நாட்டில் மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை என மக்கள் விசனம்

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

நாட்டில் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்ற போதிலும், தடையின்றி நீர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் போதிய மழைவீழ்ச்சி கிடைக்கவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
 சில பிரதேசங்களில் தொடர்ந்தும் வறட்சியான காலநிலை நிலவுவதே இதற்குக் காரணம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி 
தெரிவித்தார்.
 அதன் பிரகாரம் அம்பாறை, மொனராகலை, பிபில மற்றும் சீலத்தனை ஆகிய நீர் விநியோக முறைமைகளில் இருந்து கண்காணிப்பு 
முறைமையின் கீழ் நீர் விடுவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை என மக்கள் விசனம்

சிகரெட்டுக்கு இங்கிலாந்தில் தடை விதிக்க பிரதமர் ஆலோசனை

சனி, 23 செப்டம்பர், 2023

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை
 எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அவர் அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்துக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 
இதையடுத்து இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை விதிப்பது குறித்து ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2009-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலையை விற்க தடை விதிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.
 இது தொடர்பாக இங்கிலாந்து அரசின் செய்தி தொடர்பாளர் இ-மெயிலில் அனுப்பிய செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
 இங்கிலாந்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகைபிடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம். புகைப்பழக்கத்தில்
 இருந்து விடுபடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளோம். புகை பிடிப்பவர்களின் சதவீதத்தை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனக்குறியள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - சிகரெட்டுக்கு இங்கிலாந்தில் தடை விதிக்க பிரதமர் ஆலோசனை

யாழ் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்வதனால் மிக விரைவில் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்து தருமாறு தீவக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கான இறங்குதுறையாக குறிகாட்டுவான் இறங்கு துறையே உள்ளது. 
தற்போது குறிகாட்டுவான் இறங்கு துறை சேதமடைந்துள்ளமையால் , கனரக வாகனங்கள் இறங்குதுறைக்கு அண்மித்த பகுதிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 
அதனால் கனரக வாகனங்களில் நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கு கொண்டு செல்வதற்காக கொண்டு வரப்படும் , அத்தியாவசிய பொருட்கள் உட்பட கட்டட பொருட்களான மணல் , கம்பி , சீமெந்து ஆகியவை 
இறங்கு துறைக்கு சற்று தொலைவில் இறங்கி அங்கிருந்து 
மனித வலுவை பயன்படுத்தி தூக்கி சென்று படகுகளில்
 ஏற்ற வேண்டிய நிலைமை காணப்படுகிறது. அதனால் பொருட்களை கொண்டு செல்வோர் அதிக சிரமங்களை எதிர்கொள்வதுடன் 
அதிகளவான கூலியும் வழங்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர். 
அதேவேளை குறிகாட்டுவான் - நயினாதீவுக்கு இடையில் 
சேவையில் ஈடுபட்டு வந்த "கடற்பாதை" மிக மோசமாக பழுதடைந்துள்ளமையால் 
அதன் சேவையும் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளமையால் , நயினாதீவுக்கு பொருட்களை எடுத்து செல்வதில் 
சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 
நயினாதீவு நாக பூசணி அம்மன் மற்றும் நாக விகாரை ஆகியவற்றுக்கு அதிகளவான யாத்திரியர்கள் தினமும் செல்வதனால் ,பயணிகள் படகு சேவையில் பொருட்களை அதிகளவில் ஏற்ற முடியாத நிலைமை காணப்படுவதால் , நயினாதீவுக்கு பொருட்களை கொண்டு செல்வோர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். 
அதனால் மிக விரைவில் குறிகாட்டுவான் பாலத்தையும் , கடற்பாதையை புனரமைப்பு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். 
என்பதும் குறிப்பிடத்தக்கது


 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - யாழ் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை

பல பகுதிகளுக்கு கொழும்பின் எதிர்வரும் இருபத்தி மூன்றாம் திகதி நீர் விநியோகம் தடைப்படும்

வியாழன், 21 செப்டம்பர், 2023

கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 23-09-2023. திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 24 ஆம் திகதி காலை 6.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் சபை 
தெரிவித்துள்ளது.
 இதன்படி கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது.. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - பல பகுதிகளுக்கு கொழும்பின் எதிர்வரும் இருபத்தி மூன்றாம் திகதி நீர் விநியோகம் தடைப்படும்

பிரெஞ் இளைஞர் எலி ஒன்றை உயிருடன் பிடித்து, சாப்பிட்டுள்ளார்.

புதன், 20 செப்டம்பர், 2023

 பிரெஞ் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடனான விருந்து நிகழ்வொன்றின் போது    19-09-2023. அன்று  எலி ஒன்றை உயிருடன் விழுங்கியுள்ளார். 
இச்செயலுக்கு மிருகவதைக்கு எதிரான அமைப்பு ஒன்று வழக்கு பதிவு செய்துள்ளது.
 இச்சம்பவம் Thiers (Marseille) நகரில் இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் சிறிய எலி ஒன்றை உயிருடன் பிடித்து, பின்னர் அதனை தனது வாய்க்குள் கொண்டு சென்று அதனை உயிருடன் சாப்பிட்டுள்ளார். 
அதனை காணொளியாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்த இந்த காணொளி, மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
 அதேவேளை, La Fondation 30 Millions எனும் மிருகவதைக்கு எதிரான அமைப்பு மேற்படி சம்பவத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், குறித்த இளைஞன் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - பிரெஞ் இளைஞர் எலி ஒன்றை உயிருடன் பிடித்து, சாப்பிட்டுள்ளார்.

போதான வைத்தியசாலையில் கையை இழந்த மாணவி வைசாலி பாடசாலைக்கு சமூகமளித்தார்

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

யாழ் போதான வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் தாதியரின் அசண்டையீனம் மற்றும் கவனக்குறைவினால் தனது 
கையினை இழந்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவி சா.வைசாலி, மீண்டும் தனது கற்றலைத் தொடர்வதற்காக இன்று பாடசாலைக்கு சமூகமளித்தார்.
​அவரை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
வைசாலி கற்றலைத் தொடர்வதற்கும் அவர் பாடசாலைச் சமூகத்துடன் மீண்டும் ஒன்றித்து வாழ்வதற்கான அனைத்துவிதமான ஊக்கத்தையும் வழங்குவதாக பாடசாலைச் சமூத்தினர் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>
READ MORE - போதான வைத்தியசாலையில் கையை இழந்த மாணவி வைசாலி பாடசாலைக்கு சமூகமளித்தார்

தேசிக்காய் ஒன்றின் விலை இலங்கையில் சடுதியாக அதிகரிப்பு

திங்கள், 18 செப்டம்பர், 2023

இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 58 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன.
 மாத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 38 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், 
நுவரெலியா உள்ளிட்ட பெருந்தோட்ட பகுதிகளில் தேசிக்காய் 
ஒன்றின் விலை 58 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
 இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை 1200 ரூபாவாக 
பதிவாகியுள்ளது.
 ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும்,
 தம்புள்ளை 
பொருளாதார மத்திய நிலையத்திற்கு 17-09-2023.அன்றய   தினத்தில் 2000 கிலோகிராம் தேசிக்காய் மாத்திரமே கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
.என்பதும் குறிப்பிடத்தக்கது.                


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>READ MORE - தேசிக்காய் ஒன்றின் விலை இலங்கையில் சடுதியாக அதிகரிப்பு