நாட்டில் இன்றிரவு முதல் பாணின் விலைகள் குறைக்கப்படுகின்றன.

திங்கள், 31 அக்டோபர், 2022

நாட்டில் இன்றிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன.
இதன்படி 450 கிராம் பாண் ஒரு இறாத்தல் மற்றும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை 10 ரூபாவால் குறைக்க 
தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாட்டில் இன்றிரவு முதல் பாணின் விலைகள் குறைக்கப்படுகின்றன.

நாட்டில் கோதுமை மாவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா ஒரு கிலோவின் விலையை 250 ரூபாவாக குறைத்திருப்பதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா இறக்குமதிக்காக பகிரங்க கணக்குகளின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்ததன் பின்னர், இறக்குமதி செய்யும் அளவை அதிகரிப்பதற்கு 
எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பெருந்தொகையான கோதுமை மாவினை இறக்குமதி
 செய்வதற்கு கொள்வனவு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு கோட்டை அத்தியாவசிய பொருள் மொத்த இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கோதுமை மாவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு – புதிய விலை விபரம்

சனி, 29 அக்டோபர், 2022

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பருப்பு மற்றும் வெள்ளை சீனி அதன்படி கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளை சீனி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் 375 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 350 ரூபாவாக குறைந்துள்ளது.
அத்துடன் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளைச் சீனியின் மொத்த விலை 225 ரூபாவாக குறைந்துள்ளது.
இந்த விடயத்தை அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம்
 தெரிவித்துள்ளது.
கோதுமை மா விலை இதேவேளை கோதுமை மா ஒரு கிலோகிராமின் மொத்த விற்பனை விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக 
28-10-2022.அன்றயதினம் தகவல்கள் வெளியாகியிருந்தனர்.
எனினும் தற்போதும் புறக்கோட்டையில் கோதுமை ஒரு கிலோகிராம் 250 ரூபா முதல் 260 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு – புதிய விலை விபரம்

நாட்டில் O/L பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியிடப்படும்என்பது பற்றிய அறிவிப்பு

வெள்ளி, 28 அக்டோபர், 2022

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 25ம் திகதியின் பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் 
அறிவித்துள்ளது.
பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் நாட்டின் 3844 பரீட்சை நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சைக்காக 517,486 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இதில் 407,129 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் O/L பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியிடப்படும்என்பது பற்றிய அறிவிப்பு

நாட்டில் சைக்கிளில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு சைக்கிள் வாங்க நிதியுதவி

வியாழன், 27 அக்டோபர், 2022

உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31 திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஒரு நாள் சைக்கிள் வேலை திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்பாடு செய்கிறது.
உலக நகர தினமான ஒக்டோபர் 31ஆம் திகதி இதன் ஆரம்ப விழா நடைபெறவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
பின்னர் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ´சைக்கிள் வெள்ளி - மிதிவண்டியில் வேலைக்கு போவோம்´ திட்டம் செயல்படுத்தப்பட்டு பணியாளர்கள் சைக்கிளில் வேலைக்குச் செல்ல வசதி செய்யப்படும் என, நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன் ஆரம்ப விழா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் பத்தரமுல்ல செத்சிறிபாயில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வளாகத்தில் (31) காலை 8.15 மணிக்கு 
நடைபெறவுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர கூறுகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரம் மற்றும் ஆரோக்கியமான குடிமக்களை உருவாக்குதல், போக்குவரத்து நெரிசலை குறைத்தல், நகரின் பக்கவாட்டு வீதிகளை பிரபலப்படுத்துதல் போன்ற நோக்கத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்தார்.
துவிச்சக்கர வண்டியில் பணிக்கு சமூகமளிக்கும் ஊழியர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி நகர அபிவிருத்தி அதிகார சபையின் துவிச்சக்கரவண்டி மன்றத்தின் அங்கத்தினருக்கு மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் அவர்
 குறிப்பிட்டார்.
துவிச்சக்கர வண்டியில் பணிக்கு வரும் ஊழியர்களின் சைக்கிள்களை நிறுத்த அமைச்சின் வளாகத்தில் தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்களுக்கு சுகாதார வசதிகளும் 
செய்யப்பட்டுள்ளன.
மேலும், துவிச்சக்கர வண்டியில் வேலைக்குச் செல்லும்போது, ​​அந்த ஊழியர்கள் லேசான ஆடைகளை அணிந்து பணிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர மேலும் தெரிவிக்கையில், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தனியான பாதைகளை வழங்குதல், புகையிரத நிலையங்கள்
 மற்றும் பேருந்து
நிலையங்களுக்கு அருகில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் எதிர்காலத்தில் கலந்துரையாடவுள்ளோம்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சைக்கிளில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு சைக்கிள் வாங்க நிதியுதவி

நாட்டில் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்க விலை

புதன், 26 அக்டோபர், 2022

இலங்கையில் 26-10-2022.இன்று தங்கம் விலை குறைந்துள்ளதாக கொழும்பு தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.விலை நிலவரம்
அந்தவகையில் கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில்.26-10-2022. இன்று கரட் தங்கம் ஒரு பவுண் 156,000 ரூபாவாக 
குறைந்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு பவுன் 170,000 ரூபாவாகவும், செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட் தங்கம் ஒரு பவுன் 165,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் இரண்டு இலட்சம் ரூபாவாகவும் இன்று குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் 
தெரிவிக்கின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - நாட்டில் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்க விலை

மீண்டும் இங்கிலாந்து உள்துறை மந்திரியாக சுவெல்லா பிரேவர்மென் நியமனம்

செவ்வாய், 25 அக்டோபர், 2022


இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற சில மணி நேரங்கள் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்தார். முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்ஸின் மந்திரி சபையில் பதவியில் இருந்த பலரை ராஜினாமா செய்யுமாறு புதிய பிரதமர் ரிஷி சுனக் கேட்டுள்ளார். 
இங்கிலாந்து துணைப் பிரதமர் மற்றும் நீதித்துறை செயலாளராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார்.டொமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரி சபையில் துணைப் பிரதமர் 
பதவியில் இருந்தவர். 
அதன்படி, வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக், நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ், வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் க்ளோ ஸ்மித் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் விக்கி போர்ட் ஆகியோர் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
அலோக் சர்மா மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்தின் நிதி மந்திரியாக ஜெர்மி ஹன்ட் நீடிக்கிறார். நாதிம் ஜஹாவிக்கு புதிதாக மந்திரி சபையில் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அவருக்கான துறை ஒதுக்கப்படவில்லை. பென் வாலஸ் மீண்டும் வெளியுறவுத்துறை செயலாளராக 
நியமிக்கப்பட்டுள்ளார். 
ஜேம்ஸ் கிளெவர் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக மீண்டும் 
நியமிக்கப்பட்டுள்ளார். 
பாராளுமன்ற கருவூலத்தின் செயலாளராக சைமன் ஹார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பதவி விலகிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவெல்லா பிரேவர்மெனை உள்துறை மந்திரியாக மீண்டும் நியமனம் செய்து ரிஷி சுனக் 
உத்தரவிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மீண்டும் இங்கிலாந்து உள்துறை மந்திரியாக சுவெல்லா பிரேவர்மென் நியமனம்

இலங்கையில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

திங்கள், 24 அக்டோபர், 2022

உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, நவம்பர் முதல் வாரத்திற்குள் எரிவாயுவின் விலை மேலும் குறையும் வாய்ப்பு இருப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் 
தெரிவித்துள்ளார்.
அண்மையிலும் சந்தை நிலைமைக்கு ஏற்ப லிட்ரோவின் விலை குறைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பெற்ற கடன்களுக்காக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் 7.5 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு மீளச் செலுத்தியுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் 
தெரிவித்துள்ளார்.
செப்டம்பரில் லிட்ரோ நிறுவனம் 6.5 பில்லியன் ரூபாய்களை செலுத்தியுள்ளது.இந்தநிலையில் அக்டோபர் மாதத்திற்குள் செலுத்தவேண்டிய 7.5 பில்லியன் ரூபாய்களே, கடந்த வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது என்று முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - இலங்கையில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கொழும்பிலுள்ள பாடசாலையின் ஒரு ஆசிரியரின் நெகிழ்ச்சியான செய்தி.

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக மாணவர்கள் காலைநேர உணவு பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.இவ்வாறான நெருக்கடியான நிலையில் பாடசாலைகளில் மாணவர்கள்
 மயங்கி விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அது குறித்து இலங்கை கல்வியமைச்சு கரிசனை கொண்டுள்ளது.              
இந்நிலையில் பாடசாலைகளில் உணவு பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களை அதனை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் அதிபர் மற்றும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறான சூழ்நிலையில் கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரின் செயற்பாடு ஒட்டு மொத்த மக்களின் மனங்களையும் நெகிழச் செய்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுரவிலுள்ள ஸ்ரீ ராகுல மகா வித்தியாலத்தில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகி உள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு உணவு ஊட்டி விடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆசிரியைக்கு அப்பால் தாய்மையை வெளிப்படுத்தும் வகையில் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டி விடுகிறார்.
குறித்த ஆசிரியை செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளதுடன், பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறான ஆசிரியர்கள் நாட்டுத் தேவை என்றும் வாழ்த்து 
தெரிவித்துள்ளனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கொழும்பிலுள்ள பாடசாலையின் ஒரு ஆசிரியரின் நெகிழ்ச்சியான செய்தி.

மட்டக்களப்பு மாணவன் அகில இலங்கை ரீதியில் படைத்த சாதனை குவியும் வாழ்த்துக்கள்

சனி, 22 அக்டோபர், 2022

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் செல்வன் ரவீந்திரன் டிலுஷாந்த் தங்கப்பதக்கம் பெற்று சாதனையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அகில இலங்கை ரீதியாக தரம் 04 தொடக்கம் 09 வரையான மாணவர்களுக்கான கணிதவியல் போட்டியினை யாழ் சிதம்பர பாடசாலையில் நடைபெற்றது.
அப் போட்டியில் மட்டக்களப்பு மாணவன் முதலாம் இடத்தினையும் தங்கப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
அத்தோடு லண்டன் செல்வதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது.குறித்த மாணவனுக்கு முகநூலில் வாழ்த்துக்கள்
 குவிந்து வருகின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மட்டக்களப்பு மாணவன் அகில இலங்கை ரீதியில் படைத்த சாதனை குவியும் வாழ்த்துக்கள்

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு

இலங்கையில் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கும் இரண்டாம் தவணை விடுமுறை, 4ஆம் திகதியுடன் 
நிறைவடைய உள்ளது.
மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் 5ஆம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் திகதி வரை இடம்பெறும்.
பின்னர், டிசம்பர் 23ஆம் திகதி முதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிவரை, நத்தார் பண்டிகைக்காக பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்காக, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முடிவுறுத்தப்படும்.பெப்ரவரி 16ஆம் திகதி முதல் பெப்ரவரி 28ஆம் திகதிவரை மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.
பின்னர் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டத்தை மார்ச் முதலாம் திகதி தொடக்கம், மார்ச் 21 வரை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேநேரம், இந்த ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதிவரை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு 
குறிப்பிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு

நாட்டில் அழகுசாதன பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும்

வெள்ளி, 21 அக்டோபர், 2022

அழகுசாதன பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கான மூலப்பொருள் இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நீக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
முன்னதாக மேல்முறையீடுகளைத் தொடர்ந்து 700 தயாரிப்புகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
இந்தநிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வாகன உதிரி பாகங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உட்பட பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் அந்தந்த துறையினரின் கோரிக்கைகளைத் தொடர்ந்து நீக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் அழகுசாதன பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும்

நாட்டில் பாணின் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

வியாழன், 20 அக்டோபர், 2022

     இலங்கையில் கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” கோதுமைமாவின் விலை 270 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதே பாணின் விலையை நாங்கள்
 அதிகரித்தோம்.
கோதுமைமாவின் விலை 400 ரூபாவாக உயர்த்தப்பட்ட போதிலும் பாண் இறாத்தல் ஒன்றின் விலை அதிகரிக்கப்படவில்லை.
400 ரூபா என்ற ஒரு கிலோ கிராம் கோதுமைமாவின் விலையை தற்பொழுது 100 ரூபாவால் குறைப்பதால் பாணின் விலையை குறைக்க முடியாது “, எனக் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பாணின் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

உங்கள் கழிவறையில் இருக்கும் இந்த ஒரு பொருளால் இவ்வளவு பிரச்சினை வருமா

புதன், 19 அக்டோபர், 2022

வீட்டு கழிவறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இதோடு கழிவறையில் இருக்கும் பொருட்களை கண்டிப்பாக அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் இதன் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு.
பலரும் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பிரஷ் போன்றவற்றை ஒருபோதும் சுத்தம் செய்ய மாட்டோம்.
இதை ஆறு மாதத்திற்கு ஒரு முறை புதிதாக மாற்றி விட வேண்டியது அவசியமாகும்.
கழிவறை பிரஷ்சை சுத்தம் செய்வது எப்படி?
சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடம் கழிவறை பிரஷை சுத்தம் செய்த பின்பு போட்டு வையுங்கள். இதனால் கிருமிகள் நோய்களை உருவாக்கக்கூடிய பாக்டீரியாக்கள் அழிந்து விடும்.
மேலும் அதற்கு முன்பாக சிறிதளவு வினிகரை பிரஷ் முழுவதும் ஊற்றி ஊற வையுங்கள். அரை மணி நேரம் கழித்து வேறொரு பிரஷால் இந்த பிரஷர்களுக்கு இடையில் லேசாக 
தேய்த்து கழுவுங்கள்.
பேக்கிங் சோடாவை போட்டும் கழிவறை பிரஷை தேய்க்கலாம். இவ்வாறு செய்த பின்பு நீங்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடம் போட்டு வைத்து எடுத்தால் பிரஷ் சுத்தமாகிவிடும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க்மாதா இணையம்.>>>



READ MORE - உங்கள் கழிவறையில் இருக்கும் இந்த ஒரு பொருளால் இவ்வளவு பிரச்சினை வருமா

இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் தொடர் வீழ்ச்சி

செவ்வாய், 18 அக்டோபர், 2022

தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது
இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 600,793 ரூபாவாக 
பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சிறு உயர்வு காணப்பட்டாலும், இன்று சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன் கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை வீழ்ச்சியில் செல்கின்றது.
மேலும், கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் 
தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 155,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 148,400 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை 
எட்டியிருந்தது.
எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை 
செய்யப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் தொடர் வீழ்ச்சி

இலங்கையில் முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு வெளியான அறிவிப்பு

திங்கள், 17 அக்டோபர், 2022

நாட்டில் முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் பெட்ரோல் ஒதுக்கத்தை அதிகரித்தால் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்கத் தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வாராந்தம் வழங்கப்படும் 5 லீட்டர் பெட்ரோல் ஒதுக்கத்தை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் இவ்வாறு பயணக் கட்டணத்தை குறைக்க தயாராக உள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டது. எனினும் பயண கட்டணத்தை குறைக்க முடியாத நிலை காணப்படுவதாக முச்சக்கரவண்டி சாரதிகள் அறிவித்திருந்தனர்.
வாராந்தம் வழங்கப்படும் பெட்ரோல் ஒதுக்கம் போதுமானதாக இல்லை என தெரிவித்து அவர்கள் கட்டணத்தை குறைக்க முடியாதென தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் 
ஒதுக்கத்தை அடுத்த வாரம் முதல் அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று 
அறிவித்திருந்தார்.
இவ்வாறு எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படுமாயின் பயண கட்டணத்தை குறைக்க முடியும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் 
சுதில் ஜயருக் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - இலங்கையில் முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு வெளியான அறிவிப்பு

இலங்கையில் பாண் விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

நாட்டில்  பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் பாண், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலுள்ள பேக்கரிகளுக்கான 50 சதவீத கோதுமை மா விநியோகத்தை இரண்டு பிரதான நிறுவனங்கள் செய்கின்றன.
அவர்கள் விலையை 250 ரூபாயாக குறைத்தால் மாத்திரமே 
பாண் விலை குறையும்.
குறித்த இரு நிறுவனங்களும் 280 முதல் 310 ரூபாய் வரை மாவை 
விற்பனை செய்கின்றன.
அவை விலையைக் குறைக்கும் என்பதை நம்ப முடியாது.
விலை குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும் சந்தையில் 350 ரூபாவிற்கே மா விற்கப்படுவதாகவும் அவர்
 குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இலங்கையில் பாண் விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

சிலாபத்தில் சம்பவம் மதுப்போத்தலுடன் பாடசாலைக்கு வந்த மாணவன்.

சனி, 15 அக்டோபர், 2022

சிலாபத்தில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவர் மது போத்தலை திருட்டு தனமாக பாடசாலைக்கு கொண்டு வந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.ஒன்பதாம் ஆண்டு படிக்கும் மாணவன் பிரதான வாயில் வழியாக பாடசாலைக்குள் நுழைந்தபோது, ​​மாணவ தலைவர்கள் அவரது பையை சோதனையிட்டபோது ​​இந்த மது போத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் குறித்த மாணவனை, மாணவ தலைவர்கள் மது போத்தலுடன் அதிபரிடம் கையளித்துள்ளனர்.
தனது தந்தை வீட்டிற்கு கொண்டு வந்திருந்த விஸ்கி போத்தலை நண்பர்களுடன் குடிப்பதற்காக கொண்டு வந்ததாக மாணவன்
 தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாணவனை கடுமையாக எச்சரித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோருக்கும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - சிலாபத்தில் சம்பவம் மதுப்போத்தலுடன் பாடசாலைக்கு வந்த மாணவன்.

நாட்டில் தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

வெள்ளி, 14 அக்டோபர், 2022

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி, புதிய தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் திருத்தம் செய்து மீண்டும் பெற்றுக் கொள்ளப்படும் தேசிய அடையாள அட்டைக்காக இதுவரை அறவிடப்பட்ட 250 ரூபா கட்டணம் 500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 
வெளியிடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெளியான முக்கிய செய்தி

வியாழன், 13 அக்டோபர், 2022

நாட்டில் எதிர்வரும் காலத்தில் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரிடமும் வரி அறவிடும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஊடக மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (12.10.2022) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர்,”எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இலங்கையில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு வரி கோப்பு திறக்கப்படும்.
அவர்களின் வருமானத்துக்கு ஏற்ப வரி விதிக்கப்படும் தனியார் சேனலிங் செய்யும் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு நடத்தும் டியூசன் 
ஆசிரியர்கள் ஆகியோர் பெரும் தொகை வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்ற போதிலும் அவர்கள் இதுவரை வரி 
செலுத்துவதில்லை.
எனவே அவர்களையும் வரி செலுத்தும் வலையமைப்புக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.கூடுதல் வருமானத்தைப் பெறுவோரிடம் நேரடி வரி அறவிடப்படாத போதில் அரசாங்கத்தின்
 செயற்பாடுகளை மேற்கொள்ள மறைமுக வரிகளை விதிக்க வேண்டியேற்படும்.அது ஏழை மக்களுக்கு சுமையாக அமைந்து விடும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெளியான முக்கிய செய்தி

நாட்டில்லுள்ள பெண்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி. பலர் வேலை இழக்கும் அபாயம்

புதன், 12 அக்டோபர், 2022

இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அழகுசாதனப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் அதனுடன் சார்ந்த தொழிற்துறைகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன.இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக,
ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினாலும், உள்ளூர் 
பொருட்களை மாத்திரம் பயன்படுத்தியும் இத்துறையை நடத்த முடியாது என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க 
அமைச்சர் தெரிவித்தார்.
மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீத சலூன்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.
மேலும், இத்துறையில் கிட்டத்தட்ட 400,000 பேர் வேலை செய்கிறார்கள் மற்றும் இலட்சக்கணக்கானோர்
அவர்களை நம்பியிருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் பெருமளவிலானோர் தங்களது வேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில்லுள்ள பெண்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி. பலர் வேலை இழக்கும் அபாயம்

பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில்

செவ்வாய், 11 அக்டோபர், 2022

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை – பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 42 பேர், திடீர் சுகயீனம் காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில் இன்று (11.10.2022) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரம் 6 முதல் 11 ஆம் வகுப்புரையான 13 மாணவர்களும், 29 மாணவிகளுமே மயக்கம், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று ஆசிரியர்கள் 
தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் தங்கியிருந்து சிகிச்சைப்பெறுவதாகவும், ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெறுவதாகவும், மாணவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை எனவும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு நேற்றும் (10.10.2022) குறித்த நோய் அறிகுறிகள் தென்பட்டதாகவும், அவர்கள் நேற்று (10.10.2022) மாலை கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில்

நாட்டிலிருந்து வெளிநாடு செல்பவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

திங்கள், 10 அக்டோபர், 2022

<

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நோக்கில் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
இதன்படி இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை (08) 241,034 ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 330,000 பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதே பணியகத்தின் இலக்காகும்.
இந் நாட்டில் வருடாந்தம் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை பொதுவாக இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் மூன்று இலட்சத்திற்கும் இடைப்பட்டதாக 
காணப்படும்.
மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2014ஆம் ஆண்டு அதிகளவானவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும், அந்த எண்ணிக்கை 300,703 ஆகவும் இருந்தது. 2016 முதல், வெளிநாட்டு வேலைகளுக்கான
 செல்வோரின் எண்ணிக்கை படிப்படையாக குறைவடைந்த நிலையில் 2020 இல், ​கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, குறித்த எண்ணிக்கை 53,711 ஆக குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


READ MORE - நாட்டிலிருந்து வெளிநாடு செல்பவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில்15 வயசு சிறுமி 19 வயசு காதலனுடன் தப்பி ஓடியவர்கள் கைது

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

திருமண மண்டபத்தில் வைத்து மணமக்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று.09-10-2022. இன்று பதிவாகியுள்ளது.சௌருபுர பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றிலேயே குறித்த சம்பவம்
 பதிவாகியுள்ளது.
அங்குலான காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது திருமண சம்பிரதாய உடையுடன் வயது குறைந்த தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தேசிய சிறுவர் 
பாதுகாப்பு அதிகார
சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட மணப்பெண்ணுக்கு 15 வயது , மணமகனுக்கு 19 வயது என தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் காதலுக்கு சிறுமியின் பெரிய தந்தை எதிர்ப்புத் தெரிவித்ததால், சிறுமி காதலனுடன் தப்பிச் சென்று மகொன பிரதேசத்தில் உள்ள உறவினர் 
வீட்டில் கணவன்
மனைவியாக வசித்து வந்துள்ளதாகவும் இதையடுத்து உறவினர்கள் தலையிட்டு திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மண்டபத்திற்குள் காவல்துறையினர் சென்றபோது, ​​தம்பதிகள் அங்கிருந்த விருந்தினர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக 
கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இளைஞனை மொரட்டுவ நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த நடவடிக்கை
 எடுக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில்15 வயசு சிறுமி 19 வயசு காதலனுடன் தப்பி ஓடியவர்கள் கைது

வீட்டுத் திட்டங்களை மீண்டும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சனி, 8 அக்டோபர், 2022

நாட்டில் கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த வீட்டுத் திட்டங்களை மீண்டும் தொடங்க எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும் மக்களுக்கு வசதியான வீட்டு வசதிகள் மற்றும் உரிமைப் பத்திரங்களை அரசாங்கம் வழங்கவுள்ளது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அமைச்சின் செயலாளர் பிரதீப் ரத்நாயக்க இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எனவே, அடுத்த இரண்டு வருடங்களில் 30,000 உரிமைப் பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டுத் தொகுதிகள் நிர்மாணப் பணிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும் 
அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடியை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளையில் மீண்டும் நாட்டில் அபிவிருத்திப் போரை ஆரம்பிக்க அரசாங்கம் 
தயாராக உள்ளது.
கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த வீட்டுத் திட்டங்களை மீண்டும் தொடங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
கொழும்பில் உள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க குறைந்தபட்சம் 200,000 அடுக்குமாடி குடியிருப்புகளை நாங்கள்
 நிர்மாணிக்க வேண்டும்
எவ்வாறாயினும், எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் இந்த இலக்கை அடைய அமைச்சு ஏற்கனவே குறிப்பிட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரி நிதியைப் பயன்படுத்தி சுமார் 260 நகர அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, மேலும் ஐந்து திட்டங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், “ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு” திட்டத்தின் கீழ் தனிநபர் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. பிரதேச செயலக மட்டத்தில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் நாடு 
முழுவதிலும் உள்ள 
ஒவ்வொரு கிராம நிர்வாகி பிரிவுக்கும் ஒரு வீடு உட்பட 15,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 

READ MORE - வீட்டுத் திட்டங்களை மீண்டும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி