நாட்டில் வடமாகாணத்தில் நிலவும் கடும் வெப்பநிலையால் அவதிப்படும் மக்கள்

புதன், 8 மே, 2024

நாட்டில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் வீதியால் செல்வோருக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வவுனியா கிளையினர் குளிர்பானங்களை வழங்கியிருந்தனர்.
அண்மைக்காலமாக வட மாகாகணம் உட்பட பல இடங்களிலும் வெயிலின் உச்சத்தால்மக்கள் பெரும் அவதிப்படும்நிலை 
காணப்படுகின்றது.  
இந் நிலையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வவுனியா கிளையினர் வவுனியா மன்னார் வீதியில் செல்வோருக்கு 
குளிர்பானங்களை வழங்கியிருந்ததுடன் பலர் ஆர்வத்துடனும் வெயில் காரணமாகவும் குளிர்பானத்தை ஆவலுடன் வேண்டி பருகியதை 
காண முடிந்தது.என்பது குறிப்பிடத்தக்கதது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வடமாகாணத்தில் நிலவும் கடும் வெப்பநிலையால் அவதிப்படும் மக்கள்

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளில் வெள்ளையாக மாறிய கருப்பு நாய்

செவ்வாய், 7 மே, 2024

சில அரிய நோய்கள் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் தாக்குகின்றன. அதேபோல் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் ஒன்று 2 ஆண்டுகளில் முற்றிலும் வெள்ளையாக
 மாறியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக
 வலைதளங்களில் பரவி வருகிறது.
தோல் இயற்கையான நிறத்தை இழந்து வெளிர் வெள்ளை நிறமாக மாறும் நிலையை விட்டிலிகோ என்று அழைக்கப்படுகிறது. இந்த
 அரிய நோயால் சில மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் ஓக்லஹோமாவைச் சேர்ந்த ஸ்மித் என்பவரால் வளர்க்கப்பட்ட பஸ்டர் என்ற 4 வயது நாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் கருப்பாக இருந்தது.
ஆனால், விட்டிலிகோ நோயால் கடந்த 2 ஆண்டுகளில் படிப்படியாக நிறம் மாறி தற்போது முற்றிலும் வெண்மையாக மாறியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை reddit தளத்தில் வெளியிட்டு, இணையத்தில் வேகமாக 
பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளில் வெள்ளையாக மாறிய கருப்பு நாய்

நாட்டில் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

திங்கள், 6 மே, 2024

நாட்டில்வளிமண்டலவியல் திணைக்களம்.07-05-2024. நாளை  வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 
வடக்கு, மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், 
அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம்  
அதிக கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக அந்த அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது.  
மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 
வெப்பச் சுட்டெண் "கவனம்" கோரும் மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

நாட்டில் கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும் : மக்களுக்கு எச்சரிக்கை

ஞாயிறு, 5 மே, 2024

இலங்கையின் கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
அதன்படி கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் கடல் 
அலைகள், உயரம் (2.5 -3.0) மற்றும் அலையின் கால அளவு (12 - 16) வினாடிகள் வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.  
அத்துடன், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையில் கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் 
காணப்படுகின்றது. 
எனவே கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் கடற்றொழில் மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - நாட்டில் கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும் : மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் மன்னாரில் பிரதான வீதி ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்

சனி, 4 மே, 2024

நாட்டில் மன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான மன்னார் தலைமன்னார் பிரதான வீதி ஓரங்களில் மருத்துவ கழிவுகள் உட்பட பொலித்தீன் கழிவுகள் முறையற்றவிதமாக கொட்டப்பட்டுள்ளமை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.
 குறிப்பாக வீதி ஓரங்களில் பொலித்தீன் பைகளால் சுற்றப்பட்டு பாரிய அளவு குப்பைகள் வீதி ஓரங்களில் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டுள்ள நிலையில் அவை காற்று காரணமாக முழு பகுதியிலும் நிறைந்து 
காணப்படுவதுடன் மிருகங்களும் அவற்றை உண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
 குறிப்பாக மருத்துவ கழிவுகளும் முறையற்ற விதமாக கொட்டப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன் மாவட்டத்தின் பிரதான வீதியில் இவ்வாறான குப்பைகள் நீண்ட காலமாக கொட்டப்பட்டு
வருவதை மன்னார் பிரதேச சபை கவனத்தில் 
கொள்ளாமல் குப்பைகளை அகற்றாமல் செயற்படுவதை 
காணக்கூடியதாக உள்ளது.
 அதே நேரம் பொலித்தீன் பைகள் பிலாஸ்ரிக் போத்தல்கள் அதிகளவு கொட்டப்பட்டு காணப்படுகின்ற நிலையில் அவ்வப்போது
 பெய்யும் மழையின் போது டெங்கு நுளம்புகளும் பெருக கூடிய வாய்புக்கள் காணப்படுகின்றது.
எனவே அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உரிய விதமாக அகற்றுவதுடன் அப்பகுதிகளில் குப்பைகளை கொட்டும் நபர்களுக்கு எதிராக பிரதேச சபை மற்றும் சுகாதார ஊழியர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொது மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
  என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் மன்னாரில் பிரதான வீதி ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்

நாட்டில் கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

வெள்ளி, 3 மே, 2024

கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை 
வௌியிட்டுள்ளது. கல்பிட்டியில் இருந்து கொழும்பு,
 காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பொருந்தும் என குறித்த அறிக்கையில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
 இதன்படி, அந்த கடற்பகுதிகளில் 2.5 முதல் 3.0 மீற்றர் வரையான அலை உயரம் மற்றும் 12-16 வினாடிகள் வரை அலைகள் வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 இதன்காரணமாக கல்பிட்டியின் அந்த கடற்பகுதிகளில் கடல் அலைகள் கரையை அடையும் சாத்தியம் காணப்படுவதாக 
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்கரைகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 இந்நிலைமை காரணமாக குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகம் இது தொடர்பில் அவதானமாக
 இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கோரியுள்ளது.
கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பு குறித்து 
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. கல்பிட்டியில் இருந்து 
கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பொருந்தும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 இதன்படி, அந்த கடற்பகுதிகளில் 2.5 முதல் 3.0 மீற்றர் வரையான அலை உயரம் மற்றும் 12-16 வினாடிகள் வரை அலைகள் வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 இதன்காரணமாக கல்பிட்டியின் அந்த கடற்பகுதிகளில் கடல் அலைகள் கரையை அடையும் சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்கரைகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 இந்நிலைமை காரணமாக குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகம் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கோரியுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாட்டில் கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டு மக்களுக்க விடுத்துள்ள எச்சரிக்கை

வியாழன், 2 மே, 2024

இலங்கையின் பல மாநிலங்களின் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையின் அளவு கவனத்தில் கொள்ளவேண்டிய அளவில் இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, உள்ளன 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






READ MORE - வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டு மக்களுக்க விடுத்துள்ள எச்சரிக்கை