நம்மால் மாற்ற முடியாத ஒன்று பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

நம்முள் மூடநம்பிக்கை நம்மால் மாற்ற முடியாத ஒன்று அப்படி நம்ம கிட்ட இருக்கும் மூட பழக்கங்கள் ஒன்றுதான் பூனை சகுனம் நம் வெளியே கிளம்பும்போது பூனை குறைக்க வந்துச்சு அதை அபசகுனம் என்று சொல்லுவோம்.
நம்மை புதிய கிளம்பும்போது பூனை குறுக்கே வந்துவிட்டால் அதை அபசுகுணம் என்று சொல்வோம் நாம் செய்யும் வேலையை நிறுத்தி விடுவோம் மீண்டும் வீட்டிற்கு வந்து சில நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்துட்டு பின் தண்ணீர் குடித்துவிட்டு அதன் பின்பு நாம் செய்ய வேண்டிய வேலையை
 தொடர்வோம்.
இதன் இதன்பின் ஒரு சுவாரசியமான பின்னணி கதை தான் நாம் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம் ரகசியத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்குமா வாங்க கீழ படிப்போம்.
அக்காலத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நாம் செல்ல முடியும் என்றால் அது மாட்டு வண்டியில் அல்லது குதிரை வண்டிகோ பயணம் செய்ய வேண்டும் அப்படி நம்ம பயணம் செய்யும் பொழுது இடையில் ஒரு சில பிரச்சனைகள் வரும் அதில் ஒன்றுதான் நம் இருட்டில் செல்லும் போது இடையில் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது பூனையினுடைய விழிகள் ரேடியம் போல் மின்னும்
எதிரில் பூனை தான் என்று மாட்டிற்கும் குதிரைக்கும் தெரியாது அந்த நிலையில் மாடும் குதிரையும் மிரண்டு பயந்து விடக்கூடாது என்பதற்காக இந்த வண்டியை ஓட்டுபவர்கள் பூனை எதிரே வந்தால் சிறிது நேரம் மண்டே ஓரமா நிறுத்திவிட்டு குதிரை க்கும் மாட்டிற்கும் தண்ணீர் காட்டி விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துட்டு செல்வார்கள்.
குதிரை ஊட்டி செல்பவர்கள் சிறிதாக ஓய்வெடுத்து விட்டு தண்ணீர் பருகி விட்டு அதன் பின்பு தன்னுடைய பயணத்தை தொடருவார்கள் இப்பழகு காலப்போக்கில் மாறி பூனைக்குறிக்க வந்தால் அபசகுணம் தண்ணீர் குடித்துவிட்டு ஓய்வெடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று நம்முடைய மக்கள் மத்தியில் வந்துருச்சு.
மூடப்பழக்க பழக்கவழக்கங்கள் மீது நம்பிக்கை இருந்தால் இனி பூனை குறுக்கே வந்தால் அது அபசகுணம் என்று நினைத்து தேவையில்லாமல் உங்கள் மனதை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் ஒரு காரியம் 
கொழுப்பத்தோடு செய்யும்போது அதில் பிரச்சனைகள்
 வரத்தான் செய்யும் பூனை குறுக்கே வந்தாலும் சரி பூனை குறுக்கே வரவில்லை என்றாலும் சரி மனதிருப்தியோடு செய்யக்கூடிய காரியங்கள் 
வெற்றியில் முடியும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நம்மால் மாற்ற முடியாத ஒன்று பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம்

நாட்டில் அரிசி தொடர்பில் விவசாய திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

திங்கள், 6 பிப்ரவரி, 2023

இலங்கையில் இந்த வருடம் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என  விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. 
எவ்வாறாயினும், நெற்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக பல்வேறு பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 
அண்மைய நாட்களாக நாட்டின் ஒரு சில பாகங்களில் உள்ள வயல் நிலங்களில் நெற்கதிர்கள் மஞ்சல் நிறத்தில் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். நெற்கதிர்களில் ஏற்படும் பொற்றாசியம் பற்றாக்குறையே இதற்கு காரணம் என விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான நோய் நிலமைகளில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்கு, உரிய முறையில் சரியான நேரத்தில் உரமிடப்படுவது கட்டாயமாகும். எனினும், உரம் கிடைப்பதில் ஒரு சில இடங்களில் தாமதம் நிலவுவதால், இவ்வாறான நோய் நிலமைகள் எற்படுவதாக விவசாயிகள் 
குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை நாட்டில் தற்பொழுது பெய்த கடும் மழையின் காரணமாக வட பகுதி உட்பட பல பிரதேசங்களில் நெல் அறுவடை செய்யாமல் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை
 தெரிவித்துள்ளனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் அரிசி தொடர்பில் விவசாய திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

லிட்ரோ எரிவாயுஇன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 334 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  
இதற்கமைய 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை 4,743 என அறிவிக்கப்பட்டுள்ளது. 
லிட்ரோ எரிவாயுவின் விலையில் இன்றைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில்  எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இலங்கையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகர செய்தி

சனி, 4 பிப்ரவரி, 2023

இலங்கையில் எதிர்வரும் சிறுபோகத்தின் போது, நெல் மற்றும் சோளம் செய்கைக்காக யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை 
வழங்கியுள்ளார்.
தற்போது, உர மற்றும் வர்த்தக உர நிறுவனங்களுக்;கு சொந்தமான களஞ்சியசாலைகளில் 30 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் காணப்படுகிறது. அதனைத் தவிர, மேலும் 25 ஆயிரம்மெற்றிக் தொன் யூரியா உரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கென பத்து பில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒருலட்சம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை கையிருப்பில் வைத்துக் கொண்டு, சிறுபோகத்தில்நெல், சோளம் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான யூரியா உரம் பகிர்ந்தளிப்பது நோக்கமாகும். சிறுபோக நெற் செய்கைக்காக சேதனப் பசளை, பண்டி, யூரியா உர வகைகளை, தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்குவது விவசாய அமைச்சின் 
எதிர்பார்ப்பாகும்.
ஆரம்ப உரமான சேதனப் பசளை, சிறுபோகத்தின் ஆரம்பத்திலேயே விவசாயிகளின் தேவைக்கேற்ப, முழுமையாக இலவசமாக வழங்கப்படவுள்ளது. 36 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் இந்த மாத நடுப்பகுதியில் துறைமுகத்தைவந்தடையவுள்ளது.
மேலதிகமாக, 35 ஆயிரம் மெற்றிக் தொன் பண்டி உரம், 
உர நிறுவனத்திடம் காணப்படுகிறது. அதன்படி, சிறுபோகத்தில் நெல் வயல்களுக்கு தேவையானஉரத்தை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரமேலும் தெரிவித்துள்ளார்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகர செய்தி

பருத்திதுறையில் நள்ளிரவில் வீசிய சுழல் காற்றினால் பலத்த சேதம். மக்களே அவதானம்

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

யாழ்பருத்திதுறையில் நள்ளிரவில் வீசிய சுழல் காற்றினால் மரத் தளபாட தொழிலகத்தின் கூரை தூக்கி வீசப்பட்டமையால் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மழையில் நனைந்து
 நாசமாகியுள்ளன.
குறித்த சம்பவம் பருத்தித்துறை, தும்பளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த புதன் கிழமை பிற்பகலிலிருந்து கன மழை பெய்துவந்தது.இந்த நிலையில் நள்ளிரவு வேளை குறித்த சுழல் காற்று குறித்த மரத்தளபாடத் தொழிற்சாலை சூழலில் வீசியமையால் கட்டிடத்தின் கூரைத் தகடுகள் சேதமடைந்தது.
அத்துடன் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டதனால் மழை நீரில் இயந்திரங்கள் நனைந்து பெறுமதி வாய்ந்த மரத்தள பாட உற்பத்தி இயந்திரங்கள், கணினிகள், நிழற்பட பிரதி இயந்திரங்கள், 
மின் இணைப்பு சாதனங்கள் என்பன சேதமாகியுள்ளது.இந்நிலையில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - பருத்திதுறையில் நள்ளிரவில் வீசிய சுழல் காற்றினால் பலத்த சேதம். மக்களே அவதானம்

நாட்டை விட்டு கடந்த ஆண்டு வெளியேறியுள்ள மக்கள் தொகையை வெளியிட்ட மத்திய வங்கி

வியாழன், 2 பிப்ரவரி, 2023

கடந்த  2022ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்காக சுமார் 3 இலட்சம் பேர் சென்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி 
தெரிவித்துள்ளது. 
அதன்படி, 2022ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்து 99,934 ஆகும். இவர்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 786 பேர் திறமையற்ற தொழிலாளர்களாக வெளிநாட்டு 
வேலைக்குச் சென்றுள்ளனர்
திறமையான தொழிலாளர்களாக 88,215 பேரும், வீட்டுப் பணியாளர்களாக 73,781 பேரும் வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். அவர்களில், 2022 டிசம்பர் மாதத்தில் 23,407 பேர் வெளியேறியுள்ளனர்.
இதற்கிடையில், 2022 இன் பிற்பகுதியில் குறிப்பிடத்தக்க மீட்சியைக் காட்டினாலும், 2022 ஆம் ஆண்டு முழுவதும் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் அனுப்பும் ரசீதுகள் குறைந்துள்ளன.
மொத்தத்தில், 2022 ஆம் ஆண்டில், வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து 3,789 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே நாடு பெற்றுள்ளது. இது 2021 இல் 5,491 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் குறைவு.
2022 இல் அதிக மாதாந்திரப் பணம் டிசம்பர் மாதத்தில் பதிவு 
செய்யப்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கை 476 மில்லியன் அமெரிக்க டாலர்கள். நவம்பர் 2022 இல், வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து 384
 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே 
நாடு பெற்றுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாட்டை விட்டு கடந்த ஆண்டு வெளியேறியுள்ள மக்கள் தொகையை வெளியிட்ட மத்திய வங்கி

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு விலை விபரம்

புதன், 1 பிப்ரவரி, 2023

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம்
 தெரிவித்துள்ளது. 
நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நான்கின் விலை இவ்வாறு குறைக்கப்படடுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.  
இதன்படி,  ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 25 ரூபா 
குறைக்கப்பட்டு, 1675 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 ரூபா குறைக்கப்பட்டு 165 ரூபாவாகவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டு சிவப்பரிசி 10 ரூபா குறைக்கப்பட்டு 169 ரூபாவாகவும், கோதுமை மா 5 ரூபா குறைக்கப்பட்டு 230 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படும் என சதொச நிறுவனம் 
தெரிவித்துள்ளது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு விலை விபரம்