நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

வியாழன், 31 அக்டோபர், 2024

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2024 ஒக்டோபர் 31ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2024 ஒக்டோபர் 30ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு 
வெளியிடப்பட்டது.
இன்று (31) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாதகமான நிலைமை உருவாகி
 வருகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி 
எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள 
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

புதன், 30 அக்டோபர், 2024

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கான தங்களது பயண ஆலோசனைகளை புதுப்பித்திருந்த போதிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படவில்லை 
என உள்வரும் மற்றும் வெளிச் செல்வதற்கான பயண முகவர் சங்கத்தின் தலைவர் நளின் ஜயசுந்தர தெரிவித்தார்.
 எவ்வாறாயினும் எதிர்காலத்தில் முன்பதிவுகள் இரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கவலை 
வெளியிட்டார்.
 இந்த நிலையில் நாடு மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து
 தூதரகங்களுக்கு தெளிவுபடுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நளின் ஜயசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

வவுனியாவில் கடவுச்சீட்டு பெறுவதற்காக தொடர்ந்தும் இரவுபகலாக வரிசையில் நிற்கும் மக்கள்

செவ்வாய், 29 அக்டோபர், 2024

 நாட்டில்வவுனியா நகர்பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்கள
 காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற வரிசைகளில் நிற்கவேண்டிய நிலை நீடித்து வருகின்றது.
 வெறுமனே 25-20 நபர்களுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுக்காக நாள் ஒன்றுக்கு சுமார் 700 தொடக்கம் 1000 பேர் வரையில் இரவு பகலாக 
வரிசைகளில் நிற்க வேண்டிய அவல நிலை நீடித்து 
வருகின்றது அரசாங்கம் அண்மையில் கடவுச்சீட்டுக்களை
 பெறுவதில் உள்ள தாமதங்கள் நீக்கப்படும் என அறிவித்திருந்த போதிலும் இதுவரை எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை
 என்பதுடன், அசுத்தமான
 பகுதிகளில் மக்கள் தொடர்சியாக வரிசையில் நிற்கின்றார்கள்.
 குறிப்பாக அப்பகுதியில் உள்ள கால்வாயில் கழிவு நீர் ஓடாமல் தேங்கிநிற்பதுடன் துர்நாற்றம் வீசி வருகின்றது. 
அத்துடன் 
அப்பகுதியில் டெங்கு நுளம்பும் பெருகி காணப்படுகின்றது. ஆனாலும் இது தொடர்பில் வவுனியா நகர சபையோ குடிவரவு குடியகல்வு திணக்களமோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
வயோதிபர்கள் தொடக்கம் கர்பிணி தாய்மார்கள், சிறுகுழந்தைகளுடனான பெற்றோர்கள் என இரவு பகல் பாராது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வீதி முழுவதும் வரிசையில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி நிற்கின்றார்கள்.

 இந்த நிலையில் இன்றைய தினம் அப்பகுதிக்கு சென்ற தமிழரசு கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளரும் சட்டத்தரணியுமான டினேஸன் பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடி இருந்தார்.

 அதேநேரம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நாள் ஒன்றுக்கான சேவையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதுடன், பணம் பெற்று டோக்கன் வழங்கும் நபர்களையும் தடுக்க வேண்டும் என்பதுடன் அசுத்தமாக காணப்படும் இப்பகுதிகளை சுத்தம் செய்யவும் நகரசபை முன்வர வேண்டும் என கோரிக்கையையும் சட்டத்தரணி டினேஸன் முன்வைத்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது .

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வவுனியாவில் கடவுச்சீட்டு பெறுவதற்காக தொடர்ந்தும் இரவுபகலாக வரிசையில் நிற்கும் மக்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து இலங்கை வந்த நபர் கைது

திங்கள், 28 அக்டோபர், 2024

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன். 27-10-2024.அன்று  ஒருவர் கைது 
செய்யப்பட்டுள்ளார். 
 மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரிடம் இருந்து 5 கிலோ 26 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 
பொலிஸார் தெரிவித்தனர். 
 கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51 வயதுடைய கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 சந்தேக நபரை ஏற்றிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஆண் மற்றும் பெண் ஒருவரும் கைது 
செய்யப்பட்டுள்ளனர். 
 அவர்கள் வந்த காரை போலீசார் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து இலங்கை வந்த நபர் கைது

நாட்டில் கம்பஹா மாவட்டத்தில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பன்றிகளுக்கு முதல் தடவையாக பதிவாகியிருந்த இனப்பெருக்க மற்றும் சுவாச 
நோய் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என 
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
 வயலில் இருந்து எடுக்கப்பட்ட புதிய மாதிரிகளை ஆய்வு செய்ததில் பல மாதிரிகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றை
 வெளியிட்டுள்ளது.
 கடந்த காலங்களில் கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பன்றிகள் திடீரென இறக்கும் சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இது தொடர்பில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் விசேட விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. 
 பரிசோதனையின் படி, தெற்காசிய நாடுகளில் சமீபத்தில் பதிவாகிய ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பன்றிகளுக்கு தொடர்புடைய நோய் என்று
 தெரியவந்துள்ளது. 
 இலங்கையில் இந்நோய் பதிவாகியிருப்பது இதுவே முதல் தடவையாகும் மேலும் இந்த அதிதீவிர நோய்க்கிருமி நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை 
அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக
 கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் 
சுட்டிக்காட்டியுள்ளது. 
நாட்டின். இதன்படி, பிரதேச செயலகங்களுக்கு இடையில் பன்றி இறைச்சி கொண்டு செல்லப்பட்டால், பிரதேச சுகாதார அதிகாரிகளின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
 இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை அமைச்சு தெரிவித்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கம்பஹா மாவட்டத்தில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்

இலங்கையில் மின் கட்டணத்தை குறைக்க முன்மொழிவு

சனி, 26 அக்டோபர், 2024

நாட்டில் இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.
டிசம்பரில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம்
 தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. அதன்படி, டிசம்பரில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அனுப்பி 
வைத்துள்ளது.
மின்சார கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க முன்வந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து துறைகளுக்கும் இது 6 சதவீத அளவாக இருக்கும் எனத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான முன்மொழிவுகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், மேலும் திருத்தங்கள் தேவைப்படுமாயின், எதிர்வரும் திங்கட்கிழமை மின்சார சபைக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
அனைத்து முன்மொழிவுகளும் பொது கலந்தாய்வுக்கு அனுப்பி இறுதி முடிவு எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் 
ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் திரு.ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின் கட்டணங்கள் மார்ச் 4 ஆம் தேதி திருத்தப்பட்டன, அங்கு அனைத்து பிரிவுகளுக்கும் 21.9 சதவீதம் மின் கட்டணம் திருத்தப்பட்டது.
இரண்டாவது காலாண்டின் மின் திருத்தம் ஜூலை 16 அன்று மேற்கொள்ளப்பட்டது, அங்கு அனைத்து பிரிவுகளுக்கும் திருத்தப்பட்ட தொகை 22.5% ஆக இருந்தது.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இலங்கையில் மின் கட்டணத்தை குறைக்க முன்மொழிவு

இலங்கையில் அரிசி விலை பிரச்சினையை தீர்க்க உத்தரவு

வெள்ளி, 25 அக்டோபர், 2024

இலங்கையில் அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் குழுவை 
ஜனாதிபதி சந்தித்தார்.
அரிசி விலை மற்றும் அது தொடர்பான தற்போதைய நிலவரங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் அரிசி விலை பிரச்சினையை தீர்க்க உத்தரவு

நாட்டில் மன்னாரில் கடும் மழை பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வியாழன், 24 அக்டோபர், 2024

நாட்டில்மன்னார் மாவட்டத்தில் 23-10-2024. புதன்கிழமை அன்று இரவு முதல் 24-10-2024.இன்று வியாழன்காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில்
 மூழ்கியுள்ளன.
குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம், சௌதார், எழுத்தூர், மூர்வீதி உள்ளடங்கலாக பல கிராமங்களில் வெள்ளம் 
ஏற்பட்டுள்ளது.
எழுத்தூர் பகுதியில் உள்ள 30 குடும்பங்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாக முப்பது குடும்பங்களும் தற்போது எழுத்தூர் பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் பல
 பாகங்களிலும் தேங்கியுள்ள வெள்ள நீரை 
வெளியேற்ற 
மக்கள் கிராம நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தலைமையிலான
$ குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்று துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், மன்னார் மாவட்டத்தில் அனர்த்தம் சம்பந்தமாக உடனடியாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலகர்களின் கவனத்திற்கு
 கொண்டு வருமாறு 
வருமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் மன்னாரில் கடும் மழை பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நாட்டில் அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

புதன், 23 அக்டோபர், 2024

நாட்டில் விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் அரிசியைப் பெறுவதற்கும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசி வழங்குவதற்கும் முறையான வழிமுறை தேவை.
• சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளீடுகளின் விலையை குறைப்பது 
தொடர்பில் ஆராய்வு
– அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு
அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 
தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி 
சுட்டிக்காட்டினார்.
அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு 
தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் நுகர்வுப் பொருட்களின் தற்போதைய விலை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதுடன், மக்களின் பிரதான உணவாக பயன்படுத்தப்படும் அரிசியின் விலையை 
கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் 
கலந்துரையாடப்பட்டது.
நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அரிசியின் விலையை மாற்றுவது நியாயமல்ல எனவும் அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
விவசாயிகளிடம் இருந்து அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கும் முறையான பொறிமுறையொன்று அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அரிசியின் விலை செயற்கையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்டகாலமாக உத்தரவாத விலைகளை அமுல்படுத்தாததன் காரணமாகவே இந்த விலை ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளதாகவும்
 தெரிவித்தார்.
அரிசியை சேகரித்து வைக்கும் மூன்றாம் தரப்பினர் குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அவர்களை பதிவு செய்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு விவசாய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
இக்கலந்துரையாடலில், சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக உள்ளீட்டு விலைகளைக் குறைப்பது குறித்தும் கவனம்
 செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி டட்லி சிறிசேன, நிபுன கம்லத், மித்ரபால லங்கேஸ்வர, ஜயசிறி குணதிலக்க, மேனக கம்லத் உள்ளிட்ட வர்த்தகர்கள் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

இலங்கையில் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம் நேற்று முதல் வழமைக்கு

செவ்வாய், 22 அக்டோபர், 2024

நாட்டில் பெரும் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம்.21-10-2024 அன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என அமைச்சர் விஜித ஹேரத் 
தெரிவித்துள்ளார்.
 விண்ணப்பம் செய்யப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறும்.
 இதன்மூலம் கடவுச்சீட்டுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள 750,000 வெளிநாட்டு 
கடவுச்சீட்டுகள் விரைவில் தீர்ந்துவிடும். இதனால் மீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தடையின்றி 
கடவுச்சீட்டினை வழங்குவதற்கு தேவையான 
கொள்வனவு தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் 
குறிப்பிட்டுள்ளார்.
 இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அது தொடர்பான தீர்வு வெளியானவுடன் ஈ-பாஸ்போர்ட் வழக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - இலங்கையில் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம் நேற்று முதல் வழமைக்கு

தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் மீட்பு

திங்கள், 21 அக்டோபர், 2024

யாழ் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
 பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். 
 பொலிஸ் நிலையத்தில் காரின் இலக்க தகட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அது போலியானது என தெரிய வந்துள்ளது. அத்துடன் காரில் இருந்த ஆவணங்களும் போலியானவை என்பது 
தெரிய வந்துள்ளது.
 குற்றச்செயல்களுடன் தொடர்புடைய காராக இருக்காமல் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கார் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் மீட்பு

நாட்டில் பன்றிகள் மத்தியில் பரவும் வைரஸ் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

நாட்டில் வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் பன்றிகளின் இறைச்சியை உண்பதை தவிர்க்குமாறு அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 
 பன்றி இறைச்சியை உட்கொள்வதற்கு மக்கள் அச்சப்பட வேண்டாம் என சங்கத்தின் தலைவர் டொக்டர் சிசிர பியசிறி 
தெரிவித்துள்ளார். 
 இதேவேளை, தற்போதைய சூழ்நிலை காரணமாக இறைச்சிக்காக பன்றிகள் வளர்க்கப்படும் பண்ணைகளிலும் பன்றி இறைச்சி 
விற்பனை செய்யப்படும் இடங்களிலும் விசேட பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளதாக 
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்  உபுல் ரோஹன தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பன்றிகள் மத்தியில் பரவும் வைரஸ் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாளை வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளன

சனி, 19 அக்டோபர், 2024

நாளை 20.10.2024 இரவு அல்லது 21.10.2024 பகல் வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அண்மித்ததாக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. 
இது எதிர்வரும் 22.10.2024 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு திசையில் நகர்ந்து 25.10.2024 அன்று புயலாக மாறி இந்தியாவின் புவனேஸ்வர் க்கு அருகில் கரையைக் கடக்கும் என 
எதிர்பார்க்கப்படுகிறது. 
 இந்த புயலால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியாக எந்த பாதிப்பும் இல்லை ( தற்போதைய நிலையில்) இதன் காரணமாக இன்று மாலை முதல் எதிர்வரும் 26.10.2024 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல 
பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 
எதிர்வரும் 22.10.2024 முதல் 26.10.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. அதேவேளை
 எதிர்வரும் நவம்பர் மாதத்திலும் மூன்று தாழமுக்க நிகழ்வுகள் தோன்றும் வாய்ப்புள்ளன. 
அதேவேளை நவம்பர் மாதத்தின் 18 நாட்கள் மழை நாட்களாக அமையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதனால் வரும் நவம்பரில் அதிக மழை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. என்பது  குறிப்பிடத்தக்கது 


READ MORE - நாளை வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளன

நாட்டில் இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு

வெள்ளி, 18 அக்டோபர், 2024

நாட்டில் அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பு ஒன்றை 
வெளியிட்டுள்ளது.
அண்மைக்காலத்தில் வெளியான பல செய்திளில், எரிபொருள் என்ற வார்த்தையின் தவறான விளக்கத்தை தெளிவுபடுத்தவே இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக மின்சார சபை 
சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மின்சார சபை மூன்று வகையான பெற்றோலிய எரிபொருளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை கடந்த நிர்வாகத்தின் கீழும் கூட மின் உற்பத்திக்கான போட்டி ஏலத்தின் மூலம் டீசலை கொள்வனவு 
செய்யவில்லை.
மின் உற்பத்திக்கு திறம்பட டீசல் வாங்குவதற்கு எதிராக புதிய நிர்வாகம் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் அறிக்கையில் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான வரி அதிகரிப்பு

வியாழன், 17 அக்டோபர், 2024

நாட்டில்  இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்க நடவடிக்கை 
எடுத்துள்ளார்.
இந்த புதிய சிறப்பு வணிக வரி அக்டோபர் 14 முதல் டிசம்பர் 31 வரை 
அமலுக்கு வரும்.
இதன்படி, ஒரு கிலோகிராம் முழு மற்றும் துருவிய மைசூர் பருப்புக்கு 25 காசுகளும், முழு மற்றும் துருவிய மஞ்சள் பருப்புக்கு 25 காசுகளும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
கானாங்கெளுத்தி மற்றும் அதற்குப் பதிலாக ஒரு கிலோவிற்கு 302 ரூபா விசேட சரக்கு வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
எலும்பு நீக்கப்பட்ட மீன் மற்றும் பிற மீன் இறைச்சியைத் தவிர, புதிய அல்லது உறைந்த மீன்களுக்கு ஒரு கிலோவிற்கு 10% அல்லது 400ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான வரி அதிகரிப்பு

நாட்டில் கடல் சீற்றம் தொடர்பில் மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு

புதன், 16 அக்டோபர், 2024

கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிவிப்பை
 வெளியிட்டுள்ளது.
 இன்று (16) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17) காலை 8:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
 மத்திய வங்கக் கடலில் நேற்று (15) மதியம் 12:00 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை 
ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா கடற்கரையை நாளை
 நெருங்கும். இதன் விளைவாக, கடல் பகுதிகளில் பலமான காற்று வீசுவதுடன், கனமழை பெய்யும் மற்றும் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை
 ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் 2.5-3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுகின்றது. 
இதன்காரணமாக 
சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் அலைகள் நிலத்தை 
வந்தடையும் வாய்ப்பும் உள்ளது.
 வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் கடல் சீற்றம் தொடர்பில் மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு

நாட்டில் மழை நிலைமை படிப்படியாக குறைவடையும் : வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

செவ்வாய், 15 அக்டோபர், 2024

நாட்டில் வளிமண்டலவியல் திணைக்களம் அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் சமீபத்திய வானிலை முன்னறிவிப்பை
 வெளியிட்டுள்ளது. 
 இன்று (15.10) மாலை 04:00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கடும் மழை 
நிலைமை இன்று முதல் படிப்படியாக குறையும் என
 நம்பப்படுகிறது. 
வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் மி.மீ. அதிகபட்சம் 50க்கு
 மேல் இருக்கலாம்.
 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல மழைக்காலங்கள் காணப்படும். நாட்டின்மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 
 இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை
 குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது-

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மழை நிலைமை படிப்படியாக குறைவடையும் : வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

சீரற்ற காலநிலையால் கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

திங்கள், 14 அக்டோபர், 2024

சீரற்ற காலநிலையால் கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு 
தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பதில் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 
 இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி செயலாளர் அல்லது மாகாண கல்விப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு 
அறிவுறுத்தியுள்ளது.
 தற்போது நிலவும் காலநிலை காரணமாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது


 

READ MORE - சீரற்ற காலநிலையால் கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில்

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

 

நாட்டில் மோசமான வானிலை காரணமாக அவசரநிலை ஏற்பட்டால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானம் மற்றும் தொடர்புடைய படையினரை நிலைநிறுத்த விமானப்படை
 நடவடிக்கை எடுத்துள்ளது. 
 இதன்படி, வானிலிருந்து ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்காக விமானப்படையின் கண்காணிப்பு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அனர்த்தம் ஏற்பட்டால் மக்களுக்கு
 நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக மூன்று ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 
 ரத்மலானை விமானப்படை தளத்தில் 'பெல்-412' ரக ஹெலிகொப்டர் ஒன்றும், ஹிகுராக்கொட விமானப்படை தளம் மற்றும் பலாலி விமானப்படை தளம் ஆகியவற்றில் இரண்டு 'பெல்-212' ரக ஹெலிகொப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. 
 மீட்புப் பணிகளுக்காக சிறப்புப் பயிற்சி பெற்ற விமானப்படை படைப்பிரிவின் சிறப்புப் படை வீரர்களும் அந்த முகாம்களில் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில்

நாட்டில் நூறு கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்று வீசும் என மக்களுக்கு எச்சரிக்கை

சனி, 12 அக்டோபர், 2024

நாட்டில் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
அறிவித்துள்ளது. 
 கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2.5 - 3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 நிலத்தை நோக்கி வரும் அலைகள் அதிகமாக இல்லை என்றும் கூறுகிறது. எவ்வாறாயினும், மறு அறிவித்தல் வரை இந்த
 கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் நூறு கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்று வீசும் என மக்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கத்தால் வடக்கு, கிழக்கில் கன மழைக்கு வாய்ப்பு

வெள்ளி, 11 அக்டோபர், 2024

நாட்டில் எதிர்வரும் 13ம் திகதி தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது 15.10.2024 அன்று
 வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து 
அதன் பின் 18.10.2024 அல்லது 19.10.2024 அளவில் தமிழ் நாட்டின் வடக்கு பகுதிக்கும் ஆந்திராவின் தெற்கு பகுதிக்கும் இடையில் ஆழ்ந்த 
காற்றழுத்த தாழ்வு 
மண்டலமாக கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது
 என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜாஅறிவித்துள்ளார்.
இத்தாழமுக்கத்தோடு இவ்வாண்டுக்கான வடகீழ் பருவக்காற்றின்
 உடைவும் ஏற்படும்.
எனவே எதிர்வரும் 13.10.2024 முதல் 20.10.2014 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இத்தாழமுக்கத்தோடு இணைந்து அதிக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் இவ்வாண்டுக்கான பெரும் போக நெற் செய்கைக்கான 
விதைப்பை மேற்கொள்பவர்கள் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொள்வது சிறந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கத்தால் வடக்கு, கிழக்கில் கன மழைக்கு வாய்ப்பு

நாட்டில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வியாழன், 10 அக்டோபர், 2024

நாட்டில் ஹம்பாந்தோட்டை உட்பட பேருவளை முதல் காலி மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மணிக்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், அலைகளின் உயரம் 2.5 மீற்றர் வரையில் வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 எதிர்பார்க்கப்படும் கரடுமுரடான வானிலையின் வெளிச்சத்தில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடலில் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகின்றனர். 
 இந்த நிலைமைகள் கணிசமான ஆபத்துக்களை ஏற்படுத்துவதால், அடுத்த 24 மணித்தியாலங்களில் கடற்படையினர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் சந்தையில் விற்பனை செய்யப்படும் போலியான பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சரிக்கை

புதன், 9 அக்டோபர், 2024

இந்நாட்களில் நாட்டின் பிரதான பூச்சிக்கொல்லி மருந்துப் பிராண்டுகளாகக் காட்டிக் கொண்டு போலியான விவசாய  பொருட்களை சந்தையில் விற்பனை செய்யும் கொள்ளையொன்று நாடளாவிய ரீதியில் 
இயங்கி வருகின்றது. 
 இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலி விவசாய உள்ளீடுகள் தம்புத்தேகம பகுதியில் உள்ள பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலக சோதனை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை போன்று போலி பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரித்து சந்தையில் விற்பனை செய்யும் மோசடி  தற்போது 
நடந்து வருகிறது. 
இந்நிலையில் தம்புத்தேகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடையொன்றில் விற்பனைக்காக கத்தரிக்காய் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் 960 விவசாய உள்ளீடுகள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
 இலங்கையில் உள்ள ஒரு முக்கிய விவசாய உள்ளீட்டு நிறுவனம் ஒன்றின் வர்த்தக நாமத்தைப் பயன்படுத்தி சந்தைக்கு வெளியிடப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட முகவரகத்தின் தலையீட்டின் பேரில், அவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றின் தயாரிப்புகள் அல்ல என 
உறுதி செய்யப்பட்டது.
 பின்னர் 960 போலி விவசாய இடுபொருட்கள் பாக்கெட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டு கடை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
எனவே இவ்வாறான மோசடிகள் தொடர்பில் விவசாயிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் சந்தையில் விற்பனை செய்யப்படும் போலியான பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சரிக்கை

நாட்டில் நெல் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்

செவ்வாய், 8 அக்டோபர், 2024

நாட்டில் நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் எதிர்வரும் திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் இருந்து
 ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்தப் பருவம் ஆரம்பிக்கவுள்ளது. இந்த உர மானியத்தை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்குள் அம்பாறை மாவட்ட மக்களுக்கு 
வழங்க உள்ளோம்.
 அதன் பின்னர் பொலன்னறுவை, அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் மகாவலி பிரதேச விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் நெல் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்

பல மாவட்டங்களுக்கு இன்று நாட்டில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

திங்கள், 7 அக்டோபர், 2024

நாட்டில்  பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
 இந்த எச்சரிக்கை.07-10-2024. இன்று  காலை 9.30 மணி முதல் நாளை இரவு 9.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த அமைப்பு 
தெரிவித்துள்ளது.
இதன்படி, நாகொட, எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் வல்லவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அம்பர் எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது. 
 அத்துடன், காலி மாவட்டத்தின் நயாகம, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு “மஞ்சள் நிறம்” குறித்து
 அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - பல மாவட்டங்களுக்கு இன்று நாட்டில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் எரிபொருள் விலையில் மீண்டும் திருத்தம்

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

நாட்டில் கடந்த எரிபொருள் விலை திருத்தமானது விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் பொய்யொன்றை கூறியதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
 நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே காஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.
 இலங்கை பெட்ரோலிய சட்டமூலக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், விலைச் சூத்திரத்தின் பிரகாரம் உரிய விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனை உறுதிப்படுத்தியதாகவும் காஞ்சன விஜேசேகர 
தெரிவித்துள்ளார்.
 2022-2023ல் இல்லாத வகையில், நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதால், போட்டி விலையில் சப்ளையர்களிடம் இருந்து எரிபொருளை பெறுவது தற்போது சாத்தியமாகியுள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
 அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் வரை எரிபொருள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பலன்களின் அடிப்படையில் அடுத்த சில மாதங்களில் எண்ணெய் விலையை 15 முதல் 20 வீதம் வரை குறைக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் எரிபொருள் விலையில் மீண்டும் திருத்தம்