நாட்டில் வெள்ள அபாயம் அவதானமாக இருங்கள் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

களுகங்கையின் உயர்ந்த பகுதிகளுக்கு 70மில்லிமீட்டர் அளவில் மழைவீழ்ச்சியுடன் வெள்ள அபாயத்திற்கான எச்சரிக்கை தொடர்ந்தும் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பொறியியலாளர் ஜி.டபிள்யு. ஏ. சகுரா தில்தாரா தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கடும் மழையுடன் கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்தில் வெள்ள அபாயத்திற்கு உட்பட்ட பிரதேசமாக கங்கையின் தாழ்நிலப் பகுதிகளும் அத்தனகலு ஓயாவின் தாழ்ந்த பிரதேசங்களும் கருத்திற்கொள்ள கூடியதாகவும், இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அவர்  சுட்டிக்காட்டினார்.  

அவ்வாறே இத்தாழ்ந்த பகுதிகளுக்கு ஊடாக செல்லும் பாதைகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக அவ்வீதிகளில் பயணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், களுகங்கையின் சிறிய ஆறு வழிந்தோடும் தாழ்ந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் கவனத்திற் கொள்ளுமாறு பொறியியலாளர் ஜி. டபிள்யு. ஏ. சகுரா தில்தாரா அறிவித்துள்ளார்.

தற்போது அத்தனகலு ஓயாவில் சிறிய வெள்ள நிலை காணப்படுவதுடன் தாழ்ந்த பிரதேசங்களான அத்தனகல்லை, கம்பஹா, ஜாஎல, கடான போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படும் தாழ்வான இடங்களில் சில வீதிகள் மேலும் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுவதாகவும் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் வாகனங்கள் இது தொடர்பாக மிகவும் அவதானமாக செல்லுமாறும் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பொறியியலாளர் ஜி. டபிள்யு. ஏ. சகுரா தில்தாரா கோரிக்கை விடுத்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக