அதிர்ஷ்டம்

புதன், 26 ஜனவரி, 2022

ஜோதிடத்தில், நவகிரகங்களின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது ஒருவரின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கும். அதில் ஒன்பது கிரகங்களும் சீரான இடைவெளியில் ராசியை 
மாற்றுகின்றன.
இதில் நீதிமான் சனியின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒன்பது கிரகங்களில் சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியது. இது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற எடுத்துக் கொள்ளும் காலம் இரண்டரை 
வருடங்கள் ஆகும்.
சனி பெயர்ச்சி 2022அந்த வகையில் சனி பகவான் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். 30 வருடங்களுக்கு பிறகு சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கவுள்ளார். சனி ராசியை மாற்றுவதால், சில 
ராசிக்கு ஏழரை சனி தொடங்குவதோடு, சிலருக்கு அஷ்டம, அர்தாஷ்டம சனி 
ஆரம்பமாகிறது. சிலர் சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். 30 வருடங்களுக்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனியால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல அற்புதமான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்வில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். உங்களின் நிதி நிலை உயரும். புதிய வேலை கிடைப்பதற்கான வலுவான 
வாய்ப்புக்கள் உள்ளன. வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். மேலும் இக்காலம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான
 காலம். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உங்கள் ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால், 
இந்த சனி பெயர்ச்சியால் உங்களுக்கு அனைத்துவிதமான ஆடம்பரங்களும், சுகபோகங்களும் நிறைந்திருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வெளியூர் வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, 
அவர்களின் விருப்பம் நிறைவேறும். 
இக்காலத்தில் உங்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு அதிகமாக கிடைக்கும். மேலும் உங்கள் பணத்தை அதிகமாக சேமித்து வைப்பதற்கான 
வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும். எப்போதும் கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். நிலம், வீடு போன்றவற்றை வாங்குவதற்கு இது சிறந்த காலமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய கதவுகள் திறக்கப்படும்.
தொழிலதிபர்கள் தங்களின் வியாபாரத்தை பெருக்குவதற்கு சாதகமான காலமாக இருக்கும். புதிய தொழிலில் பணத்தை முதலீடு செய்ய நினைப்பீர்கள். மேலும் எவ்வித மரியாதையையும் இவர்கள் இழக்கமாட்டார்கள். சட்ட விஷயம் தொடர்பான முடிவுகள் இந்த ராசிக்காரர்களுக்கு 
சாதகமாக இருக்கும்.
தனுசுதனுசு ராசிக்காரர்கள் இந்த ஆண்டு சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள் என்பதால் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மேலும் சனி பகவானின் சிறப்பான அருள் இந்த ராசிக்காரர்கள் மீது
 இருக்கும். பணியிடத்தில் நல்ல பதவி உயர்வு மற்றும் பண உயர்வுக்கான வலுவான வாய்ப்புள்ளது. மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான 
வாய்ப்புக்களும் உண்டு

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - ஜோதிடத்தில் 30 வருடத்திற்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனியால் 4 ராசிக்கு அதிர்ஷ்டம்