முக்கியமான அறிவிப்பு யாழ்- கொழும்பு ரயில் பயணிகளுக்கு

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

கொழும்பு, கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை டிசம்பர் (31.12.19) ஆம் திகதி முதல் நிறுத்த ரயில்வே துறை தீர்மானித்துள்ளது.அதன்படி, 87 மற்றும் 88 ரயில்கள் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படாது. பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக
 இரண்டு ரயில்கள் கொழும்பு, கோட்டை மற்றும் தலைமன்னார் இடையே இயக்கப்படும்.
ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கும் இந்த இரண்டு ரயில்கள் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:25 மணிக்கு தலைமன்னாரை சென்றடையும்.இந்த ரயில் தனது பயணத்தை மீண்டும் தலைமன்னாரில் இருந்து இரவு 8:25 மணிக்கு ஆரம்பித்து காலை 4:40 மணிக்கு கொழும்பு, கோட்டையை 
வந்தடையும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - முக்கியமான அறிவிப்பு யாழ்- கொழும்பு ரயில் பயணிகளுக்கு

இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் படுகாயம் வேப்பங்குள கோர விபத்தில்

வெள்ளி, 13 டிசம்பர், 2019

வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் 12.12. 19.இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு இராணுவத்தினர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
 பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புளியங்குளம் பகுதியிலிருந்து வவுனியா திசை நோக்கிச் சென்ற இராணுவ வாகனம் ஒன்று ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் வைத்து மோட்டார் வாகனம் ஒன்றில் மோதியதிலேயே 
விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் நான்கு இராணுவத்தினரும், மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் 
மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் படுகாயம் வேப்பங்குள கோர விபத்தில்

நாட்டில் இறக்குமதியாகும் கோதுமை மாவின் வரி குறைப்பு

ஒரு கிலோகிராம் அரிசியின் சில்லறை விலையை 98.00 ரூபாவாக வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.மூன்றுமாத காலப் பகுதிக்குத் தட்டுப்பாடின்றி சந்தைக்கு
 அரிசியை விநியோகிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.சந்தையில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறைப்பதற்கு ஏதுவாக, இறக்குமதி 
செய்யப்படும் கோதுமை மாவிற்கான வரியை சிறியளவில் குறைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே 
இதனைக் கூறியுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - நாட்டில் இறக்குமதியாகும் கோதுமை மாவின் வரி குறைப்பு

தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள். குவியும் வாழ்த்துக்கள்

வியாழன், 12 டிசம்பர், 2019

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது.தெற்காசிய விளையாட்டில் கலந்து கொண்ட இலங்கை குழாம் முதன்முறையாக பெருமளவு 
பதக்கங்களை 
வெற்றி பெற்ற நிலையில், நேற்று நாடு திரும்பியிருந்தது. தெற்காசிய நாடுகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இலங்கை மூன்றாமிடத்தை பெற்றிருந்தது.40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடகங்களாக 251 பதக்கங்களை இலங்கை அணி பெற்றுக் கொண்டுள்ளது. இதுவரை நடைபெற்ற சர்வதேச போட்டியொன்றில் இலங்கை பெற்ற அதிகூடிய பதக்கங்கள் இதுவாகும்.
2001ஆம் நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை குழாம் 178 பதக்கங்களை பெற்றமையே அதிகூடியதாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டு புதிய சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் அமஷா டி சில்வா, நதீஷா ராமநாயக்க, துலஞ்சலி ரணசிங்க ஆகிய வீராங்கனை அதிகூடிய தங்க பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.இலங்கைக்கு 
பெருமை தேடித்தந்த வீர, வீராங்கனைகளை பாராட்டுவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் துமிந்த சில்வா நேபாளம் சென்றிருந்தார். வெற்றிக்குழுவுடன் அமைச்சரும் நாடு திரும்பியிருந்தார். 
ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் இலங்கை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. நேபாளம் 51 தங்க பதக்கங்களை பெற்ற நிலையில் இரண்டாமிடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 172 தங்க பதக்கங்கள், 93 வெள்ளிப் பதக்கங்கள் 45 வெண்கல பதக்கங்கள் 
அடங்களாக மொத்தமாக 310 பதக்கங்களை பெற்றுள்ளது. 51 தங்க பதக்கங்கள், 59 வெள்ளிப் பதக்கங்கள், 94 வெண்கல பதக்கங்கள் அடங்களாக 204 பதக்கங்களுடன் நேபாளம் பதக்க பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் பதக்க பட்டியலில் அடுத்த அடுத்த இடங்களில் 
உள்ளமை குறிப்பிடத்தக்கது
READ MORE - தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள். குவியும் வாழ்த்துக்கள்

கோடிக்கணக்கான வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி

எதிர் வரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.iOS8 அல்லது 
அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான அன்ரோய்ட் மென்பொருளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வட்ஸ்அப் கிடைக்காது. அதே போன்று விண்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் 
அப்பை பயன்படுத்த முடியாது
இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வட்ஸ்அப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை 
புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் வட்ஸ்அப் செயலி முடங்கி உள்ளதாக 
தகவல் வெளியாகி உள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கோடிக்கணக்கான வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி

பல்கலைக்கழகத்திற்கு செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பல்கலைகழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக பயன்படுத்தப்படும் வெட்டுப்புள்ளி முறையில் புதிய நடைமுறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அந்தவகையில் மாவட்ட ரீதியிலான முறைக்கு பதிலாக, பாடசாலை ரீதியில் வெட்டுப்புள்ளி பயன்படுத்தப்பட உள்ளதாக
 தெரியவருகின்றது.
தற்போது மாகாண, மாவட்ட மற்றும் பாடசாலை ரீதியில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வியினை வழங்குவதில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுவதாக 
தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாகவே இந்த புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்துவதற்காக கல்விமான்கள் உள்ளடங்கிய குழு ஒன்றினை நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை 
அனுமதி வழங்கியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - பல்கலைக்கழகத்திற்கு செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

திருக்கார்த்திகை வீட்டில் ஏன் 27 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும்

புதன், 11 டிசம்பர், 2019

இன்று திருக்கார்த்திகை தினம். அன்று கோவில் மட்டும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவோம். வீடுகளில் ஏற்றும்போது எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும், எந்தெந்த இடத்தில் ஏற்ற வேண்டும்
 என்பது குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.திருக்கார்த்திகை 
நாளைத் தான் நாம் கார்த்திகை தீபமாகக் காலங்காலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.இந்த திருக்கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேருகின்ற நாள் தான் திருக்கார்த்திகை. அந்த நாளில் காலங்காலமாக மக்கள் தங்களுடைய வீடுகளிலும் கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, மிக வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.
வீட்டில் ஏற்றப்படும் 27 தீபங்களில் முதல் 4 தீபங்களை மட்டும் வீட்டினுடைய முற்றப் பகுதிகளில் ஏற்றினால் போதும். இப்போதெல்லாம் எந்த வீடுகளிலும் குறிப்பாக நகரங்களில் உள்ள அடுக்கு மாடி வீடுகளில் முற்றம் என்பதே கிடையாது. அதனால் ஹாலில் நான்கு 
விளக்குகளை ஏற்றுங்கள்.
சமையலறை:சமையல் அறையில் ஈசானி மூலையில் ஒரே ஒரு விளக்கு மட்டும் ஏற்றி வையுங்கள்.வீட்டில் முற்றத்துக்கும் வீட்டின் மற்ற அறைகளுக்கும் இடையே இருக்கிற நடைப்பகுதியில், இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும்.
வீட்டுக்குள்ளும் வீட்டின் முன் புறத்திலும் விளக்கேற்றும் நாம் வீட்டின் பின்புறத்தைக் கண்டு கொள்ளவே மாட்டோம். ஆனால் திருக்கார்த்திகையில் கட்டாயம் வீட்டின் பின்கட்டுப் பகுதியில் 
விளக்குகள் ஏற்ற வேண்டும். அதிலும் 4 விளக்குகள் ஏற்ற வேண்டும்.வீடுகளில் சிறியதாக குழி போன்று வாசலுக்கு இரண்டு புறமும் மாடங்கள் அமைத்திருப்பார்கள். அப்படி மாடங்கள் இருந்தால் இதில் இரண்டு விளக்குகள் ஏற்றி வையுங்கள். இல்லையென்றால் அப்படியே அந்த வாசல் பகுதிக்கு நேராக இரண்டு புறங்களிலும் இரண்டு விளக்குகளை 
ஏற்றுங்கள்.
நிலைப்படி:வீட்டின் பிரதான கதவு உள்ள பகுதி தான் இது. அந்த வாயிலின் நிலைப்படியில் இரண்டு புறமும் விளக்குகள் ஒவ்வொன்றாக வையுங்கள்.கடவுள் படங்கள்கடவுளின் படங்கள் வைத்திருக்கும் இடங்களில் இரண்டு புறமும் இரண்டு விளக்குகளை
 ஏற்றி வையுங்கள்.
வீட்டுக்கு வெளியே:வீட்டுக்கு வெளிப்புறத்தில் தீபாவளி அன்று ஏற்றுவது போல் இன்றும் ஒரேயொரு எமதீபம்
 ஏற்றி வையுங்கள்.
கோலத்தில்:திருக்கார்த்திகை அன்று கட்டாயம் வீட்டின் முன் மாக்கோலம் போடுவது வழக்கம். அந்த கோலத்தில் 5 விளக்குகள் ஏற்றுங்கள்.கிராமங்களில் திண்ணை இல்லாத வீடுகளையே பார்க்க முடியாது. அந்த திண்ணைப் பகுதியில் 4 தீபங்கள் ஏற்றி 
வைக்க வேண்டும்.
ஏன் 27 ? இப்படி மொத்தம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. அது என்ன 27 என்று நீங்கள் கேட்கலாம். 27 என்பது 27 நட்சத்திரங்களைக் குறிக்கும்.

READ MORE - திருக்கார்த்திகை வீட்டில் ஏன் 27 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும்

பரீட்சைகள் திணைக்கத்தின் முக்கிய எச்சரிக்கை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு

செவ்வாய், 10 டிசம்பர், 2019

க.பொ.தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் மாணவர்கள் பரீட்சைகள் சட்ட திட்டங்களை மதிக்காது, தகாத முறையில் நடந்து கொள்ளல் மற்றும் ஏனைய மாணவர்களுக்கு
 இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.குறித்த
 நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களின் பரீட்சை முடிவுகளும் இரத்துச் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் 12ஆம் திகதி சாதாரண தர பரீட்சைகள் நிறைவடையவுள்ள நிலையில், பரீட்சை 
நிலைய கண்காணிப்பாளர்களுக்கு இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதேபோல, நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாிகளுக்கு இந்த விடயம் குறித்து அறிவிக்கபட்துள்ளது .எனவே, பரீட்சை நிலையங்கள் அனைத்திலும் பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

READ MORE - பரீட்சைகள் திணைக்கத்தின் முக்கிய எச்சரிக்கை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு

மாணவர்களின் சீருடைத் துணி விநியோகம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

வெள்ளி, 6 டிசம்பர், 2019

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் வழங்கும் செயன்முறையை தொடர்ந்தும் செயற்படுத்தும் கல்வி அமைச்சின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி 2020 ஆம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை பெற்றுக்கொள்வதற்கான 
வவுச்சர்களை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இன்று (வியாழக்கிழமை) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.2020 ஆம் ஆண்டில் புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தின் தொடக்கத்தில் அனைத்து 
மாணவர்களுக்கும் பாடசாலை 
சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும முன்னர்குறிப்பிட்டிருந்தார்.சீருடைக்கு பதிலாக வவுச்சர்களை வழங்க கடந்த அரசாங்கம் மேற்கொண்ட 
நடவடிக்கை காரணமாக அரசாங்கத்திடம் அதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறியிருந்தமை
 குறிப்பிடத்தக்கது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மாணவர்களின் சீருடைத் துணி விநியோகம் தொடர்பில் முக்கிய தீர்மானம்