நீங்கள் வாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா அப்படின்னா இதைப் படிங்க

வெள்ளி, 29 மே, 2020

பொதுவாக தொலைதூரப் பயணம் செய்வது என்பது அனைவரும் பிடித்த ஒன்று. ஆனால், போக்குவரத்து மிகுந்த இடத்தில் பயணம் மேற்கொள்வது என்பது மிகவும் மன உளைச்சலை 
ஏற்படுத்தும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். பொதுவாக
 காலை மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அந்த நேரங்களில் மணிக்கணக்காக போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டும். அதுவும் முன் அனுபவம் இல்லாத ஓட்டுநராக
 இருந்தால் இன்னும் அதிக மன உளைச்சல் மற்றும் மன 
அழுத்தம் ஏற்படும்.
மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் இறுதியில் இதயத்தைப் பாதிக்கும். இந்த சிக்கலுக்கு ஒரு எளிய தீர்வு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். அது வாகனம் ஓட்டும்போது சரியான இசையைக் கேட்பதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பொதுவாக இசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இசைக்கு மயங்காத உயிர்கள் 
இவ்வுலகில் இல்லை.
இசை என்பது மனித வாழ்வோடு இணைந்த ஒன்று. உலக கலாச்சாரங்கள் அனைத்திலும் இசைக்கு முக்கியத்துவம் உள்ளது. பண்டைய காலத்தில் தமிழ்மொழியில் இயல், இசை, நாடகம் ஆகியவற்றை முத்தமிழ் என்று அழைத்தனர். அந்தளவிற்கு இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இசைக்கும் மருத்துவ உலகிற்கும் கூட இணைப்புள்ளது. இசைக்கு ஒரு விதமான மருத்துவ குணமுண்டு என்பது அனைவரும் 
அறிந்த ஒன்றே.
மூளை ஆரோக்கியம்,ஞாபக சக்தி,ஒருங்கிணைக்கும் திறன்,ஹார்மோன் மாற்றங்கள்,மன அழுத்தம் குறையும், புத்துணர்ச்சி பெறுவது,மனச்சோர்வு நீங்குவது,இதய துடிப்பைச் சீராக்கும்,இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்,மன நலப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது.
கடந்த காலத்தில் மேற்கொண்ட ஆய்வின் படி, மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக வாகனம் ஓட்டுதல் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது இதய நோயாகவும் மாற வாய்ப்பிருப்பதாக 
கூறப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் , 20 வயதுடையவர்களும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் அதிக போக்குவரத்தில் வாகனம் ஓட்டுதல் மன அழுத்தத்தையும், முன் அனுபவம் இல்லாத வாகன ஓட்டுநர்களால் கவலையடைவதும் இதய நோய் ஏற்படுவதற்கும் முக்கிய காரணம் என்கிறார்கள் 
ஆராய்ச்சியாளர்கள்.
பிரேசிலின் மராலியாவில் உள்ள சாவோ பாலோ மாநில பல்கலைக்கழகம், யுனைடெட் கிங்டமில் உள்ள ஆக்ஸ்போர்டு ப்ரூக்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியில் உள்ள பார்மா பல்கலைக்கழகம் ஆகிய பல ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வின்படி 
இவ்வாறு கூறப்படுகிறது.
அடிக்கடி வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் நீண்ட காலமாக உரிமம் பெற்றவர்கள் போக்குவரத்து நெரிசலினால் ஏற்படும் மன அழுத்தச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு 
இருக்கிறார்கள். இரு வெவ்வேறு சோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். பங்கேற்பாளர்கள் பரபரப்பான போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் 3 கிலோமீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் கடக்க வேண்டும். அப்போது, பங்கேற்பாளர்கள் வாகனம் ஓட்டும்போது காரில் எந்த
 இசையையும் கேட்கவில்லை.
மற்றொரு நாளில், அதே இயக்கங்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இந்த முறை வாகனம் ஓட்டும்போது பங்கேற்பாளர்கள் இசையைக் கேட்கலாம். ஒவ்வொரு சோதனை 
நிலையிலும் இதயத்தில் மன அழுத்தத்தின் விளைவை அளவிட, புலனாய்வாவார்கள் பங்கேற்பாளர்களிடம் இதய துடிப்பு மானிட்டர்களை அணியுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதியில் வாகனம் ஓட்டும்போது இசையைக் கேட்பது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
நோயாளிகள் இசையை கேட்கும்போதும், பாடும்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைக்கும் இசை, ‘அல்ஸைமர்’ எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு நல்ல பலன் கொடுப்பதாக 
அமைகிறது.
நாம் ரசித்துக் கேட்கும் மெல்லிய இசை, ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைச் சீராக்குகிறது. பதற்றம் மற்றும் கவலைகளை குறைக்கிறது. இதை பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மனதை அமைதிப்படுத்தும் 
சக்தி இசைக்கு உண்டு.
இசையைக் கேட்பவர்களைவிட, அதைக் கற்றுக்கொண்டு இசைப்பவர்களின் மூளையில் சில நல்ல தாக்கங்கள் ஏற்படுகின்றதாக கூறப்படுகிறது. இசையைக் கற்றுக்கொண்டு, உள்வாங்கிக்கொண்டு அதை வாசிப்பவர்களின், பாடுபவர்களின் கவனிக்கும் திறன் அதிகமாகிறது.
ஒருவர் இசைகேட்பதால் அவரின் வாழ்க்கை முறையை, விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம்வரை இசை கேட்பது மிக நல்லது. இன்றைய சூழலில் தூக்கமின்மை மிகப் பெரும் பிரச்சனை. எனவே, தூங்குவதற்கு முன்னர் இசையைக் கேட்டால் நிம்மதியான தூக்கம் பெறலாம்.
உலகை உயிர்ப்போடு வைத்திருப்பது இசை. இசை மட்டும் இல்லையென்றால் எத்தனையோ பேர் இன்று மன அமைதியைத் தொலைத்திருப்பார்கள் 
என்பது நிற்சயம் .

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - நீங்கள் வாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா அப்படின்னா இதைப் படிங்க

நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

ஞாயிறு, 24 மே, 2020

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை.24-05-20. இன்று மாலை வரை 1106 ஆக உயர்ந்துள்ளது.இதில் குவைத்தில் இருந்து வந்து திருகோணமலை 
தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருக்கும் 17 பேர் உள்ளடங்குகின்றனர்.கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 674 ஆக 
உயர்ந்துள்ளது.24-05-20..இன்று மாத்திரம் குணமடைந்த 14 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.411 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.கொரோனா குணங்குறிகளுடன் 97 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இலங்கையில் கொரோனா
 வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1094 ஆக உயர்ந்துள்ளது.இதில், குவைத்தில் இருந்து 
வந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருக்கும் 5பேர் இன்று கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 674 ஆக உயர்ந்துள்ளது.இன்று மாத்திரம் குணமடைந்த 14பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.407பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
READ MORE - நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கொரோனா தொற்று இலங்கையில் மேலும் அதிகரித்துள்ளது

சனி, 23 மே, 2020

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,078 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு அடையாளம்
 காணப்பட்டவர்களில் 409 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை
பெற்றுவருவதாக சுகாதார அமைச்சின்
 தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.மேலும், தொற்று உறுதியாகியவர்களில் 660 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கொரோனா தொற்று இலங்கையில் மேலும் அதிகரித்துள்ளது

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

வெள்ளி, 22 மே, 2020

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் தேசிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் சிலர் தவறான கருத்துக்களை முன்வைப்பது கண்டிக்கத்தக்கது
 என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற 
நிலையில் பாடசாலை மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர் சங்கடத்திற்குள்ளாகும் வகையில்
 எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.நாட்டில் கொரோனா
 அச்சம் முழுமையாக குறைவடைந்ததை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் வெளியான ஆறுதல் செய்தி

புதன், 20 மே, 2020

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் இல்லை என பொது சுகாதாரம் தொடர்பான பிரதி 
சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.20-05-20..இன்று காலை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு
 குறிப்பிட்டுள்ளார்.இலங்கை சமூகத்திற்குள் நோயாளிகள் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 20 நாட்களாக ஒரு நோயாளியேனும் சமூகத்திற்குள் இருந்து பதிவாகவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் வெளியான ஆறுதல் செய்தி

கொரோனாவை தொடர்ந்து யாழில் காத்திருக்கும் மற்றுமொரு பேராபத்தாம்

யாழ் குடாநாட்டில் வீடுகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமேயானால் வீட்டு உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண பிராந்திய தொற்றுநோயியலாளர் வைத்தியர் மோகனகுமார் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் டெங்கு நோய் தொடர்பாகவும் விழிப்பாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் 
கொரோனா மற்றும் டெங்கு நோய்கள் தொடர்பாக அக்கறையுடன் சிந்தித்து செயற்பட்டால் மட்டுமே, இந்த இரண்டு தொற்று நோய்களிலிருந்து வெற்றிகரமாக 
தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் எனவும் கேட்டுகொண்டார்.உங்கள் வீடுகளில் உட்பகுதி மற்றும் சுற்றாடல் பகுதிகளில் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் உள்ளனவா என்பதை பரிசோதனை செய்து அப்புறப்படுத்த நடவடிக்கை நீங்களாகவே மேற்கொள்ள வேண்டும்.தவறும் பட்சத்தில் பரிசோதனையின் போது உங்கள் வீடுகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் அடையாளப்படுத்தப்படுமேயானால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் 
தெரிவித்தார்.தற்பொழுது 
கொரோனா நோய் தொற்று அபாயம் தொடர்பில் நாம் அனைவரும் செயற்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக சுகாதாரத்துறையினர் மற்றும் ஏனைய துறையினர் தொடர்ச்சியாக முயற்சித்து வரும் 
நிலையில், தற்போது நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக டெங்கு பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் எமது பிரதேசத்தில் கூடுதலாக காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் டெங்கு தாக்கத்தினால் எமது 
மக்கள் பட்ட இன்னல்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே.எனவே மக்கள் கொரோனா 
மற்றும் டெங்கு நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார திணைக்களத்தினரால் வழங்கப்படும் நடைமுறையினை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கொரோனாவை தொடர்ந்து யாழில் காத்திருக்கும் மற்றுமொரு பேராபத்தாம்

மாத்தறையில் சர்வதேசப் புகழ்பெற்ற இலங்கை தம்பதிகளின் திருமணம்

செவ்வாய், 19 மே, 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கை சிறப்பான திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.மாத்தறை மாவட்டத்தின் மாலிம்பட என்னும் பிரதேசத்தை சேர்ந்த தர்ஷன மற்றும் பவனி ஆகிய இருவருக்குமே திருமணம் நடத்தப்பட்டுள்ளது.இந்த தம்பதிக்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும், நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருமணத்தை 
தாமதப்படுத்த நேரிட்டது. எனினும், திருமணத்தை பிற்போடுவற்கு பதிலாக வேறு வகையில் நடத்த திட்டமிட்டனர்.அதற்கமைய திருமண சம்பிரதாயங்களை மாத்திரம் செய்துவிட்டு திருமண வைபவத்திற்கான பணத்தில் பிரதேசத்தில் குறைந்த 
வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய இருவரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.  திருமண ஆடையுடனேயே உதவிகளை செய்த இந்த தம்பதியின் செயலை பிரபல சர்வதேச
 ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.இந்தச் சிறப்பான செயலை பார்த்த அவர்களது உறவினர்கள் பல்வேறு பரிசு பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக குறித்த ஊடகம் தகவல் 
வெளியிட்டுள்ளது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மாத்தறையில் சர்வதேசப் புகழ்பெற்ற இலங்கை தம்பதிகளின் திருமணம்