வைத்தியர்போல நாடகமாடி வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.இந்தச் சம்பவம் நிட்டம்புவ- வத்துப்பிட்டிவெல தள வைத்தியசாலையில் இடம்பெற்றிருக்கின்றது.
கடந்த சனிக்கிழமை குறித்த இந்தி பிரஜை வைத்தியசாலையின் பெண்கள் விடுதிக்குள்மருத்துவ உபகரணங்களை ஒரு பையில் வைத்துக் கொண்டு நுழைந்துள்ளார். இதன்போது பாதுகாப்பு
ஊழியர்களும், வைத்தியசாலை ஊழியர்களும் தடுத்தபோது,தாம் ஒரு நோயாளியை சந்திக்கவுள்ளதாகவும், தன்னை
மருத்துவர் என்றும் கூறியுள்ளார்.எனினும்
மருத்துவர்கள் பரிசோதிக்கும் நேரம் நிறைவடைந்ததுடன், குறித்த நபர் மீது
சந்தேகமும் எழுந்ததை தொடர்ந்து,
வைத்தியசாலையினால் பொலிஸாருக்க தகவல் வழங்கப்பட்டது. இதன்பின்னர் சம்பவ
இடத்திற்கு வந்த பொலிஸார் அந்த நபரை அழைத்து விசாரித்தபோது அவர் ஒரு இந்திய பிரஜை என்பதும்,அவர் வைத்தியர் அல்ல என்பதும் தொியவந்ததுடன், திஹாரியாவில் இலங்கை
பெண்ணை மணந்து வாழ்ந்து
கொண்டிருப்பதும் தொியவந்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுஎதிர்வரும் 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக