மட்டக்களப்பில் பெண் சட்டத்தரணி மற்றும் கணவன் மீது தாக்குதல்இருவர் கைது.

புதன், 7 பிப்ரவரி, 2024

மட்டக்களப்பு நகரில் நீதிமன்றத்திற்கு அருகாமையிலுள்ள சட்டத்தரணி ஒருவரின் காரியாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து பெண் சட்டத்தரணியையும் அவரது கணவரையும் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் கைது
 செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எச். முகமட் ஹம்ஸா உத்தரவிட்டார்.
இதனையடுத்து தாக்குதலுக்கு உள்ளான சட்டத்தரணியும் அவரது கணவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் 06-02-2024.
செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு 
நீதவான் நீதிமன்ற 
நீதவான் எம்.எச். முகமட் ஹம்சா முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மட்டக்களப்பில் பெண் சட்டத்தரணி மற்றும் கணவன் மீது தாக்குதல்இருவர் கைது.

நாட்டில் மாங்குளத்தில் மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ள இலவச அம்புலன்ஸ் சேவை

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அ ம்புலன்ஸ் சேவை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
இதேவேளை முள்ளியவளை, மணலாறு பகுதிகளிலும் சேவை பல நாட்களாக இடம்பெறவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
 கடந்த 3 மாதங்களாக மாங்குளம் பகுதியில் குறித்து
 சேவை இல்லாமை காரணமாக அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பல்வேறு பிரதேச மக்கள் பெரும் துயரங்கங்களை சந்தித்து
 வருகின்றனர். 
 குறிப்பாக மாங்குளம் பிரதேசத்தை அண்டிய பாண்டிய குளம், நட்டாங்கண்டல், மல்லாவி, கோட்டைக்கட்டிய குளம், அம்பலபெருமாள்குளம், அம்பகாமம், தட்சடம்பன், மற்றும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 1990 எனும் இலவச அம்புலன்ஸ் சேவையை நாளாந்தம் மக்கள் பெற்று வரும் நிலையில் தற்போது மூன்று மாதங்களாக இந்த ஆம்புலன்ஸ் சேவைகளை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் 
துயரங்களிற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், சிரமங்களையும் 
எதிர்கொள்கின்றனர். 
குறிப்பாக நட்டாங்கண்டல் இருந்து வைத்தியசாலைக்கு செல்ல வேண்டுமெனில் 3000 ரூபாய் முச்சக்கர வண்டிக்கு செலுத்தி
 செல்லவேண்டும். அதேவேளை, உரிய நேரத்துக்குள் சிகிச்சையை பெற வேண்டிய நோயாளர்கள் உயிரிழக்கும் அபாய 
நிலையும் ஏற்படுகிறது. 
இந்த சேவையானது மக்களிற்கு இன்றியமையாததாகின்றது. மேலும், A9 வீதியில் கொக்காவில் தொடக்கம், மாங்குளம் வரை அதிகளவான 
விபத்துக்கள் பதிவாகின்றது. இதன்போது, வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சியில் உள்ள 1990 அம்புலன்ஸ் சேவையையே பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
 இதேபோன்று முள்ளியவளை மற்றும் மணலாறு பகுதியை அண்டிய பகுதி மக்களும் இந்த சேவையை பெற முடியாத நிலையில் உள்ளனர். கடந்த 3 மாதங்களிற்கு முன்னர் மாங்குளம் பகுதியிலிருந்த அம்புலன்ஸ் முள்ளியவளைக்கு மாற்றப்பட்டுள்ளது. 
ஏற்கனவே அங்கு சேவையில் ஈடுபட்ட வாகனம் பழுதடைந்த நிலையில் அனுப்பப்பட்ட மற்றய வாகனமும் 
பழுதடைந்துள்ளது.
 பழுதடைந்த வாகனங்களை விரைவாக திருத்தி சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மாங்குளத்தில் மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ள இலவச அம்புலன்ஸ் சேவை

இலங்கை முழுவதும் பாண் எடை தொடர்பில் சுற்றிவளைப்பு

திங்கள், 5 பிப்ரவரி, 2024

இலங்கை முழுவதும்  பாண் எடையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க பாண் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்டறய திங்கட்கிழமை (05) முதல் நாடு முழுவதும் சுற்றிவளைப்பு 
மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகாரசபை 
தெரிவித்துள்ளது.
 அதன்படி, ஒரு இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என குறித்த வர்த்தமானி அறவித்தலில்
 குறிப்பிடப்பட்டுள்ளது.
 அரை இறாத்தல் பாணின் பரிந்துரைக்ககப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
 மேலும், பாணின் எடையை காட்சிப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து கடைடகளுக்கும் பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பாண் விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராக.05-02-2024. திங்கட்கிழமை முதல் சுற்றிறிவளைப்புகளின் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சப்பை தெரிவித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - இலங்கை முழுவதும் பாண் எடை தொடர்பில் சுற்றிவளைப்பு

நாட்டின் பொருளாதார நெருக்கடி சொத்துக்களை விற்பனை செய்யும் மக்கள்

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

இலங்கையில்கடந்த மூன்றாண்டுகளில் முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நகைகள் மற்றும் சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன அல்லது அடமானம் வைக்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சகம் மற்றும் ஸ்டேட் வங்கியின் பதிவுகளில் இருந்து தெரிகிறது.  
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, மக்கள் தங்கள் சொத்துக்களை அடமானம் வைக்க அல்லது விற்க ஆசைப்படுகிறார்கள் என அந்த தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. 
 மேலும் சில வீடுகளில் இருந்த நகைகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த சில 
ஆண்டுகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.  
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக வாகனங்கள் வாங்குவதும் சுமார் 80 சதவீதம் குறைந்துள்ளதாக வாகனச் சந்தை வட்டாரங்கள்
 தெரிவிக்கின்றன. 
கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்டுமானத் தொழில் தொடர்பான வாகனங்கள், விவசாயம் தொடர்பான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டின் பொருளாதார நெருக்கடி சொத்துக்களை விற்பனை செய்யும் மக்கள்

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கடிப்போ ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

சனி, 3 பிப்ரவரி, 2024

இலங்கை போக்குவரத்து சபையின் பதுளை டிப்போ பஸ் ஊழியர்களுக்கும் பதுளை மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள்
 போக்குவரத்து சங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் சேவையில் இருந்து 
விலகியுள்ளனர்.
நேற்று பிற்பகல் முதல் டிப்போவில் இருந்து பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பதுளை - கொழும்பு வீதி இலக்கம் 99இன் ஒன்றிணைந்த சேவையானது, இந்த பேரூந்துகளினால் உரிய முறையில் இடம்பெறுவது இல்லை என தெரிவிக்கும் போக்குவரத்து சபை ஊழியர்கள், இந்த நிறுவனத்திற்கு
 சொந்தமான பஸ்களை மத்திய பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
அந்த பஸ்கள் தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே தமது பஸ்கள் இயங்குவதாக பதுளை பயணிகள் போக்குவரத்து சங்கம் 
தெரிவித்துள்ளது.
 எவ்வாறாயினும், அனைத்து தனியார் பேருந்து சேவைகளும் இடையூறு இன்றி இயங்குவதாகவும், பதுளை மாவட்டத்தில் உள்ள ஏனைய டிப்போக்களின் பேருந்துகள் வழமை போன்று இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - பதுளை டிப்போ பஸ் ஊழியர்கடிப்போ ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

நாட்டில் பாண் விற்பனை தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

நாட்டில் பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை 
வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு அரை இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, விற்பனைக்கு காட்சிப்படுத்தப்படும் பாணின் எடை தெளிவாக காணக்கூடிய வகையில் இருக்க வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில்
என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பாண் விற்பனை தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மூடப்படவுள்ள மதுபானசாலைகள்

வியாழன், 1 பிப்ரவரி, 2024

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மதுபானக்கடைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 அதன்படி, பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் பெப்ரவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை வரை மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மூடப்படவுள்ள மதுபானசாலைகள்