அமெரிக்காவில் 2500 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சாக்லேட் பெட்டி உருவாக்கி கின்னஸ் சாதனை

வெள்ளி, 7 ஜூலை, 2023

அமெரிக்காவில் ரஸ்ஸல் ஸ்டோவர் என்கிற பிராண்ட் நிறுவனம் ஒன்று 2500 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சாக்கெட் பெட்டியை தயாரித்துள்ளது,
இந்த அற்புதமான சாக்லேட் படைப்பு ஒவ்வொன்றும் வாய் ஊறும் ஒன்பது வகை சாக்லேட் சுவைகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. சாக்லேட் பிரியர்களின் கற்பனையாக இருக்கக்கூடிய ஒரு பொருளை சாக்லேட் தயாரிப்பாளர் ஒருவர் உலக சாதனையாக படைத்துள்ளார்.
கின்னஸ் உலக சாதனைபடி, 2,547.50 கிலோ எடையுள்ள பிரமாண்டமான சாக்லேட் நிரப்பப்பட்ட பெட்டியுடன், ரஸ்ஸல் ஸ்டோவர் (அமெரிக்கா) என்ற நிறுவனம் சாதனையை முறியடித்தது. ஒப்பிடுகையில், இது வயதான கருப்பு காண்டாமிருகத்தின் எடையைப் போன்றது. 
விலங்குகள் பொதுவாக 1,400 மற்றும் 2,800 கிலோ (3,086 மற்றும் 6,173 பவுண்டுகள்) எடையுள்ளதாக இருக்கும். சாக்லேட் நிரப்பப்பட்ட பெட்டியானது 9.27 மீ x 4.69 மீ x 0.47 மீ (30.43 அடி x 15.41 அடி x 1.55 அடி) அளவிடப்பட்டதாகவும், கடந்த ஏப்ரல் 17ம் தேதி அமெரிக்காவின் மிசோரி, கன்சாஸ் நகரில் இது காட்சிபடுத்தப்பட்டதாகவும் உலக சாதனை பராமரிப்பு அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த சாக்லேட் பெட்டிக்குள் கேரமல், தேங்காய் கொத்து, பழம் மற்றும் நட்ஸ் கேரமல், வேர்க்கடலை கொத்து, பெக்கன் டிலைட், ராஸ்பெர்ரி கிரீம், ஸ்ட்ராபெரி கிரீம், டோஃபி மற்றும் ட்ரஃபுல், அத்துடன் சாக்லேட்-மூடப்பட்ட பாதாம் ஆகியவற்றின் பெரும் பகுதியும் ஒன்பது வெவ்வேறு சாக்லேட் சுவைகளால் நிரப்பப்பட்டது.
சாதனையை முறியடிக்கத் தேவையான குறைந்தபட்ச எடையை அடைய, ரஸ்ஸல் ஸ்டோவர் மொத்தம் 205 ராட்சத சாக்லேட் துண்டுகளைப் பயன்படுத்தினார். அவை ரஸ்ஸல் ஸ்டோவர்யின் ஆலைகளில் வடிவமைக்கப்பட்டன. 
 மேலும் இந்த முயற்சியின் போது ஒவ்வொரு சாக்லேட் துண்டும் எடைபோடப்பட்டது. மேலும், சிறிய துண்டுகள் சுமார் 4.53 கிலோ எடை கொண்டது. அதே வேளையில், சில பெரிய சாக்லேட்கள் 16 கிலோவிற்கும் (35 பவுண்டுகள்) எட்டின..என்பதும் குறிப்பிடத்தக்கது

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - அமெரிக்காவில் 2500 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சாக்லேட் பெட்டி உருவாக்கி கின்னஸ் சாதனை

நாட்டில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் விலையைக் குறைக்கிறது

வியாழன், 6 ஜூலை, 2023

நாட்டில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் (Laughfs) எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, வியாழக்கிழமை (06) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
புதிய விலைக் குறைப்பின்படி , 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி புதிய விலை 3,690 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 1,476 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
..என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் விலையைக் குறைக்கிறது

