யாழ்ப்பாணம், நெல்லியடி முடக்காட்டுச் சந்தியிலிருக்கும் வீடொன்றில் 9 பவுண் நகை திருடப்பட்டுள்ளது.
வீட்டின் கதவு பூட்டப்படாமல் சாத்தப்பட்டிருந்த நிலையில் அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய திருடர்கள், அலுமாரிக்குள் வைக்கப்பட்டிருந்த 9 பவுண் நகையைத் திருடிச் சென்றுள்ளனர்.
வீட்டிலிருந்தவர்கள் காலையில் எழுந்து பார்த்தபோது, அலுமாரி திறக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
அதன் பின்னரே வீட்டில் நகை திருடப்பட்டதை அறிந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக