நாட்டில் லாஃப் எரிவாயு பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானத்தை எடுக்கும்

சனி, 30 நவம்பர், 2024

நாட்டில் லாஃப்  (LP) எரிவாயுவை இறக்குமதி செய்து நுகர்வோருக்கு வழங்க  தவறினால் அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க 
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், எங்கள் நாட்டில் லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு எல்பி எரிவாயு 
நிறுவனங்கள் உள்ளன. 
லிட்ரோ எரிவாயுவிற்கு தற்போது தட்டுப்பாடு இல்லை. லாஃப் கேஸ் பற்றாக்குறைக்கான காரணங்களை விளக்க வேண்டும். லாஃப் கேஸ் எரிவாயுவை இறக்குமதி செய்து வழங்குவதில் தலையிடத் தவறினால், அரசாங்கம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். 
லிட்ரோ எரிவாயுவில் ஏராளமான கையிருப்பு உள்ளது. 
எரிவாயு நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண காஸ் சிலிண்டர்களை மாற்ற வேண்டும் என்றால், அது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
 என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் லாஃப் எரிவாயு பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானத்தை எடுக்கும்

நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு

வெள்ளி, 29 நவம்பர், 2024

நாட்டில் எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு வழங்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார்.
 தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ரீ.பி. சரத் இதனை தெரிவித்துள்ளார். வீடுகள் இல்லாத காரணத்தினால் திருமணம் செய்வது காலம் தாழ்த்தப்படுவதாகவும், அவ்வாறான
 ஓர் நிலைமை 
இனி நீடிப்பதற்கு இமளிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 24 முதல் 30 வயதுக்குள் திருமண பந்தத்தில் இணைந்து 
கொள்ள வேண்டும் எனவும் அதுவே சரியான வயது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 இந்த வயதில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வோருக்கு வீடு ஒன்றை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் நிலையை எட்டும் வரையில் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு

நாட்டில் உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

வியாழன், 28 நவம்பர், 2024

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் 
தீர்மானித்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை டிசம்பர் 4 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாள் உயர்தரப் பாடசாலையை நடத்துவதில்லை 
என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் மூன்று நாட்களுக்கு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

நாட்டில் இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்

புதன், 27 நவம்பர், 2024

நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்தது வெள்ளக்காடானது.
 மக்களின் குடியிருப்புக்குள்ளும் வெள்ளம் புகுந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் செல்கின்றனர். கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு 
செல்கின்றனர்.
வடக்கின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவான வெள்ள நீர் வெளிவேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்கின்றது.
மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்தது வெள்ளக்காடானது. மக்களின் குடியிருப்புக்குள்ளும் வெள்ளம் புகுந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் செல்கின்றனர்.
கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர். வடக்கின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும்
 திறக்கப்பட்டுள்ளது. 
இதனால் பெருமளவான வெள்ள நீர் வெளிவேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்கின்றது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாட்டில் இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்

நாட்டில் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உள்ள திகதி மாற்றி விற்பனை செய்யவிருந்த அரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

செவ்வாய், 26 நவம்பர், 2024

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ​​உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி 
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தித் திகதி மற்றும் அது தொடர்பான தகவல்களை மாற்றியமைத்து, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிட்டிருந்ததாக வைக்கப்பட்டிருந்ததாக 
தெரியவருகிறது.
நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் 25-11-2024.அன்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு, இந்தியாவில் பொதி செய்யப்பட்ட 25 கிலோ அரிசி மூடைகளில் உற்பத்தியாளர் குறிப்பிட்டுள்ள உற்பத்தி திகதி ஜனவரி 2022 என பொறிக்கப்பட்டுள்ளதோடு, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கையில் இருந்து அரிசியை இறக்குமதி செய்த வர்த்தகர், பொதி தயாரிக்கும் திகதியை ஜூன் 2024 என மாற்றி அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், அரிசிப் பொதிகளில் அச்சிடப்பட்ட விலை மற்றும் நிறைகள் என்பன மாற்றப்பட்டு கொழும்பு 14 பகுதியிலுள்ள 
களஞ்சியசாலையில்
 இரகசியமாக வைக்கப்பட்டு எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
 தெரியவந்துள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, ​​உற்பத்தித் திகதி மாற்றப்பட்ட 25 கிலோகிராம் அரிசி பொதிகள் 717 நுகர்வோர் விவகார
 அதிகாரசபையினால் கைப்பற்றப்பட்டுள்ளன. விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், பொதியிடல் குறித்த தகவல்கள் ஏதேனும் மாற்றப்பட்டுள்ளதா 
என ஆராய்ந்து, அவ்வாறான பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்களை 1977 ஆம் என்ற
 இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உள்ள திகதி மாற்றி விற்பனை செய்யவிருந்த அரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

நாட்டில் சூறாவளி வதந்திகளை நம்ப வேண்டாம்: அனர்த்த முகாமைத்துவ நிலையம்

திங்கள், 25 நவம்பர், 2024

நாட்டில் சூறாவளி உருவாகி.25-11-2024. இன்று அதிகாலை 2.00 க்கு கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை
 நம்ப வேண்டாம் என அம்பாறை மாவட்ட அனர்த்த 
முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார்.
 சூறாவளி ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக 
அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன்
 அறியத்தருகின்றோம்.
 சூறாவளி .25-11-2024.உருவாகி இன்று அதிகாலை 2.00 க்கு கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
மேலும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்பு 
காணப்படுவதனால்
 அனைவரும் வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்தங்களை மேற்க்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என 
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் சூறாவளி வதந்திகளை நம்ப வேண்டாம்: அனர்த்த முகாமைத்துவ நிலையம்

நாட்டில் சீரற்ற வானிலை : அவசரநிலை ஏற்பட்டால் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்

ஞாயிறு, 24 நவம்பர், 2024

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அவசர நிலை ஏற்பட்டால் உயர்தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்களை அழைத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது. 
மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
எந்தவொரு அவசரநிலையிலும் பரீட்சைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டால் 24 மணிநேர தொலைபேசி இலக்கமான 0412 234 134 க்கு அழைத்து தேவையான உதவிகளைப் பெற ஏற்பாடு செய்யுமாறு அவர் மேலும் கூறினார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சீரற்ற வானிலை : அவசரநிலை ஏற்பட்டால் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்