நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்

செவ்வாய், 31 அக்டோபர், 2023

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக 
குறைந்துள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல்3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஒடோ டீசல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 356 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 431 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மண்ணெண்ணெய் 07 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 249 ரூபாவாக அதிகரித்துள்ளது.
 இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக, லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்த இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

திங்கள், 30 அக்டோபர், 2023

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் 29-10-2023.அன்று  மாலை 
உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் தலைமன்னார் கடற்படை முகாமில் மலேரியா பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று பகல் 
குறித்த 23 இந்திய மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில்
 நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் 
ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்த இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

நாட்டில் ஹப்புத்தளையில் மண்சரிவு எச்சரிக்கை ஐந்து குடும்பங்கள் வெளியேற்றம்

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

நாட்டில் மத்திய மாகாணத்தின் பலப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால்  ஹப்புத்தளை பிரதேசத்தில் மண்சரிவு 
ஏற்பட்டுள்ளதாக ஹப்புத்தளை நிர்வாக கிராம அதிகாரி ஜகத் லியனகே தெரிவித்துள்ளார். 
இதன்காரணமாக  அப்பிரதேசத்தில் வசிக்கும் 5 குடும்பங்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டு,  உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
குறித்த அனர்த்தத்தினால் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த இடத்தை ஆய்வு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும்
  குறிப்பிட்டார்.  
இது தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்டு வருகின்றமை என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாட்டில் ஹப்புத்தளையில் மண்சரிவு எச்சரிக்கை ஐந்து குடும்பங்கள் வெளியேற்றம்

பல நாடுகளில் வானில் இன்று நிகழவுள்ள இவ்வருடத்தில் இறுதி நிகழ்வு

சனி, 28 அக்டோபர், 2023

பல நாடுகளில் 28-10-2023.இன்று சனிக்கிழமை இரவு நேரத்தில் பகுதி சந்திர கிரகணம் நிகழும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியலாளரும், விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
 இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதி, பசிபிக், அத்திலாந்திக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் மற்றும் அந்தாட்டிக்கா ஆகிய 
நாடுகளில் தென்படும்.
 இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்களை உள்ளடக்கிய இவ் வருடத்திற்கான கடைசி கிரகணம் இதுவாகும் 
என குறிப்பிட்டார்.
 இன்றைய தினம் இரவு 11.32 மணிக்கு ஆரம்பமாகும் முதல் சந்திர கிரகணம் 29 ஆம் திகதி அதிகாலை 3.56 மணிக்கு 
நிறைவடையும்.
 இந்தக் கிரகணம் 4 மணி 25 நிமிடங்கள் நிகழும். பூமியின் இருண்ட நிழல் சந்திரன் மீது விழுவது, நாளை அதிகாலை 1:05 மணிக்கு தொடங்கி 02:24 மணி வரை நிகழும் என தெரிவித்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - பல நாடுகளில் வானில் இன்று நிகழவுள்ள இவ்வருடத்தில் இறுதி நிகழ்வு

சமுர்த்தி நிவாரணம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் மஸ்கெலிய தோட்டப் பகுதி

வெள்ளி, 27 அக்டோபர், 2023

மஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் சாமிமலை கவரவில கிராம சேவகர் பிரிவிலுள்ள ஆறு தோட்டங்களை சேர்ந்த மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் கிடைக்கவில்லை என மக்கள் 
குற்றச்சாட்டியுள்ளனர்.
கவரவில , பாக்றோ, சின்ன சோளங்கந்த, பெரிய சோளங்கந்த, மல்லியப்பு, டீசைட் ஆகிய தோட்ட மக்களுக்கே இவ்வாறு சமுர்த்தி
 நிவாரணத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கவலை 
வெளியிட்டுள்ளனர்.
 இது தொடர்பில் பிரதேச மக்கள் தெரிவிக்கையில், “அரசாங்கத்தால் வழங்கப்படும் சமுர்த்தி நிவாரணம் எமது தோட்டங்களுக்கு
 பொறுப்பான உரிய அதிகாரிகள்தான் வழங்காது 
புறக்கணிக்கப்படுகிறது.
சமுர்த்தி நிவாரணம் தொடர்பில் அரசாங்கம் உரிய வகையில் செயற்பட்டாலும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் நோர்வூட் சமூர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் பாகுபாடுடனே செயற்படுகின்றனர்.
சமுர்த்தி அதிகாரிகளின் தரகர்களாக செயல்படுபவர்களின் சிபாரிசுகளுக்கு அமையவே குறித்த நிவாரணம் வழங்கப்படுகிறது.
குறிப்பாக இப்பிரதேசத்திலுள்ள தரகர்களின் உறவினர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மாத்திரமே சமுர்த்தி நிவாரணம் 
கிடைக்கப்பெறுகிறது.
வறுமை கோட்டின் கீழ் வாழும் எமக்கு சமுர்த்தி நிவாரணம் கிடைப்பதில்லை. இதனால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறோம்.
இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய 
நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களுக்கு
 நியாயமான முறையில் கிடைக்கப்பெற வேண்டிய சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுத்தர வேண்டும்'' எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது




READ MORE - சமுர்த்தி நிவாரணம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் மஸ்கெலிய தோட்டப் பகுதி

கிரிப்டோ கரன்சியை கொழும்பு துறைமுக நகரத்தில் பயன்படுத்த அனுமதி

வியாழன், 26 அக்டோபர், 2023

கொழும்பு துறைமுக நகரத்தில் இரண்டு கிரிப்டோ கரன்சி பரிமாற்றங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.  
பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவில் துறைமுக நகர ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. 
 அதன்படி, இந்த விவகாரம் குறித்து இலங்கை மத்திய வங்கியின் கருத்தைப் பெற நிதிக் குழு பரிந்துரைக்கப்பட்டது.
 என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கிரிப்டோ கரன்சியை கொழும்பு துறைமுக நகரத்தில் பயன்படுத்த அனுமதி

இலங்கையில் மின்கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மீண்டும் வரிசை யுகம் வரலாம்

புதன், 25 அக்டோபர், 2023

மின்சார கட்டண அதிகரிப்பு மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத சுமை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும் குறுகிய காலத்துக்காவது இதனை தாங்கிக்கொள்ளாவிட்டால் மீண்டும் வரிசை 
நிலைமைக்கு 
செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
வங்குரோத்து அடைந்திருக்கும் நாட்டை அதில் இருந்து மீட்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 
தனது அரசியல் 
அனுபவம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் இருக்கும்
 தொடர்புகள் மூலம் பாெருளாதார நெருக்கடியை போக்கிக்கொள்ள உதவிகளை பெற்று வருகிறார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்காக நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் முடிந்தளவு பூரணப்படுத்தி இருக்கிறது. அதில் இடம்பெற்ற சில குறைபாடுகள் காரணமாக இரண்டாம் கட்ட உதவியை பெற்றுக்கொள்வதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.
இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அதற்கான இணக்கப்பாடு தற்போது ஏற்பட்டிருக்கிறது.நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவி இலங்கைக்கு வழங்குவதற்கு நாணய நிதியத்தின் செயற்குழு சபை மட்டத்தில் இணக்கப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக நாணய நிதியத்தின் பேச்சாளர் பீடர் புறூக் தெரிவித்திருக்கிறார்.
எனவே இந்த உதவிகள் கிடைக்கப்பெற்று, பொருளாதார நிலைமை படிப்படியாக சரி செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். நாடு வங்குராேத்து நிலைக்கு செல்ல ஜனாதிபதி காரணமில்லை.
வங்கு அடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்பவே ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றார். அதனால் மக்கள் பொருளாதார 
நெருக்கடி நிலையில் இருக்கும் இந்த 
சந்தரப்பத்தில் 
மின் கட்டணம் மற்றும் ஏனைய கட்டண அதிகரிப்புகள் 
தாங்க முடியாத சுமையாகும் என்பதை நாங்கள்
 ஏற்றுக்கொள்கிறோம். இருந்தபோதும் குறுகிய 
காலத்துக்காவது இதனை பொறுத்துக்கொள்ள வேண்டும்,
 இல்லாவிட்டால் மீண்டும் 
கடந்த வருடத்தில் இடம்பெற்றதைப்போல் எரிபொருள், எரிவாயு பெறுக்கொள்ள வரிசையில் இருக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இலங்கையில் மின்கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மீண்டும் வரிசை யுகம் வரலாம்

சரக்கு ஏற்றுமதி இலங்கையின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி

செவ்வாய், 24 அக்டோபர், 2023

நாட்டில் செப்டம்பர் 2022 உடன் ஒப்பிடுகையில், 2023 செப்டம்பரில் இலங்கையின் சரக்கு ஏற்றுமதி 11.88% குறைந்து 951.5 மில்லியன் அமெரிக்க
 டொலர்களாக உள்ளது. 
இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, இந்த விடயம் வெளியாகியுள்ளது. 
மேலும், ஆகஸ்ட் 2023 இல் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 14.94% குறைவாகும்.   குறிப்பாக ஆடைகள், ஜவுளி, மற்றும் ரப்பர் தொடர்பான பொருட்கள், தேங்காய் மற்றும்
 தேங்காய் தொடர்பான பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி
 குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



READ MORE - சரக்கு ஏற்றுமதி இலங்கையின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு என்பது ரூபா சரிவு

திங்கள், 23 அக்டோபர், 2023

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.78.50 விற்பனை செய்யப்படுகிறது.
 என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு என்பது ரூபா சரிவு

நாட்டில் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் சஜித் கடும் விசனம்

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

நாட்டில் வரி செலுத்த வேண்டிய மக்களிடம் உரிய முறையில் வரி அறவிடாமல் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 
தெரிவித்துள்ளார்.  
பொரளை இளைஞர் பௌத்த சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 111வது இலங்கை மயான பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு 
தெரிவித்தார்.
போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையை பிரபலப்படுத்தும் நோக்கில் அந்த நிறுவனங்களிடம் வரி அறவிடாமல் அரசாங்க 
அமைச்சர்கள் 
ஊடாக புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள சில அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் சஜித் கடும் விசனம்

வெள்ளத்தில் கொழும்பு மாநகரம் மூழ்குவதை தடுக்க தேவையான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

சனி, 21 அக்டோபர், 2023

கொழும்பு மாநகரை வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான 
திட்டத்தை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு 
பரிந்துரைத்துள்ளது. 
அண்மையில் கூடிய நாடாளுமன்றத்தின் முறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குழு இந்த உத்தரவை 
பிறப்பித்துள்ளது. 
இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு நகரின் பல இடங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இதனால் 
பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் கடுமையாக
 பாதிக்கப்பட்டுள்ளன.  
நகரவாசிகள் மட்டுமின்றி நகருக்கு நாள்தோறும் வரும் இலட்சக்கணக்கான மக்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தின் வழிவகைகள் குழுவின் கவனத்துக்கு கொண்டு 
செல்லப்பட்டது.  
இந்நிலையில்கொழும்பு மாநகரம் மழைநீரில் மூழ்குவதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த திட்டத்தை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு குழு பரிந்துரை செய்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வெள்ளத்தில் கொழும்பு மாநகரம் மூழ்குவதை தடுக்க தேவையான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

நாட்டில் அதிகரிக்கிறது உணவுப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளின் விலை

வெள்ளி, 20 அக்டோபர், 2023

 இலங்கையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் உணவக உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி , ரைஸ், கொத்து மற்றும் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாட்டில் அதிகரிக்கிறது உணவுப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளின் விலை

