வெங்காயத்தை நறுக்கும் போது நம்முடைய கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வரும். அது ஏன் தெரியுமா..?வெங்காயத்தில் ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய் உள்ளது. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது.
அதுமட்டும் இல்லாமல், வெங்காயத்தில் புரதச்சத்துக்கள்,
தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.
வெங்காயத்தை நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.உணவில் வெக்காயம், பூண்டு சேர்த்து சாப்பிட டான்ஸில், ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். மேலும் கொலஸ்ட்ரால்
குறையும்.
ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருட்களோடு வெங்காயத்தை சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும்.
வலி குறைந்துவிடும்
சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக