மாங்குளத்தில் . மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்தில் இடர்பாடு

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதிக்கு குறுக்காக பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்தில் இடர்பாடுகளை மக்கள்
 சந்தித்துள்ளனர்.
வீதிக்கு குறுக்காக மரம் முறிந்து விழுந்ததனால் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு வருகை தந்த 
கிராம மக்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் முள்ளியவளை காவல்து​றையினர் ஆகியோர் இணைந்து வீதியிலுள்ள மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - மாங்குளத்தில் . மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்தில் இடர்பாடு

முத்துஐயன்கட்டு இடது கரையில் தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம்

வியாழன், 29 ஏப்ரல், 2021

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில்
 29-04-2021.இன்று
ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம் 
அடைந்துள்ளன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - முத்துஐயன்கட்டு இடது கரையில் தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம்

யாழில் சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது பாடசாலை தனிமைப்படுத்தல்

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகாவித்தியாலயம் .26-04-2021.இன்று சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது பாடசாலை நிர்வாகமானது சனசமூக நிலையம் ஒன்றுக்கு விளையாட்டு நிகழ்வு நடத்துவதற்கு பாடசாலை மைதானத்தினை வழங்கியதன் காரணமாக இன்றைய தினம் குறித்த பாடசாலை தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.
நேற்றையதினம் சனசமுக நிலையத்தின் விளையாட்டு போட்டி  விமரிசையாக இடம்பெற்றதோடு பல நூற்றுக் கணக்கான மக்களும் அந்த விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த பாடசாலை,விளையாட்டு மைதானம் தனிமைப்
 படுத்தப்பட்டுள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - யாழில் சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது பாடசாலை தனிமைப்படுத்தல்

நாட்டில் தபால் திணைக்களத்தில் புதிதாக 3ஆயிரம் பேர் இணைப்பு

சனி, 24 ஏப்ரல், 2021

 நாட்டில் தபால் திணைக்களத்துக்கு புதிதாக 3,000 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், மாகாண மட்டத்திலேயே இணைக்கப்பட்டனர் என்று பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
கனிஷ்ட தபால் சேவைக்காக, நாளாந்த கொடுப்பனவின் அடிப்படையிலேயே புதிதாக ஊழியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
தபால் விநியோகம், அலுவலக உதவியாளர்கள் போன்ற பணிகளுக்காக இவர்கள் தபால் திணைக்களத்தில் இணைக்கப்பட்டனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டில் தபால் திணைக்களத்தில் புதிதாக 3ஆயிரம் பேர் இணைப்பு

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல்

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

நாட்டில் சுங்க திணைக்கள அதிகாரிகளுக்கும், தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று
 இடம்பெறவுள்ளது.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் தேங்காய் எண்ணெய் இறக்குமதிகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு 
இடம்பெறவுள்ளது.
அத்துடன் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, புற்றுநோயை ஏற்படுத்த கூடிய
 இரசாயனம் அடங்கியுள்ளதாக கூறப்படும் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் அடங்கிய ஏனைய கொள்கலன்களை இந்த 
வாரத்தில் மீள் ஏற்றுமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுங்கப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஃப்லடொக்ஸின் எனப்படும் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக உறுதிசெய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத 105 மெற்றிக் டன் தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்கள் அண்மையில் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
குறித்த தேங்காய் எண்ணெய் இறக்குமதி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் தேங்காய் எண்ணெய் கொள்கலன்களே இவ்வாறு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல்

ஒரு நாளில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் சாதனை

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஒரு நாளில் அதிகூடிய வருமானத்தை பெற்றுள்ளது
கடந்த திங்கட்கிழமையே இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் இவ்வாறு இலாபத்தினைப் பெற்று சாதனை
 படைத்துள்ளது.
வழமையாக நாளொன்றிற்கு 14,000 தொடக்கம் 15,000 கிலோ கிராமுக்கு இடைப்பட்ட மீன்களை விற்பனை செய்யும் கடற்றொழில் கூட்டுத்தாபனம், கடந்த (12) திங்கட்கிழமை 27 ஆயிரத்து 600 கிலோ கிராமுக்கும் அதிகமான மீன்களை விற்பனை செய்துள்ளது.
கடற்றொழில் கூட்டுத்தாபன வரலாற்றிலேயே இது வரையிலும் 20 ஆயிரம் கிலோ கிராமுக்கு அதிகமான மீன்களை விற்பனை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 

READ MORE - ஒரு நாளில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் சாதனை

நாட்டில் 5000 ரூபாய் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களு அறிவித்தல்

  சமூர்த்தி கொடுப்பனவு ரூ .5 ஆயிரம்  இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை (19) முதல் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி 
தெரிவித்தார்.
எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் 
மேலும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
“தற்போது, ​​இலங்கையில் 1,073 சமுர்தி வங்கிகளில் ரூ .5 ஆயிரம் என்ற சமூக பாதுகாப்பு நல உதவித்தொகையை அரசாங்கம் வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில் 23 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
திங்கள் கிழமைக்கு அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் அனைவருக்கும் இந்த கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய 
எதிர்ப்பார்த்துள்ளோம்.
இதற்கு தேவையான நிதியை சமுர்தி வங்கிகளுக்கு அனுப்பியுள்ளோம். இல்லையென்றால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை எங்களிடம் சமர்ப்பித்து தேவையான நிதிகளை அந்தந்த பகுதிகளுக்கு பெற்றுக் கொள்ளுமாறு நாம் கோரியுள்ளோம்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

READ MORE - நாட்டில் 5000 ரூபாய் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களு அறிவித்தல்