உலகம் முழுவதும் இந்த லீப் வருடம் உருவானதற்குப் பின்னால் இருக்கும் வரலாறு

வியாழன், 29 பிப்ரவரி, 2024

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி 29 ஏன் வருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது தவறா அல்லது இதற்குப் பின்னால் ஏதாவது அறிவியல் இருக்கிறதா?
பூமி 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 வினாடிகளில் ஒரு சுற்றுப்பாதையை நிறைவு செய்கிறது. அதாவது பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் 365 1/4. இதில் 365 நாட்களை நாம் ஓராண்டாக எடுத்துக் கொள்கிறோம்.
மீதம் இருக்கும் 1/4 நாட்களை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த நாளை 28 நாட்கள் மட்டுமே இருக்கும் பிப்ரவரி மாதத்தில் சேர்த்து ஆண்டுக்கு 366 நாட்கள் எனக்
 கணக்கிடப்படுகிறது.
இதுதான் லீப் ஆண்டு என்று சொல்லப்படுகிறது. ஆகையால் இந்த கணக்குப்படி ஒவ்வொரு 4 வருடங்களுக்கும் ஒரு லீப் வருடம் வரும், அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் இருக்கும்.
கடைசியாக 2020 லீப் வருடமாக இருந்தது. அதன் பிறகு இந்த ஆண்டு அதாவது 2024 லீப் வருடமாக இருக்கிறது.லீப் டே இல்லை என்றால் என்ன ஆகும்? ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் லீப் நாள் சேர்க்கப்படாவிட்டால், பல சிக்கல்கள் ஏற்படலாம்.
லீப் நாள் முக்கியமானது, ஏனெனில் இது சூரிய வருடத்துடன் கலண்டர்.நாசாவின் கூற்றுப்படி, ஒரு வருடத்தில்5 மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 வினாடிகள் என்பது பெரிய விஷயமல்ல
.ஆனால் பல ஆண்டுகளாக அதைப் புறக்கணிப்பது பெரிய சிக்கல்களை உருவாக்கும். இதன் காரணமாக, வானிலை அமைப்பு
 கூட மாறக்கூடும்.
உதாரணமாக, கோடைக்காலமான ஜூலை மாதம், லீப் ஆண்டு இல்லை என்றால் சில நூறு ஆண்டுகளில் ஜூலை குளிர்கால மாதமாக
 மாறிவிடும்.நாம் பயன்படுத்தும் காலண்டர் ரோமன் நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது.
பண்டிகைகள் மற்றும் வானிலை காரணமாக, ரோமானியர்கள் நாட்காட்டியில் பல முறை மாற்றங்களைச் செய்தானர். முதல் காலெண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன.
பின்னர் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. முதலில் மார்ச் முதல் டிசம்பர் வரை மட்டுமே மாதங்கள் இருந்தன.
பின்னரே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் சேர்க்கப்பட்டன.
கிரிகோரியன் நாட்காட்டி
ஆங்கில மொழி சர்வதேச மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதால், கிரிகோரியன் நாட்காட்டி உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டர் ஆனது.
ஹிஜ்ரி நாட்காட்டி 
இந்த நாட்காட்டி இஸ்லாமிய நாடுகளின் புவியியல் இருப்பிடத்தை மனதில் கொண்டு இஸ்லாமிய மத நிபுணர்களால் உருவாக்கப்பட்டது.இது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி.
பௌத்த நாட்காட்டி
இதுவும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்காட்டி மற்றும் பௌத்தத்தில் வல்லுனர்களால் தயாரிக்கப்பட்டது.யூத நாட்காட்டி
இது சந்திரன் மற்றும் சூரியன் இருவரின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி.
சீன நாட்காட்டி
இதுவும் சந்திரன் மற்றும் சூரியன் இருவரின் இயக்கங்களின் அடிப்படையிலான காலண்டர் ஆகும்.
பஞ்சாங்கம் 
பஞ்சாங்கம் இந்தியாவில் மட்டுமின்றி நேபாளம், இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. இவை அனைத்தும் புவியியல் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
இவற்றைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் “பஞ்சாங்கம்” என்பதால் பஞ்சாங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன.இது தவிர, உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட காலண்டர்கள் புழக்கத்தில் உள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - உலகம் முழுவதும் இந்த லீப் வருடம் உருவானதற்குப் பின்னால் இருக்கும் வரலாறு

நாட்டில் மின்கட்டண குறைப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாமல் திணறும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

புதன், 28 பிப்ரவரி, 2024

நாட்டில்28-02-2024. இன்று பிற்பகல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடி மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் 
கலந்துரையாடினர். 
எவ்வாறாயினும், கலந்துரையாடலின் பின்னர், இன்று இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். 
எவ்வாறாயினும், மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மின்கட்டண குறைப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாமல் திணறும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

நாட்டில் யாழ் மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

யாழ்- மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என
 கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்தொழிலாளர்களுக்கு கடற்படையினர் 
தடை விதித்த
 நிலையில் , அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 
கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதை 
அடுத்து , அப்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட கடற்படையினர் 
அனுமதித்தனர்.
இந்நிலையில் தற்போது அப்பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி , விகாரையின் பின் பகுதிகளில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவித்துள்ளார்.
அத்துடன் அப்பகுதிக்கு அருகில் கடற்தொழிலாளர்கள் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் கடற்படையினர் அவர்களை அவ்விடத்தில் இருந்து துரத்தி வருகின்றனர் என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் யாழ் மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை

பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆறுகளில் அரைவாசி மாசடைந்தவையாக காணப்படுகின்றன

திங்கள், 26 பிப்ரவரி, 2024

இங்கிலாந்து   மற்றும் அயர்லாந்தின் ஆறுகள் மாசுபாட்டின் தாக்கத்தால் அவநம்பிக்கையான நிலையில் உள்ளன. இங்கிலாந்து அல்லது வடக்கு அயர்லாந்தில் நீர்வழியும் ஆற்று நீர் ஒட்டுமொத்த 
ஆரோக்கியமாக இருப்பதாக பட்டியலிடப்படவில்லை என்று திங்களன்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
 சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் விவசாய மற்றும் தொழில்துறை கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டின்
 தாக்கம் ஆறுகள் முன்னெப்போதையும் விட மோசமான
 நிலையில் இருப்பதாக ரிவர்ஸ் டிரஸ்ட் ஆண்டு அறிக்கை 
வெளிப்படுத்துகிறது.
 2022 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தால் பெறப்பட்ட நீர் கட்டமைப்பின் (WFD) தரவுகளின் அடிப்படையில், சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரின் நீர் தொழிற்சாலை வெளியீடுகளால் 
ஏற்படும் மாசுபாட்டின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள 
ஆறுகளில் பாதிக்கும் மேற்பட்டவை - 54% காணப்படுகிறது. இவை இரசாயன மற்றும் சுற்றுச்சூழல் சோதனைகளில் தேர்ச்சி பெறவில்லை.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆறுகளில் அரைவாசி மாசடைந்தவையாக காணப்படுகின்றன

நாட்டில் எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் பொருட்களின் விலைகள் குறையும்

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

நாட்டில் ரூபாயின் பெறுமதி வலுவடைந்தமையின் பிரதிபலனை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி கடந்த சில மாதங்களாக படிப்படியாக வலுவடைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ 
தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்தமையின் பலன், மார்ச் முதல் வாரத்தில் இருந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் என தான் நம்புவதாக 
அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் இந்த 
விடயம் தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடியுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் பொருட்களின் விலைகள் குறையும்

நாட்டில் கிளிநொச்சியில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி

சனி, 24 பிப்ரவரி, 2024

நாட்டில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணி தருமபுரம் பொலிஸ் நிலையத்தில்.24-02-2024. இன்றைய தினம் 
நடைபெற்றது. 
 கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் அப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் 
சைக்கிளுக்கான ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணிகள் 
முன்னெடுக்கப்பட்டது.
 இதன்போது, முச்சக்கர வண்டிகளுக்கான ஸ்டிக்கரிற்காக 400 ரூபாவும், மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணமாக 250 ரூபாய் கட்டணமாக அளவிடப்பட்டு இவர்களுக்கான ஸ்டிக்கர்கள்
 ஒட்டப்பட்டது.
 குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காகவும், வீதி விபத்துக்கள் மற்றும் குற்ற செயல்களை இலகுவாக இனம் காண்பதற்காகவும் ஒட்டப்படுவதாகவும், குற்ற செயல்களை இலகுவாக அடையாளம் 
காண்பதற்கு இது ஏதுவாக அமையும் எனவும், இதனால் பாரிய அளவிலான குற்றச் செயல்கள் மற்றும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கிளிநொச்சியில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி

மீனவர்கள் :கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்துள்ளள்ளனர் பொதுமக்கள் கவலையில்

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

கச்சத்தீவு திருவிழாவிழாவில்  இந்திய தரப்பிலிருந்து யாரும் பங்கேற்காத நிலையில் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வருகை தந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.  
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மதிய, மாநில அரசுகள் 
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் 
வலியுறுத்தியுள்ளனர்.  
தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை நீதிமன்றத்தின் செயற்பாட்டை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி தங்களுடைய படகுகளில் கருப்புக்கொடி கட்டி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் இலங்கை - இந்திய உறவை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் திருவிழாவை பக்தர்கள் புறக்கணித்து வருகின்றனர்.  
இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வருகை தந்துள்ள பக்தர்கள் திரும்பிச் செல் நேரிட்டதோடு, பணம் மற்றும் பொருட்கள் வீண் விரயமாகியுள்ளதாக கவலைத்
 தெரிவித்துள்ளனர்.  
இதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை ஏற்படுத்திருக்கலாம் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளது மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்பது  குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மீனவர்கள் :கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்துள்ளள்ளனர் பொதுமக்கள் கவலையில்

நாட்டில் விற்பனையாகும் சலவை பொருட்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

வியாழன், 22 பிப்ரவரி, 2024

இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சவர்க்காரம், கிருமிநாசினிகள், சலவைத்தூள்கள் உடலுக்கு 
மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த இரசாயனங்களால் சிறுநீரகநோய், புற்றுநோய், 
தைராய்ட் , கர்ப்பம் தொடர்பான உயர் இரத்த அழுத்தம் 
ஏற்பட வாய்ப்புள்ளது.
அத்தோடு இரத்தம் மற்றும் தாய்ப்பாலின் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு இந்த இரசாயனங்கள் பரவ வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள்
 கூறுகின்றனர்.
 மேலும் செக் குடியரசில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுத் துறை நடத்திய ஆய்வில் நீரை வடிய விடும்
 துணியால் செய்யப்பட்ட ஏப்ரன்கள், ரெயின்கோட்கள் போன்றவற்றிலும் மோசமான இரசாயனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் விற்பனையாகும் சலவை பொருட்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியில் கொவிட் தடுப்பூசி ஏற்றிய வர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

புதன், 21 பிப்ரவரி, 2024

 ஆராய்ச்சியில் பைசர், மொடர்னா மற்றும் அஸ்ட்ராஜெனிகா கொவிட் -19 தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இதயம், மூளை 
மற்றும் இரத்தம் உறைதலில் அரிதான பக்க விளைவு
 ஏற்பட்டுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான குளோபல் வாக்சின் டேட்டா நெட்வொர்க் நடத்திய ஆய்விலேயே குறித்த தகவல் 
வெளியாகியுள்ளது.
 அந்தவகையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ்,
 நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளைச் 
சேர்ந்த 99 மில்லியன் மக்களிடம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதன்போது பைசர், மோர்டானா மற்றும் அஸ்ட்ராஜெனெகா கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட மக்களிடம் 13 வகையான நோய்கள் இனம்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியில் கொவிட் தடுப்பூசி ஏற்றிய வர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் மின்சார கட்டணம் விரைவில் குறைக்க திட்டம் கஞ்சன விஜேசேகர

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

மின்சார கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் அவர்கள் முடிவெடுப்பார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மின்சார கட்டணம் விரைவில் குறைக்க திட்டம் கஞ்சன விஜேசேகர

இலங்கையின் மின் தேவை கடந்த சில மாதங்களாக அதிகரிப்பு

திங்கள், 19 பிப்ரவரி, 2024

இலங்கையில் கடந்த சில மாதங்களை விட மின்தேவை அதிகரித்துள்ளதாக மின்சார சபை 19-02-2024.இன்று தெரிவித்துள்ளது.  
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மின்சார சபையின்  பேச்சாளரான பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த பெப்ரவரி மாதத்தில் கடந்த சில நாட்களாக 46 கிகாவாட் மணித்தியால மின்சார தேவை பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அது 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.  
இதன்காரணமாக மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தும் போது முடிந்தவரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர்  நோயல் பிரியந்த மேலும் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையின் மின் தேவை கடந்த சில மாதங்களாக அதிகரிப்பு

நாட்டில் நுவரெலியாவில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை பாரிய வீழ்ச்சி

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

நுவரெலியாவில் 2000 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கரட்டின் விலை இன்று 360 ரூபாயாக 
குறைந்துள்ளது. 
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 360 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்தோடு, மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பினால் நுகர்வோரின் கொள்வனவு நிலை இன்னும் வழமைக்கு திரும்பாத
$ காரணத்தினாலும் கரட் உற்பத்தி அதிகமாகியிருப்பதாலும் சந்தையில் கரட்டின் விலை குறைந்துள்ளது. 
தற்போது நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவுவதால் மலையகத்தில் மரக்கறி உற்பத்தி முன்னரைப் போன்று சிறப்பாக அமைந்துள்ளது. 
 இந்நிலையில், கிட்டத்தட்ட அனைத்து மரக்கறி வகைகளின் விலைகளும் மலையகத்தில் குறைந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய வட்டாரத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்படுகிறது
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் நுவரெலியாவில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை பாரிய வீழ்ச்சி

யாழ்ப்பாணம் டெங்கினால் பெருமை பெற்றதாக தெரிவிப்பு

சனி, 17 பிப்ரவரி, 2024

  நாட்டின் அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்களாக யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தெரிவு 
செய்யப்பட்டுள்ளன .கண்டி மாவட்டத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் வீதம் தற்போது குறைவடைந்துள்ளதாக கண்டி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷான் மசாராச்சி தெரிவித்துள்ளார்
நாட்டிலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் கண்டி தேசிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வைத்தியர் தற்போது அது 5வது இடத்திற்கு குறைந்துள்ளதாகவும்
 தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த சில வருடங்களாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் வெற்றியடைந்தமையே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் 
என தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்த அறிக்கையின்படி, கண்டியிலிருந்து 10 பிரிவுகள் நாட்டின் அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி
 பிரிவுகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு தற்போது அந்த 
எண்ணிக்கை 02 ஆக குறைந்துள்ளது எனவும் அதன் பிரகாரம் கடந்த வருடம் 20% டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது அது 12% ஆக குறைந்துள்ளது.
இந்த அறிக்கைகளின்படி நாட்டின் அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்களாக யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - யாழ்ப்பாணம் டெங்கினால் பெருமை பெற்றதாக தெரிவிப்பு

நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள்: கிழக்கு ஆளுநரின் சாதனை

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

நாட்டில்  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாதக் காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
 யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்கள், வீடுகள் இன்றி இன்னல்களுக்கு
 முகம்கொடுத்து வந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரச அதிபர், திருக்கோயில் பிரதேச 
செயலாளர், அரச 
உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு 
கொண்டு வரப்பட்டது.
 ஆளுநர் செந்தில் தொண்டமான் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு, மக்களின் 
குறைகளை கேட்டறிந்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஐந்து மாதக் காலத்திற்குள் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்து அம்மக்களிடம் கையளித்துள்ளார்.
 திருக்கோவில் மாவட்ட மக்கள் தங்களது கோரிக்கையை குறுகிய காலத்தில் நிறைவேற்றியமைக்காக கிழக்கு மாகாண
 ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திருக்கோயில் பிரதேச செயலாளருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்
என்பது  குறிப்பிடத்தக்கது 
$
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள்: கிழக்கு ஆளுநரின் சாதனை

வருடாந்த இடமாற்றத்திற்கு வடமாகாணத்தில் விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவித்தல்

வியாழன், 15 பிப்ரவரி, 2024

வடக்கு மாகாணத்தில் வலயங்களுக்கு இடையிலான வருடாந்த (2023) இடமாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்கள் 19.02.2024( திங்கள்) புதிய பாடசாலைகளில் கடமையேற்க முடியும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதே போன்று வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம், வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி கல்வி வலயங்களில் இருந்து பதிலீடாக 
சேவையின் தேவை கருதிய எனும் பதத்துடன் 
இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மேன்முறையீட்டிற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ( இப்பட்டியல் வலயங்களூடாக மாகாணக் கல்வித் திணைக்களம் தயாரித்தது) 
மேன்முறையீட்டின் பதில் வரும்வரை கடமையாற்றிய பாடசாலைகளில் சேவையாற்ற முடியும் என மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஏதேனும் இடர்ப்பாடுகள் உள்ளவர்கள் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிதிச் செயலாளரும்,
 வடக்கு மாகாண இடமாற்ற சபை உறுப்பினருமான
   கி. இந்திரனுடனும் (0779543956), இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் 
சிரேஸ்ட துணைப் பொதுச் செயலாளர்  ஜெ. நிஷாகருடனும்( 0777291665) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டள்ளது. 
 என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வருடாந்த இடமாற்றத்திற்கு வடமாகாணத்தில் விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவித்தல்

இலங்கையில் முழுவதும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டு

புதன், 14 பிப்ரவரி, 2024

நாடு முழுவதும் பல பகுதிகளில் நாளாந்தம்  எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள்
 கூறுகின்றனர்.  
காலை 10.00 மணி வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் செலுத்தும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக
 இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் 
சுட்டிக்காட்டியுள்ளனர். 
எரிபொருள் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதால் காலை பத்து மணிக்கு முன்னர் பணத்தை டெபாசிட் செய்வதில் சிரமம் 
ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் காசோலை வசதியை 
கழகத்திடம் கோரிய போதிலும் இது தொடர்பில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்  விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இலங்கையில் முழுவதும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டு

கிழமைகள் உலகில் தோன்றிய சுவாரஸ்யமான கதை. எல்லோரும் வாசியுங்கள்

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

நாம் தற்காலத்தில் உபயோகிக்கும் கிழமைகள் எவ்வாாறு வந்தது என்றதைப்பற்றி ஒரு சுவாரஸ்யமான கதையே இன்று நாம் இந்த கட்டுரையில் காணவிருக்கின்றோம்.
தற்போது திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என கிழமைகள் நம் வழக்கத்திலுள்ளது. இந்நாட்களில் பொதுவாக நாம் ஆற்றும் காரியங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து ஒவ்வொரு 
கிழமையும் நாம் உண்ணும் உணவைக் கூட வேறு பிரித்து வைத்துள்ளோம்.
மனிதனின் வரலாறு ஆரம்பமான காலத்தில் கிழமைகளுக்குப் பெயர் கிடையாது. அப்போதெல்லாம் காலத்தை மாதமாகவே 
பிரித்திருந்தனர். 
மாதங்கள் வாரங்களாக கணக்கிடப் பட்டதும், வாரத்திற்கு நாட்களும் கிழமைகளும் பிரிக்கப்பட்ட கதையை பார்க்கலாம்… 
ஆரம்ப காலத்தில் பகல் – இரவு, சந்திரன் வளர்ச்சியைக்
 கொண்டு மாதத்தைக் கணக்கிட்டனர். ஆனால் கிழமைகள் உருவாக்கப்படவில்லை.
 ஒவ்வொரு மாதத் திலும் ஏராளமான நாட்கள் உள்ளன. அத்தனை நாட்களுக்கும் தனித் தனியாகப் பெயர் வைப்பதற்கு சாத்தியப்படவில்லை. மனிதர்கள் சமுதாயமாக கூடி வாழப் பழகிய பிறகு நகரங்களும்
, வாணிபமும் வளர்ந்தது. வாணிபம் செய்வதற்கு
 அதாவது சந்தை கூடிப் பொருட்களை வாங்கவும், விற்பனை செய்யவும் வசதியாக அவர்களுக்கு தனியாக ஒருநாள்
 தேவைப்பட்டது.
 அதற்காக அவர்கள் 10 நாட்களுக்கு ஒருநாள் சந்தை நாளாக ஆரம்பத்தில் ஒதுக்கினார்கள். பின்னர் ஏழு நாட்களுக்கு ஒருநாள் ஒதுக்கப்பட்டது. பண்டைக்காலத்து பாபிலோனியர்களே இதற்கு முன்னோடியாக
 இருந்தனர்.
 அவர்கள் ஒவ்வொரு ஏழாவது நாளையும் வணிகத்திற்கும், மத விசயங்களுக்கும் மட்டும் ஒதுக்கினர். அந்த நாட்களில் 
அவர்கள் இந்த இரண்டு அலுவல்களைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. யூதர்கள், பாபிலோனியர்களைப் பின்பற்றினர்.
 ஒவ்வொரு 
ஏழாவது நாளையும் மத விசயங்களுக்கு மட்டுமே 
அவர்கள் ஒதுக்கினர். இவ்வாறு இரு வாணிப நாட்களுக்கு
 இடைப்பட்ட காலம் (7 நாட்கள்) வாரம் என்று கணக்கில் 
கொள்ளப்பட்டது.
 வாரம் பிறந்த வழக்கிலேயே கிழமைகளும் தோன்றின. வாரம் கணக்கிடப் பழகியவர்கள் சந்தைக்கு அடுத்த நாளை ஒன்றாம் நாள், 
இரண்டாம் நாள் என்று எண்ணிட்டு வழக்கப்படுத்தினர். அடுத்த 7-வது நாள் மீண்டும் சந்தை வந்தது. வாரத்திற்கு 7 நாட்கள் என்ற 
முறையை கடைபிடித்த எகிப்தியர்கள், வாரத்தின் நாட்களுக்கு பெயர் சூட்டி அழைக்க ஆரம்பித்தனர்.
 அவர்கள் 5 கிரகங்களின் பெயர்களை கிழமைகளுக்கு சூட்டினர். மற்ற இரண்டு நாட்களும் சூரியனின் (ஞாயிறு) பெயராலும், சந்திரனின் (திங்கள்) பெயராலும் வழங்கப்பட்டது. ரோமானியர்கள், எகிப்தியர் 
வைத்த பெயர்களைப் பின்பற்றினர். மார்ஸ் அல்லது டியூரோமானியர்களின் யுத்த தெய்வம்.
அந்தப் பெயர் (டியூஸ்டே) செவ்வாய் கிழமையாயிற்று. மற்றோர் தெய்வத்தின் பெயர் வெனஸ், அது (வெனஸ்டே) புதன் கிழமையாயிற்று. இடியை உருவாக்கும் தெய்வமாக ரோமானி யர்கள் 
வழிபட்டது 
‘தர்’ தெய்வமாகும். அதன் பெயரே (தர்ஸ்டே) வியாழக்கிழமை. பரிக் என்பது ரோமானியர்களின் மற்றோர் தெய்வத்தின் மனைவி.
 அந்தப் பெயர் பிரைடே வெள்ளிக்கிழமை ஆயிற்று.
 சனிக் கிரகத்தின் பெயர் சனிக்கிழமை ஆயிற்று.
 சூரியன் உதயமான நேரத்திற்கும், மறையும் நேரத்திற்கும் இடைப்பட்ட காலம் பகலாகக் கணக்கிடப்பட்டது. ஒரு நள்ளிரவிலிருந்து 
அடுத்த நள்ளிரவு வரையுள்ள காலத்தை ரோமானியர் ஒருநாளாகக் கொண்டனர். அந்த முறையைத்தான் இன்றைய நாடுகள் பின்பற்றி வருகின்றன. அதேயே நாமும் பின்பற்றுகின்றோம்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் முன்னேற இவை அனைவரிடத்திலிம் வழக்கமாகும் ஓர் உலக பண்பாகவும் வந்துவிட்டது. இனி நாம் நாளை முதல் ஒவ்வொரு கிழமையும் புரிய வேண்டிய தொழில்களை நமது சமய வழக்கப்படி பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கிழமைகள் உலகில் தோன்றிய சுவாரஸ்யமான கதை. எல்லோரும் வாசியுங்கள்

தபால் கட்டணங்கள் கனடாவில் அதிகரிக்கப்படவுள்ளது

திங்கள், 12 பிப்ரவரி, 2024

தபால் கனடாவில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய தபால் திணைக்களம் இவ்வாறு கட்டணங்களை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.
 தபால் முத்திரைகளின் விலைகள் 7 சதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் சர்வதேச 
தபால் சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 உள்நாட்டு தபால் மற்றும் பதிவுத் தபால் கட்டணங்களும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி 
முதல் இவ்வாறு கட்டண அதிகரிப்பு பதிவாகும் என 
தெரிவிக்கப்படுகின்றது.
 பணவீக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை கவனத்திற் கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - தபால் கட்டணங்கள் கனடாவில் அதிகரிக்கப்படவுள்ளது

யாழ் தெல்லிப்பளை பிரதேசத்தில் ட்ரோன் பறக்கவிட்டவர் கைது

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

யாழ் தெல்லிப்பளை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெலிப்பளை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், ஆளில்லா விமானத்துடன் தெல்லிப்பளை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் தெல்லிப்பளை பிரதேசத்தில் ட்ரோன் பறக்கவிட்டவர் கைது

தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் சீனாவில் களைகட்டிய புத்தாண்டு கொணடாட்டம்

சனி, 10 பிப்ரவரி, 2024

சீனாவில் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.10-02-2024. இன்று முதல் 15-ஆம் தேதி வரை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் பீஜிங்கில் சீன
 ஊடக துறை சார்பில் நடத்தப்படும் புத்தாண்டு விழாவில் காலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சீன புத்தாண்டு டிராகனின் ஆண்டாக இருக்கும் என்பதால், தைரியம், வலிமை மற்றும் அதிர்ஷ்டம் ஏற்படும் என சீன மக்கள் 
கருதுகின்றனர்.
இந்நிலையில் அதனை வெளிப்படுத்தும் வகையில் சீன மக்கள் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன..
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் சீனாவில் களைகட்டிய புத்தாண்டு கொணடாட்டம்

நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படலாம் அபாய சங்கை ஊதுகிறது மின்சார சபை.

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

நாட்டில்உத்தேசிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்த வருடத்தில் நாட்டில் 
மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என இலங்கை 
மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தி திவால்நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார சபையின் அதிகாரிகள் பாராளுமன்ற விசேட குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் 
இதன்போது கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தொடர்பில் விடயங்கள் கேட்கப்பட்டன.
இதன்போது, கருத்து தெரிவித்த மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா, கடந்த அரசாங்கங்கள் எடுத்த சில தீர்மானங்கள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அமைவாக மின் உற்பத்தி நிலையங்கள் இயங்காததன் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவிக்க 
நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
செயற்திறன் ஆற்றல் வகைகளை பயன்படுத்தி எதிர்கால உற்பத்தித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்தார்
.என்பதும்  குறிப்பிடத்தக்கது
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படலாம் அபாய சங்கை ஊதுகிறது மின்சார சபை.

பேஸ் என்ற புதிய காலநிலை நிலை செயற்கைகோளை ஏவிய நாசா

வியாழன், 8 பிப்ரவரி, 2024

உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை இதுவரை இல்லாத வகையில் விரிவாக ஆய்வு செய்வதற்காக பேஸ் என்ற 
புதிய காலநிலை செயற்கைகோளை நாசா.08-02-2024. இன்று 
விண்ணில் செலுத்தியது. 
கேப் கனவெரலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைகோள் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இது, பூமியில் இருந்து 420 மைல்கள் உயரத்தில் பறந்தபடி கடற்பகுதி மற்றும் வளிமண்டலத்தை சுமார் 3 ஆண்டுகள் ஆய்வு செய்யும். இதில் 3 அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 
இரண்டு கருவிகள் மூலம் தினமும் பூமி துல்லியமாக படம்பிடிக்கப்படும். மூன்றாவது கருவி மூலம் மாதாந்திர அளவீடுகள் எடுக்கப்படும். சூறாவளி மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக 
தெரிவிக்கவும், வெப்பநிலை அதிகரிக்கும்போது பூமியின் மாற்றங்களை விவரிக்கவும், தீங்கு விளைவிக்கும் பாசிகள் எப்போது
 பூக்கும் என்பதை கணிக்கவும் இந்த செயற்கைக் கோள் மூலம் கிடைக்கும் தரவுகள் உதவும் என விஞ்ஞானிகள் 
தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பூமி கண்காணிப்பு செயற்கைகோள்களால் 7 அல்லது 8 வண்ணங்களில் பார்க்க முடியும். 
ஆனால் பேஸ் செயற்கைகோள் 200 வண்ணங்களில் பார்க்கும். இதன்மூலம் கடலில் உள்ள பாசி வகைகளையும் காற்றில் உள்ள
 துகள்களின் வகைகளையும் விஞ்ஞானிகள் அடையாளம் காண முடியும். செயற்கைகோளில் இருந்து இன்னும் ஓரிரு மாதங்களில் தரவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .என்பது  குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - பேஸ் என்ற புதிய காலநிலை நிலை செயற்கைகோளை ஏவிய நாசா

மட்டக்களப்பில் பெண் சட்டத்தரணி மற்றும் கணவன் மீது தாக்குதல்இருவர் கைது.

புதன், 7 பிப்ரவரி, 2024

மட்டக்களப்பு நகரில் நீதிமன்றத்திற்கு அருகாமையிலுள்ள சட்டத்தரணி ஒருவரின் காரியாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து பெண் சட்டத்தரணியையும் அவரது கணவரையும் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் கைது
 செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எச். முகமட் ஹம்ஸா உத்தரவிட்டார்.
இதனையடுத்து தாக்குதலுக்கு உள்ளான சட்டத்தரணியும் அவரது கணவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் 06-02-2024.
செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு 
நீதவான் நீதிமன்ற 
நீதவான் எம்.எச். முகமட் ஹம்சா முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மட்டக்களப்பில் பெண் சட்டத்தரணி மற்றும் கணவன் மீது தாக்குதல்இருவர் கைது.

நாட்டில் மாங்குளத்தில் மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ள இலவச அம்புலன்ஸ் சேவை

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அ ம்புலன்ஸ் சேவை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
இதேவேளை முள்ளியவளை, மணலாறு பகுதிகளிலும் சேவை பல நாட்களாக இடம்பெறவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
 கடந்த 3 மாதங்களாக மாங்குளம் பகுதியில் குறித்து
 சேவை இல்லாமை காரணமாக அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பல்வேறு பிரதேச மக்கள் பெரும் துயரங்கங்களை சந்தித்து
 வருகின்றனர். 
 குறிப்பாக மாங்குளம் பிரதேசத்தை அண்டிய பாண்டிய குளம், நட்டாங்கண்டல், மல்லாவி, கோட்டைக்கட்டிய குளம், அம்பலபெருமாள்குளம், அம்பகாமம், தட்சடம்பன், மற்றும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 1990 எனும் இலவச அம்புலன்ஸ் சேவையை நாளாந்தம் மக்கள் பெற்று வரும் நிலையில் தற்போது மூன்று மாதங்களாக இந்த ஆம்புலன்ஸ் சேவைகளை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் 
துயரங்களிற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், சிரமங்களையும் 
எதிர்கொள்கின்றனர். 
குறிப்பாக நட்டாங்கண்டல் இருந்து வைத்தியசாலைக்கு செல்ல வேண்டுமெனில் 3000 ரூபாய் முச்சக்கர வண்டிக்கு செலுத்தி
 செல்லவேண்டும். அதேவேளை, உரிய நேரத்துக்குள் சிகிச்சையை பெற வேண்டிய நோயாளர்கள் உயிரிழக்கும் அபாய 
நிலையும் ஏற்படுகிறது. 
இந்த சேவையானது மக்களிற்கு இன்றியமையாததாகின்றது. மேலும், A9 வீதியில் கொக்காவில் தொடக்கம், மாங்குளம் வரை அதிகளவான 
விபத்துக்கள் பதிவாகின்றது. இதன்போது, வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சியில் உள்ள 1990 அம்புலன்ஸ் சேவையையே பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
 இதேபோன்று முள்ளியவளை மற்றும் மணலாறு பகுதியை அண்டிய பகுதி மக்களும் இந்த சேவையை பெற முடியாத நிலையில் உள்ளனர். கடந்த 3 மாதங்களிற்கு முன்னர் மாங்குளம் பகுதியிலிருந்த அம்புலன்ஸ் முள்ளியவளைக்கு மாற்றப்பட்டுள்ளது. 
ஏற்கனவே அங்கு சேவையில் ஈடுபட்ட வாகனம் பழுதடைந்த நிலையில் அனுப்பப்பட்ட மற்றய வாகனமும் 
பழுதடைந்துள்ளது.
 பழுதடைந்த வாகனங்களை விரைவாக திருத்தி சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மாங்குளத்தில் மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ள இலவச அம்புலன்ஸ் சேவை

இலங்கை முழுவதும் பாண் எடை தொடர்பில் சுற்றிவளைப்பு

திங்கள், 5 பிப்ரவரி, 2024

இலங்கை முழுவதும்  பாண் எடையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க பாண் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்டறய திங்கட்கிழமை (05) முதல் நாடு முழுவதும் சுற்றிவளைப்பு 
மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகாரசபை 
தெரிவித்துள்ளது.
 அதன்படி, ஒரு இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என குறித்த வர்த்தமானி அறவித்தலில்
 குறிப்பிடப்பட்டுள்ளது.
 அரை இறாத்தல் பாணின் பரிந்துரைக்ககப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
 மேலும், பாணின் எடையை காட்சிப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து கடைடகளுக்கும் பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பாண் விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராக.05-02-2024. திங்கட்கிழமை முதல் சுற்றிறிவளைப்புகளின் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சப்பை தெரிவித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - இலங்கை முழுவதும் பாண் எடை தொடர்பில் சுற்றிவளைப்பு