சித்தமருத்துவ அபிவிருத்தி வடமாகாணத்தில் உயரதிகாரிகளினால் புறக்கணிப்பு

திங்கள், 10 மே, 2021

வடமாகாணத்தில் உயரதிகாரிகளினால் சித்தமருத்துவ அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டு வருவதாக அரச சித்தமருத்துவ அதிகாரிகள் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 வடக்கு மாகாணத்தில் சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் இயங்கி வரும் சுதேச மருத்துவ திணைக்களத்தின் அபிவிருத்தி ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றது. அதாவது கடந்த 15 வருடங்களை கடந்தும் சுதேச மருத்துவ 
திணைக்களத்திற்கென தனியான காணி ஒதுக்கீடுகளோ நிரந்தர கட்டடங்களோ ஏதும் இன்றி காலத்திற்குகாலம் இடமாற்றப்பட்டு தனியார் கட்டடங்களில் இயங்கி வருகின்றது. 
 அவ்வாறே சுதேச மருத்துவ திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய சித்தமருந்தகம், கிராமிய சித்தமருத்துவமனை, மாவட்ட சித்தமருத்துவமனை, மருந்து உற்பத்தி பிரிவு, மூலிகை தோட்டங்கள், மாகாண மூலிகை கிராமம், சமூக மருத்துவ பிரிவு என்பன அடிப்படை வசதிகளோ
 நிரற்படுத்தப்பட்ட ஆளணியினரோ இன்றி காணப்படுவதுடன் இவற்றில் சில இடவசதிகளின்றி தனியார் கட்டடங்களில் பல இடையூறுகளுக்கு மத்தியில் மக்களுக்கு தொடர்ச்சியாக சேவையாற்றி 
வருகின்றன 
 இவ்வாறான செயல்களை வடக்கு மாகாண  ஆளுநர் , பிரதம செயலாளர் பணிமனையும், சுகாதார சுதேச மருத்துவ அமைச்சும், சுதேச மருத்துவ திணைக்களமும், பாரா முகமாக இருப்பது எமது சங்கம் ஆழ்ந்த மனவேதனையினை அடைகின்றது. 
 மேலும் சித்த மருத்துவத்தினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசியல் பிரமுகர்கள், இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்தவர்கள், உயரதிகாரிகள், சித்த மருத்துவ விரிவுரையாளர்கள் சித்த மருத்துவ நிபுணர்கள், சித்த மருத்துவர்கள் ஆகியோர்கள் மட்டும் அல்லாது ஒவ்வொரு தமிழ் மகனும் முன்வர வேண்டும் என அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை 
விடுக்கின்றது. 
 வேகமாக பரவிவரும் COVID-19 பரவலைத் தடுப்பதற்கு COVID- 19 தொடர்பாக இராஜங்க அமைச்சர் சுதர்சினிபெனாண்டோ பிள்ளை ஆயுள்வேத வைத்தியசாலைகளை COVID-19 இற்காக சிகிச்சை நிலையங்களாக மாற்றி அமைக்க கேட்டுக் கொண்ட போதும் வடக்கு
 மாகாணத்தில் அதற்கான நடவடிக்கைகள் வடமாகாண ஆளுநரோ, சுகாதார சுதேச மருத்துவ அமைச்சோ, மேற்கொள்ளாமை அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு இவற்றை ஆரம்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம். என்றுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - சித்தமருத்துவ அபிவிருத்தி வடமாகாணத்தில் உயரதிகாரிகளினால் புறக்கணிப்பு

யாழ் வவுனியா சாரதியும் நடந்துனரும் இணைந்து பயணியை அச்சுறுத்தல்

வியாழன், 6 மே, 2021

 
யாழ்ப்பாண வவுனியா போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பயணி ஒருவருக்கு மீதி பணம் வழங்காது பயணியை தூசன வார்த்தைகளில் பேசியதுடன் அவரை அச்சுறுத்திய சம்பவம் ஒன்று
 இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம்.06-05-2021. இன்று மாலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-இன்று மாலை 3.50 மணிக்கு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் வவுனியாவில் இருந்து பயணியொருவர் பயணித்துள்ளார்.
இவர் பேருந்து கட்டணமாக 260 ரூபாவுக்கு 1000 ரூபா தாளை கொடுத்துள்ளார்.
இதன்போது நடத்துனர் மீதிப் பணமாக 235 ரூபாவை கொடுத்துவிட்டு மீதி 500 ரூபா பின்பு தருவதாக கூறியுள்ளார்.
எனினும் யாழ்ப்பாணத்தை வந்தடைவதற்குள் இரண்டு மூன்று முறை மீதிப் பணத்தை கேட்ட போதும் பின்பு தருவதாக கூறியுள்ளார்.
இறுதியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பின்பு,மீதிப் பணமாக 5 ரூபாவை கொடுத்துள்ளார்.
இதன்போது அப்பயணி மீதிப் பணம் 505ரூபா தர வேண்டும் என கேட்ட போது,அதற்கு நடத்துனர் இல்லை,5 ரூபா தான் தர வேண்டும், நீ 500 ரூபா தான் கொடுத்தாய் என அச்சுறுத்தும் தொணியில் 
தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பயணியும் தான் 1000 ரூபாவே கொடுத்ததாகவும், மீதிப் பணம் 500 ரூபா தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு சாரதியும் நடந்துனரும் இணைந்து, பயணியை அச்சுறுத்தியுள்ளார்.
பணத்தை தராவிட்டால் என்ன செய்வாய் ? காவல் நிலையத்திற்கா செல்வாய் ? முடிந்தால் செல் என அச்சுறுத்தியுள்ளனர்.
எனினும் தொடர்ச்சியாக பயணி மீதிப்பணத்தை 
தராவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை 
எடுக்கப்படும் என கூற, பயணியின் பேருந்து பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டு மீதிப் பணத்தை கொடுத்துவிட்டு அவரை தூசன வார்த்தைகளில் பேசியுள்ளனர்.
இதேவேளை இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக தனியார் பேருந்துகளில் இடம்பெறுவதாகவும்,அவற்றை கேட்கப்போனால் 
நடத்துனர்கள் அச்சுறுத்துவதாகவும் ஏனைய பயணிகளும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

READ MORE - யாழ் வவுனியா சாரதியும் நடந்துனரும் இணைந்து பயணியை அச்சுறுத்தல்

மாங்குளத்தில் . மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்தில் இடர்பாடு

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதிக்கு குறுக்காக பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்தில் இடர்பாடுகளை மக்கள்
 சந்தித்துள்ளனர்.
வீதிக்கு குறுக்காக மரம் முறிந்து விழுந்ததனால் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு வருகை தந்த 
கிராம மக்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் முள்ளியவளை காவல்து​றையினர் ஆகியோர் இணைந்து வீதியிலுள்ள மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - மாங்குளத்தில் . மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்தில் இடர்பாடு

முத்துஐயன்கட்டு இடது கரையில் தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம்

வியாழன், 29 ஏப்ரல், 2021

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில்
 29-04-2021.இன்று
ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம் 
அடைந்துள்ளன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - முத்துஐயன்கட்டு இடது கரையில் தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம்

யாழில் சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது பாடசாலை தனிமைப்படுத்தல்

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகாவித்தியாலயம் .26-04-2021.இன்று சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது பாடசாலை நிர்வாகமானது சனசமூக நிலையம் ஒன்றுக்கு விளையாட்டு நிகழ்வு நடத்துவதற்கு பாடசாலை மைதானத்தினை வழங்கியதன் காரணமாக இன்றைய தினம் குறித்த பாடசாலை தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.
நேற்றையதினம் சனசமுக நிலையத்தின் விளையாட்டு போட்டி  விமரிசையாக இடம்பெற்றதோடு பல நூற்றுக் கணக்கான மக்களும் அந்த விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த பாடசாலை,விளையாட்டு மைதானம் தனிமைப்
 படுத்தப்பட்டுள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - யாழில் சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது பாடசாலை தனிமைப்படுத்தல்

நாட்டில் தபால் திணைக்களத்தில் புதிதாக 3ஆயிரம் பேர் இணைப்பு

சனி, 24 ஏப்ரல், 2021

 நாட்டில் தபால் திணைக்களத்துக்கு புதிதாக 3,000 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், மாகாண மட்டத்திலேயே இணைக்கப்பட்டனர் என்று பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
கனிஷ்ட தபால் சேவைக்காக, நாளாந்த கொடுப்பனவின் அடிப்படையிலேயே புதிதாக ஊழியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
தபால் விநியோகம், அலுவலக உதவியாளர்கள் போன்ற பணிகளுக்காக இவர்கள் தபால் திணைக்களத்தில் இணைக்கப்பட்டனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டில் தபால் திணைக்களத்தில் புதிதாக 3ஆயிரம் பேர் இணைப்பு

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல்

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

நாட்டில் சுங்க திணைக்கள அதிகாரிகளுக்கும், தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று
 இடம்பெறவுள்ளது.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் தேங்காய் எண்ணெய் இறக்குமதிகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு 
இடம்பெறவுள்ளது.
அத்துடன் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, புற்றுநோயை ஏற்படுத்த கூடிய
 இரசாயனம் அடங்கியுள்ளதாக கூறப்படும் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் அடங்கிய ஏனைய கொள்கலன்களை இந்த 
வாரத்தில் மீள் ஏற்றுமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுங்கப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஃப்லடொக்ஸின் எனப்படும் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக உறுதிசெய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத 105 மெற்றிக் டன் தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்கள் அண்மையில் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
குறித்த தேங்காய் எண்ணெய் இறக்குமதி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் தேங்காய் எண்ணெய் கொள்கலன்களே இவ்வாறு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல்