நைனாமடுப் பகுதியில் எட்டுக்கால்களுடன் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி

ஞாயிறு, 28 ஜூன், 2020

வவுனியாவில் எட்டுகால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. எனினும் குறித்த ஆட்டுக்குட்டி இறந்த நிலையிலேயே பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா நெடுங்கேணி நைனாமடுப் பகுதியிலேயே இவ்வாறு எட்டுக்கால்களைக் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டியொன்று நேற்று (சனிக்கிழமை) 3 மணியளவில் 
பிறந்துள்ளது.
நைனாமடுப்பகுதியில் சீதாகோபால் ஆறுமுகம் எனும் அரசியல் கைதி ஒருவரின் வீட்டிலையே இவ்வாறு விசித்திர 
ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது.
இவர், 2017ஆம் ஆண்டில் இருந்து வாழ்வாதாரத்துக்காக ஆடுகளை வீட்டில் வளர்த்து வந்துள்ளார். இதில் ஒரு ஆடுதான் அ
திசய குட்டியினை ஈன்றுள்ளது.
இந்த ஆட்டுக்குட்டி இறந்து பிறந்துள்ள போதிலும் அதனைப் பார்வையிட சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் படையெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நைனாமடுப் பகுதியில் எட்டுக்கால்களுடன் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி

சித்தண்கேணியில் வயோதிபப் பெண்களின் வாயைக் கட்டிவைத்து கொள்ளை

சனி, 27 ஜூன், 2020

யாழ் சித்தண்கேணி பகுதியில் வயோதிபப் பெண்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் அவர்களை அச்சுறுத்தி தாக்கி விட்டு 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளது..26-06-20.நேற்றையதினம் இரு வயோதிபப் பெண்கள் மட்டும் வதியும் வீடொன்றில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் 
தெரியவருவதாவது;
நள்ளிரவு வேளையில் கொள்ளையர்கள் இருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் இருவரும் அங்குள்ள பெண்கள் இருவரையும் மிரட்டியதுடன் ஒருவரை வீட்டு வளாகத்துக்குள் உள்ள 
கோவிலில் போய் அமருமாறு கூறியுள்ளனர்.மற்றைய வயோதிபப் பெண் கூக்குரலிட்டதால் அவரது வாயை துணியால் கட்டிவிட்டு 
வீட்டை சல்லடை போட்டு 
கொள்ளைக் கும்பல் தேடுதலை மேற்கொண்டுள்ளது.அலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு விட்டு வேறு நகைகள் இருந்தால் தரும்படி கேட்டு வாயைக் கட்டிய வயோதிபப் பெண்ணைத் தாக்கியுள்ளனர்.கொள்ளையர்களுக்கு 
அஞ்சி போத்தல்களில் போட்டு வைத்த நகைகளையும் அந்தப் பெண் எடுத்துக் கொடுத்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் தடயவியல் பொலிஸாரால் தீவிர விசாரணைகள் 
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - சித்தண்கேணியில் வயோதிபப் பெண்களின் வாயைக் கட்டிவைத்து கொள்ளை

நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான தகவல்

வெள்ளி, 26 ஜூன், 2020

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் சமய வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரே நேரத்தில் செல்லக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில், பௌத்த விகாரைகள், சைவ 
ஆலயங்கள், கத்தோலிக்க உட்பட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் கூடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று சமூக மட்டத்தில் பரவில்லை 
என்பதை குறிப்பிடத்தக்க காலம் ஆராய்ந்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.எவ்வாறாயினும் இதற்கு முன்னர் சமய வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்ல 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததுடன் தற்போது அவை படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.இலங்கையில் 2001 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 11 பேர் உயிரிழந்தனர். அத்துடன் ஆயிரத்து 562 பேர் குணமடைந்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>

READ MORE - நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான தகவல்

நீங்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த தேதியில் திருமணம் செய்துகொள்வது நல்லது

திங்கள், 15 ஜூன், 2020



வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தாலே முதலில் வந்து நிற்பது ஜாதக பொருத்தம் தான். அதே போல ஒருவர் பிறந்த தேதியை கொண்டும் எந்த தேதியில் பிறந்தவர்கள் அவர்களுக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்பதை கணிக்க முடியும். அதை பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்.
01
 ஒன்றாம் தேதியிலோ அல்லது கூட்டு என் ஒன்றாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 3,4,5,6,8 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளில் திருமணம்

செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 1ம் எண்ணில் பிறந்த ஆண்கள் அதே எண்ணில் பிறந்த பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. 2,11,20,29 ஆகிய தேதியில் பிறந்தவர்கள்
02
இரண்டாம் தேதியிலோ அல்லது கூட்டு என் இரண்டாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,3,5,6,7 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 அல்லது 7 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 2ம் எண்ணில் பிறந்த

 ஆண்கள் 8 அல்லது 9ம் எண்ணில் பிறந்த பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. 3,12,21,30 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் : three மூன்றாம் தேதியிலோ அல்லது கூட்டு என் மூன்றாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 2,3,9 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. 4,13,22,31 ஆகிய

தேதியில் பிறந்தவர்கள் : four நான்காம் தேதியிலோ அல்லது கூட்டு என் நான்காக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,5,6,8 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 வரும்
தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 5,14,23 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் : five ஐந்தாம் தேதியிலோ அல்லது

கூட்டு என் ஐந்தாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,2,3,6 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 9 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதையும் படிக்கலாமே: சகல செல்வங்களையும் பெற உதவும் சுலோகம்

 6,15,24 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் : six ஆறாம் தேதியிலோ அல்லது கூட்டு என் ஆறாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 6,9 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம்

செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 அல்லது 9 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 6ம் எண்ணில் பிறந்த ஆண்கள் 1,4,5,3 ஆகிய எண்ணில் பிறந்த பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. 7,16,25 ஆகிய தேதியில்

பிறந்தவர்கள் : seven ஏழாம் தேதியிலோ அல்லது கூட்டு என் ஏழாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,2,5,6 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 2 அல்லது 6 வரும் தேதிகளில்

 திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 7ம் எண்ணில் பிறந்தவர்கள் 8ம் எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. 8,17,26 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் : eight எட்டாம் தேதியிலோ அல்லது கூட்டு என் எட்டாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,4 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ

பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 8ம் எண்ணில் பிறந்தவர்கள் 2,7 ,8 ஆகிய எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. 9,18,27 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் : nine ஒன்பதாம் தேதியிலோ அல்லது கூட்டு என்

ஒன்பதாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 3,5,6,9 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 3 அல்லது 6

அல்லது 9 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 9ம் எண்ணில் பிறந்தவர்கள் 2,8 ஆகிய எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

 
READ MORE - நீங்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த தேதியில் திருமணம் செய்துகொள்வது நல்லது

அம்பு வில்லு பாவித்த முதல் இனம் இலங்கையில் தென்பகுதில்

ஞாயிறு, 14 ஜூன், 2020

இலங்கையின் தென்பகுதில் உள்ள மழைக் காடுகளில்(Fa-Hien Lena) உள்ள குகை ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட கற்கள், சிறிய ஆயுதங்கள் 48,000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை 
என்பது நிரூபனமாகியுள்ளது. அவர்கள் 48,000 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே 
அம்பு வில்லை பாவிக்க கற்றுக்கொண்டு இருப்பது பெரும் ஆச்சரியமான 
விடையம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இதுவரை உலகில் ஆபிரிக்காவில் தான் மிகப் பழமையான 
ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. இவை சுமார் 64,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை.
அவர்களும் அம்பு வில்லை பாவிக்க கற்றுக்கொண்டு இருந்தார்கள். மேலும் ஜேர்மனில் கண்டு பிடிக்கப்பட்ட சில ஆதிகால ஆயுதங்கள் 18,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாவிக்கப்பட்டவை ஆகும். அந்த வகையில் உலகில் 2வது மிகப் பழைய கற்கால ஆயுதங்கள் இலங்கையில் தான் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் வசித்த மக்கள், மிகவும் பழமைவாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதில்
 ஒரு ஐயப்பட்டும் இல்லை.
இந்த கற்கால மனிதர்கள் மொழிகள் தோன்ற முன்னரே இலங்கையில் வசித்து வந்துள்ளார்கள். இவர்கள் தமிழர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அல்லது இவர்களில் ஒரு பகுதியினரே பின் நாளில் தமிழர்களாக மாறி இருக்க் வாய்ப்புகள் அதிகம்.அந்த வகையில் உலகின் மூத்த குடி தமிழ் குடி என்று சொல்வதில் ஒரு அர்த்தம் 
உள்ளது அல்லவா.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - அம்பு வில்லு பாவித்த முதல் இனம் இலங்கையில் தென்பகுதில்

சில பகுதிகளில் கொழும்பில் 15 மணி நேர நீர் வெட்டு அமுலில்

வெள்ளி, 12 ஜூன், 2020

நாளை மறுதினம் (14-06-20) ஞாயிற்றுக்கிழமை கொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பின், கொம்பனித் தெரு, கொள்ளுப்பிட்டி, கறுவாத்தோட்டம், பொரளை, மருதானை (கொழும்பு 02,03,07,08,10) ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு 
அமுல்படுத்தப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (14) முற்பகல் 9.00 மணி முதல் செவ்வாய் நள்ளிரவு 12.00 மணி வரையான 15 மணி நேரத்திற்கு இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, சபை அறிவித்துள்ளது.
இக்காலப் பகுதியில், (கொழும்பு 01) கொழும்பு கோட்டை பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என சபை தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், தங்களுக்கு ஏற்படும் அசௌகரியம் தொடர்பில் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
READ MORE - சில பகுதிகளில் கொழும்பில் 15 மணி நேர நீர் வெட்டு அமுலில்

மாணவர்களுக்கு இணையவழிக் கற்பித்தல் மூலம் ஏற்படும் பேராபத்தாம்

வியாழன், 11 ஜூன், 2020

கொரோனா அச்சம் காரணமாக இணையவழிக் கற்பித்தல் முறை வைரலாகி வருகிறது.இக்கற்பித்தல் முறை வெறும் வகுப்பறை கற்பித்தல் போல் ஆசிரியரிடமிருந்து மாணவர் கற்கும் ஒருவழிப்பாதையாக
 மட்டுமல்லாது பல்வழிப்பாதை கொண்ட
முழுநிறைவு கற்பித்தல் முறையாக விளங்குகின்றது.இணையவழிக் கல்வி முறையில் பாட வல்லுநர்களால் வடிவமைக்கப்படும் பாடங்கள் பல்லூடக 
வசதிகளுடன் பல்வழிக் கற்பித்தல் முறைகளைத் தருவதாக விளங்குகிறது.இத்தகைய நன்மைகளை 
தரும் இணையவழிக் கல்வி முறையில் பல ஆபத்துக்களும் உள்ளதை நீங்கள் அறிவீர்களா?இணையவழிக் கல்வி 
முறையில் எத்தகைய ஆபத்துக்கள் உள்ளன?, அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன? இதுபோன்ற உங்கள் கேள்விகளுக்கு பதிலாக வருகிறது
 இக்காணொளி,

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

     
READ MORE - மாணவர்களுக்கு இணையவழிக் கற்பித்தல் மூலம் ஏற்படும் பேராபத்தாம்