வானிலையில் இலங்கையின் ஏற்பட்ட திடீர் மாற்றம்

திங்கள், 3 ஜூன், 2024

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையானது தற்காலிகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு 
மாகாணங்களில் பல மழைக்காலங்கள் ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 
எவ்வாறாயினும் மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை
 பெய்யக்கூடும்.  
தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வானிலையில் இலங்கையின் ஏற்பட்ட திடீர் மாற்றம்

இலங்கையில் மீண்டும் பல பகுதிகளில் மின் வெட்டு அறிவிப்பு

ஞாயிறு, 2 ஜூன், 2024

நாட்டில் காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.  
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கூறுகையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி
 செய்வதற்கும் 
மின்சார உட்கட்டமைப்பின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வசிப்பவர்கள் அமைதியாக இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் மீண்டும் பல பகுதிகளில் மின் வெட்டு அறிவிப்பு

நாட்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பரில் வெளியாகும்

சனி, 1 ஜூன், 2024

நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.  
387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்கலாக 452,979 பரீட்சார்த்திகள் இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றியதாக அவர் கூறினார்.
 க.பொ.த (சா/த) பரீட்சைகள் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்றமை
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பரில் வெளியாகும்

யாழ்-வாழ்வக மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்

வெள்ளி, 31 மே, 2024

நாட்டில் க.பொ.த.(உ.த.) - 2023 (2024) பரீட்சைக்குத் தோற்றிய வாழ்வக மாணவர்கள் மூவருமே சித்தி பெற்றுள்ளனர்.
செல்வி சிவசக்தி லக்சிகா தமிழ், இந்து நாகரிகம், அரசியல் விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களிலுமே A சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் 97 வது இடத்தினையும் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
செல்வி வெற்றிவேல் ஜனுபா கர்நாடக சங்கீதத்தில் A சித்தியும் தமிழ் C, அரசியல் விஞ்ஞானம் S பெற்றுள்ளார்.
 இப் பரீட்சைக்குத் தோற்றிய மற்றுமொரு மாணவனான செல்வன் நவனீதன் கௌதமன் இந்து நாகரிகம், தமிழ் ஆகிய பாடங்களில் C சித்தியும் அரசியல் விஞ்ஞான பாடத்தில் S சித்தியும் பெற்றுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ்-வாழ்வக மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்

திடீரென இலங்கையில் அதிகரித்த மீன்களின் விலைகள்

வியாழன், 30 மே, 2024

நாட்டில்  ரிமால் புயல் காரணமாக கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடல் வள்ளங்கள் எவையும் மீன்பிடிக்க செல்லவில்லை.
இருந்த போதிலும் கரை வலை மீன் வள்ளங்கள் மீன் பிடி நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன. அம்பாறை 
மாவட்டத்தின் பெரிய நீலாவணை, கல்முனை , மருதமுனை, பாண்டிருப்பு ,பெரியநீலாவணை, நிந்தவூர் ,அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, தம்பிலுவில், பொத்துவில், பகுதிகளில் உள்ள 
மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் புயல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 பலத்த காற்று மற்றும் கடல் ​கொந்தளிப்பு தொடர்பில் அண்மைக்காலமாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
 விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் சந்தைகளும் மீன்கள் இன்மையால் மூடி காணப்படுகின்றன.
குறித்த மாவட்டத்தின் பெரிய நீலாவணை முதல் பொத்துவில் பகுதி வரையுள்ள கடற்பரப்பு உள்ளிட்ட கடற்பிராந்தியத்தில் மீன்களின் பிடிபாடு பெருமளவில் குறைவடைந்துள்ளது. இதற்கு 
காரணம் சடுதியாக
 ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் நிலவு வெளிச்சம் போன்ற காரணத்தினால் மீன்களின் பிடிபாடு வெகுவாகக் குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
 கடும் காற்றுக் காரணமாகக் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படுகின்றமை கடும் வரட்சியுடனான காலநிலை நிலவுகின்றமை ஆகிய காரணங்களே மீன்களின் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அத்தோடு ஒரு கிலோ விளைமீன் 1600 ரூபாவாகவும் 
பாரை மீன் ஒரு கிலோ 2400 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 1800 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ 1700 ஆகவும் சூடை மீன் 
ஒரு கிலோ 1000 ரூபாவாகவும்
 சுறா மீன் ஒரு கிலோ 2500 ரூபாயாகவும் வளையா மீன் 1500 ரூபா ஆகவும் நண்டு ஒரு கிலோ 1600 ரூபா ஆகவும் தற்போது மீனவர்களால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் இதர சில்லறை மீன் வகைகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
கல்முனை மாநகரை அண்டிய மருதமுனை நற்பிட்டிமுனை பாண்டிருப்பு கல்முனை சாய்ந்தமருது பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளிலும் ஏனைய நிந்தவூர் மாளிகைக்காடு மீன் சந்தைகளிலும் மீன் வரத்துக்கள் மிகவும் குறைவடைந்துள்ளமையால் மீன்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
 கடற்கரையை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகரிப்பில் மேற்படி சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை இப்பகுதியில் கடற் கருவாடுகள் ஆற்றுக்கருவாடுகளுக்கு கிராக்கி நிலவி வருகின்றமையும்
என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - திடீரென இலங்கையில் அதிகரித்த மீன்களின் விலைகள்

நாட்டில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

புதன், 29 மே, 2024

நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த 
தெரிவித்துள்ளார்.  
கல்விப் பொதுச் சான்றிதழ் ஏ லெவல் தேர்வு கடந்த ஜனவரி 4-ஆம் திகதி முதல் 31-ஆம் திகதி வரை நடைபெற்றது.  
அதன்படி, பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான பணிகளை பரீட்சை திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
346,976 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் உயர்தர மாணவர்களுக்கான ICTபுலமைப்பரிசில் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

செவ்வாய், 28 மே, 2024

நாட்டில் க.பொ.த (உயர்தர) தகவல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி நிதியம் இணைந்து 
வழங்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் – 2024/2025 இற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவுத்திகதி ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
 இந்தப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் தகுதி பெற்றுள்ள மாணவ மாணவிகள் தமது விண்ணப்பங்களை உரிய முறையில் நிரப்பி குறித்த 
திகதிக்கு முன்னர் தமது பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் செயலாளரின் பரிந்துரையுடன், வகுப்பாசிரியர்,
 பாடசாலை அதிபர்
, மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் பரிந்துரையுடன் செயலாளர், ஜனாதிபதி நிதியம், இலக்கம் 35, மூன்றாம் மாடி, லேக்ஹவுஸ் கட்டிடம், டீ. ஆர் விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மாத்திரம் அனுப்பிவைக்கவும்.
 கடித உரையின் இடது பக்க மேல் மூலையில் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் பெயர் மற்றும் பாடசாலை உள்வாங்கப்பட்டுள்ள கல்வி வலயத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டும்.
 இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தினம் மே மாதம் 22 ஆம் திகதி முடிவடைந்துள்ள போதிலும், கடந்த சில நாட்களில் நிலவிய பல்வேறு 
நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் மோசமான 
காலநிலை காரணமாக விண்ணப்பங்களை அனுப்ப முடியாத மாணவர்கள் அதிகமானோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் உயர்தர மாணவர்களுக்கான ICTபுலமைப்பரிசில் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு