கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் எவ்வித அறிகுறிகளும் அற்ற 9 கொரோனா நோயாளிகள். 09-09-2020..நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு
மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் மூலமே கொரோனா தொற்றியமை தெரியவந்துள்ளதாக புனர்வாழ்வு நிலைய ஆணையாளர் தர்ஷன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.இந்த
தொற்றாளர் வெலிகந்த வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களுடன் நெருங்கி செயற்பட்ட 12 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
09-09-2020.நேற்றைய தொள்ளார்களுக்கு
வெளி நபர் தொடர்புகள் ஒன்றும் இல்லை என குறிப்பிபடப்படுகின்றது.கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரையில் 649 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களில் 634 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக