இலங்கையில் வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு விசேட சலுகை

வெள்ளி, 8 ஜூலை, 2022

இலங்கையிலுள்ள வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் மத்திய வங்கி முக்கிய அறிவிப்பொன்றை 
வெளியிட்டுள்ளது.
இதன்படி, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் 6 மாதத்திற்கு இரு தடவைகளாக அவற்றை செலுத்துவதற்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மத்திய வங்கியினால் வங்கிகளுக்கு பணிப்புரை 
வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வங்கிக் கடன்களை செலுத்த முடியாதுள்ள வாடிக்கையாளர்களுக்காக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கிணங்க கடனை மீளச் செலுத்துவதற்கு ஆறு மாத கால சலுகை வழங்குவது, முறைப்படியான செயற் திட்டத்தின் 
மூலம் வங்கிக் கடனை அறவிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலத்தை நீடிப்பது, மற்றும் செயற்படாத கடனை செலுத்தவுள்ளோரின் பட்டியலில் 
உள்ளோர் புதிய கடன்களை பெற்றுக் கொள்ளும்போது
 கடன் தகவல் பிரிவில் சலுகையுடனான மதிப்பீடுகளை மேற்கொள்வது தொடர்பிலும் மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


READ MORE - இலங்கையில் வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு விசேட சலுகை

நாட்டில் கடவுச்சீட்டு வரிசையில் குழந்தையை பிரசவித்த பெண்

வியாழன், 7 ஜூலை, 2022

கடவுச்சீட்டுக்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
பத்ரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு காரியாலயத்துக்கு முன்பாக வரிசையில் கடவுச்சீட்டு பெறுவதற்காக, குறித்த பெண் வரிசையில் காத்திருந்துள்ளார்.
அதன்போது, பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த இராணுவத்தினரால் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் குழந்தையை பிரசவித்ததாக தெரியவந்துள்ளது.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், தாயும், குழந்தையும் பொரளை – காசல்வீதி மகளிர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் வைத்தியர்கள் 
தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் கடவுச்சீட்டு வரிசையில் குழந்தையை பிரசவித்த பெண்

இலங்கையில் சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

புதன், 6 ஜூலை, 2022

நாட்டில் 50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து பைக்கட் ஒன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சீமெந்து பக்கெற் ஒன்றின் புதிய விலை 3200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் ஆகியன காரணமாக சீமெந்து பைக்கட்களை பல்வேறு 
இடங்களுக்கும் கொண்டு செல்வதில் பாரிய 
அசெளகரியங்களையும், போக்குவரத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருவதாக சிமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் 
குறிப்பிடுகின்றனர்.
சீமெந்து விலையேற்றம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் நிர்மாணத் துறையில் ஈடுபடுவோரும் தமது தொழிற்துறையில் பாரிய பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, முன்னர் 50 கிலோ கிராம் சிமெந்து பைக்கட் 900 ரூபாவாக காணப்பட்டபோதிலும், இந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் சீமெந்து பைக்கட்டின் விலை 6 சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
5
இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




READ MORE - இலங்கையில் சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

பாகிஸ்தானில் சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கத்தை இலங்கை தமிழ்மங்கை சுவீகரித்தார்.

செவ்வாய், 5 ஜூலை, 2022

பாகிஸ்தானில் நடைபெற்ற மூன்றாவது சவாட் சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த டிலக்சினி கந்தசாமி தங்கப் பதக்கம் வென்று வடக்கு மாகாணத்துக்கும் இலங்கைக்கும் 
பெருமை சேர்த்துள்ளார்.
இந்தப் போட்டியில் இலங்கையிலிருந்து 13 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் 4 ஆண்கள், 9 பெண்கள் அடங்குகின்றனர்.
இவர்களில் 9 பேர் தங்கப் பதக்கத்தையும், 4 பேர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
போட்டியில் பங்கேற்ற வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வவுனியா வீராங்கனை டிலக்சினி கந்தசாமி சிறப்பாகச் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தைச்
 சுவீகரித்தார்.
சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற டிலக்சினி கந்தசாமி பெரும் கஷ்டத்துக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியாலும், தொடர் பயிற்சியாலும் சர்வதேச ரீதியில் தங்கப் பதக்கத்தை 
வென்றுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



READ MORE - பாகிஸ்தானில் சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கத்தை இலங்கை தமிழ்மங்கை சுவீகரித்தார்.

இலங்கை இந்தியாவில் இருந்து பால்மாவை இறக்குமதி செய்ய முடிவு

திங்கள், 4 ஜூலை, 2022

இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனை அவசரத் தேவையாகக் கருதி, இலங்கையின் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், நாட்டுக்குத் தேவையான பால்மாவை பெருமளவு இறக்குமதி செய்வதற்கும் இந்தியா ஒத்துழைப்புத் 
தெரிவித்துள்ளது.
உணவு பதப்படுத்துதல் மற்றும் பால் உற்பத்தி துறைகளில் அதிக ஒத்துழைப்பை வழங்குவதற்கான விடயங்களை ஆராய இந்திய ஆய்வுக் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் எனவும் இந்தியாவின் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய அமைச்சரின் பணிப்புரையின் கீழ், 
தற்போதுள்ள பால் தொழில்துறையின் கீழ் பல்வேறு அம்சங்களில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் 
நெருங்கிய உறவுகளை 
ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான தற்போதைய கடன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து பால் மாவை இறக்குமதி செய்ய முடியும் எனவும், இது இலங்கையில் உள்ள குழந்தைகளின் போசாக்கு மட்டத்தை உயர்த்துவதற்கு பங்களிக்கும் எனவும் உயர்ஸ்தானிகர் 
தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அனைத்து வழிகளிலிருந்தும் பால் மாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இரு தரப்பினரும் 
தீர்மானித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



READ MORE - இலங்கை இந்தியாவில் இருந்து பால்மாவை இறக்குமதி செய்ய முடிவு

நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் சிறப்பு விடுமுறை அறிவிப்பு

ஞாயிறு, 3 ஜூலை, 2022

நாட்டில் ஜூலை மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையில் சகல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய குறித்த வாரத்தை பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அதிகாரிகளுக்கு இடையில்.03-07-2022. இன்று இடம்பெற்றது.
இதன்போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த விடுமுறையை மற்றுமொரு விடுமுறை காலத்தில் ஈடு செய்வதற்கும் 
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் சிறப்பு விடுமுறை அறிவிப்பு

இலங்கைக்கு எரிபொருள் கப்பல்கள் வரும் திகதிகள் வெளியீடு

சனி, 2 ஜூலை, 2022

நெருக்கடி நிலையில், 90,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய மூன்று கப்பல்கள் இலங்கைக்கு
 வருகை தரவுள்ளன.
ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் எரிபொருளை தாங்கி வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, முதலாவது கப்பல் ஜூலை 13 முதல் 15ஆம் திகதிக்குள்ளும், 2ஆவது கப்பல் ஜூலை 29 முதல் 31ஆம் திகதிக்குள்ளும், 3ஆவது 
கப்பல் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதியன்றும் வருகை 
தரும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பளார் மனோஜ்குப்தா தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

READ MORE - இலங்கைக்கு எரிபொருள் கப்பல்கள் வரும் திகதிகள் வெளியீடு