விரைவில் இலங்கை உள்ளுர் சந்தையில் தேய்காய் ஐஸ்கிரீம்

புதன், 5 ஜூலை, 2023

நாட்டில் உள்ளுர் சந்தைக்கான தேங்காய் ஐஸ்கிரீமை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்னை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வுக்கு பிறகு தேங்காய் ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தென்னைச் செய்கையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி தேங்காய் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாகவும், 
பசுவின் பால் 
அல்லது பிற பால் பொருட்களைப் பயன்படுத்தாமல் நூறு சதவிகிதம் தேங்காய் அடிப்படையிலான ஆரோக்கியமான இனிப்புப் பொருளாக இந்த தயாரிப்பு தயாரிக்கப்படலாம் என்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - விரைவில் இலங்கை உள்ளுர் சந்தையில் தேய்காய் ஐஸ்கிரீம்

நாட்டில் வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைப்பு குறித்து புதிய அறிவிப்பு

செவ்வாய், 4 ஜூலை, 2023

இலங்கையில் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்
 தெரிவித்துள்ளது.
இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்ததாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  
இதற்கு முன்னர் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை.
இந்நிலையில், மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டதனால், வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை குறைக்க தேவையில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைப்பு குறித்து புதிய அறிவிப்பு

நாட்டில் மலையகத்தில் மரக்கறி விலைகள் திடீர் அதிகரிப்பு விலை விபரங்கள்

திங்கள், 3 ஜூலை, 2023


மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நி
லையில், தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக மரக்கறிகள் அழுகிப்போகும் நிலை உள்ளதாக அங்குள்ள விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி காணப்படும் நிலையில், இந்த வருடத்தில் இவ்வாறு மரக்கறி வகைகள் விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
மலையகத்தில் இவ்வாறான காலநிலையால் மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
விலை விபரங்கள்
லீக்ஸ் ஒரு கிலோ விலை – 200 ரூபா,  பாவக்காய் ஒரு கிலோ விலை – 200 ரூபா ,வெண்டிக்காய் ஒரு கிலோ விலை – 190 ரூபா ,புடலங்காய் ஒரு கிலோ விலை – 180 ரூபா,  தக்காளி ஒரு கிலோ விலை – 360 ரூபா ,கோவா 
ஒரு கிலோ விலை – 320 ரூபா ,
கறிமிளகாய் ஒரு கிலோ விலை – 480 ரூபா,  கத்திரிக்காய் ஒரு கிலோ விலை – 250 ரூபா,  நுவரெலியா உருளை கிழங்கு ஒரு கிலோ விலை – 290 ரூபா ,போஞ்சி ஒரு கிலோ விலை – 600 ரூபா, 
பச்சைமிளகாய் ஒரு கிலோ விலை – 500 ரூபா,  கரட் ஒரு கிலோ விலை – 440 ரூபாவிலிருந்து 480 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.
..என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மலையகத்தில் மரக்கறி விலைகள் திடீர் அதிகரிப்பு விலை விபரங்கள்

இலங்கையில் கடல் நீரை குடிநீராக்க புதிய வேலைத்திட்டம்

ஞாயிறு, 2 ஜூலை, 2023

புதிய வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோக இணைப்பை இலகுவாக வழங்குவதற்கான அவசர வேலைத்திட்டம் அடுத்த 
வாரம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.இதேவேளை, தவணை
 முறையில் 
பணம் செலுத்தும் வசதியின் கீழ் நீர் விநியோக இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு 
வழங்கப்படும் என சபையின் பிரதிப் பொது முகாமையாளர் 
வனிஜா பியல் பத்மநாத் தெரிவித்தார்.பொருளாதார நெருக்கடியிலும் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் கடல் நீரை குடிநீராக்க புதிய வேலைத்திட்டம்

பிரபல சமூக வலைத்தள டுவிட்டர் உலகம் முழுவதும் திடீரென முடங்கியுள்ளது

சனி, 1 ஜூலை, 2023

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர் தளம் உலகம் முழுவதும் திடீரென.01-07-2023. இன்று முடங்கியுள்ளது. பயனாளர்கள் டுவிட் செய்யமுடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பயனர்கள் 
அதிர்ச்சி அடைந்தனர். 
செல்போன் மூலமும், கணினி மூலமும் டுவிட் செய்யும்போது வெவ்வேறு காரணங்களை கொண்டு டுவிட் செய்யமுடியாத 
நிலை உள்ளது. 
இன்று மாலை 5.52 மணி இருந்து டுவிட்டர் தளத்தில் பிரவுஸ் செய்தவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.டுவிட்டர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வராத நிலையில் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - பிரபல சமூக வலைத்தள டுவிட்டர் உலகம் முழுவதும் திடீரென முடங்கியுள்ளது