நாட்டில் பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை

வியாழன், 19 அக்டோபர், 2023

நாட்டில் 2024 ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் ஆரம்ப மாணவர்களை உள்ளடக்கும் வகையில் பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த 
தெரிவித்துள்ளார். 
ஒக்டோபர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உலக உணவுத் திட்டத்தின் ஏற்பாட்டில் “உலகப் பள்ளி உணவுத் திட்டத்தின்” முதலாவது உலகளாவிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
2030 ஆம் ஆண்டில், 4.1 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கிய இலவச பள்ளி மதிய உணவு வழங்கப்படும் என்றும், பட்ஜெட் ஒதுக்கீட்டை 204 மில்லியன் டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் 
அமைச்சர் குறிப்பிட்டார்.  
இதன்படி அடுத்த ஆண்டு அரசுப் பள்ளி சத்துணவு உதவி நிதியம் ஏற்படுத்தப்படும் என்றும், அது தொடர்பான சட்டத்தை அறிமுகம் செய்ய எடுக்கப்பட்ட கொள்கை முடிவை சட்ட வரைவுத் துறை ஏற்கனவே தயாரித்துள்ளது எனவும் அவர் கூறினார். 
உலக உணவுத் திட்டம், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா நிறுவனம் (USAID) மற்றும் உள்ளூர் வர்த்தகத் துறை மற்றும் 
அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவை இந்தப் பள்ளி 
உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை

நாட்டில் எலிக் காய்ச்சல் குறித்து விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

புதன், 18 அக்டோபர், 2023

நாட்டில் எலிக்காய்ச்சலின் நிலை குறித்து.18-10-2023. இன்று  விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 
சுகாதார மேம்பாட்டுப் பிரிவு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி இது தொடர்பில் அறிவித்துள்ளது. இதன்படி  நோயைத் தடுப்பது, தொற்றுக்குப் பிறகு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு போன்ற பல விவரங்கள் இதன்போது  வலியுறுத்தப்பட்டுள்ளன. 
செய்தியாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த கலாநிதி துஷானி டபரேரா, "ஒவ்வொரு ஆண்டும் 8000 லெப்டோஸ்பிரோசிஸ் வழக்குகள் பதிவாகின்றன. 125 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த வருடத்தில் இதுவரை 7000 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 
குறிப்பாக விவசாயம் அதிகம் நடக்கும் மாவட்டங்களில் இந்நோய் பதிவாகியுள்ளது. குறிப்பாக 20 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு எலிக்காய்ச்சல் அதிகமாக பரவுகிறது.  டெங்கு போன்ற தொற்றுநோய்களின் போது எலிக்காய்ச்சல் அதிகமாக உள்ளது என்பதை நினைவில் 
கொள்ள வேண்டும். 
இந்த காய்ச்சலால் 05 வீதமான நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான உயிரிழப்பைத் தடுக்க ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பெறுவது 
அவசியம். கூடிய விரைவில் சிகிச்சை பெற வேண்டும். 
விவசாயம் மற்றும்
 நெல் அறுவடை செய்பவர்கள் இருவரும் சுகாதார பரிந்துரைகளின்படி இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார். 
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாட்டில் எலிக் காய்ச்சல் குறித்து விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

வடகிழக்கு நாட்டில் வரும் இருபத்தி ஐந்தாம் தேதிக்குள் பருவமழை க்கு வாய்ப்புள்ளதாக தகவல்

செவ்வாய், 17 அக்டோபர், 2023

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து வருவதால்,  வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் 
தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் சராசரியாக அக்டோபரில் 177.2 மி. மீ. மழையும் நவம்பரில் 178.8 மி.மீ , டிசம்பரில் 92 மி.மீ. மழையும் பெய்வது இயல்பானதாகும். வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 448 மி.மீ மழை பெய்யும் 
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வடகிழக்கு நாட்டில் வரும் இருபத்தி ஐந்தாம் தேதிக்குள் பருவமழை க்கு வாய்ப்புள்ளதாக தகவல்

கச்சா எண்ணெயின் விலை உலக சந்தையில் அதிகரிக்க வாய்ப்பு

திங்கள், 16 அக்டோபர், 2023

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 5.7% அதிகரித்து 91.20 டொலராக பதிவாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடி மற்ற பகுதிகளுக்கும் பரவ 
வாய்ப்புள்ளதால், கச்சா எண்ணெய் சந்தைக்கு இது நல்ல செய்தி அல்ல என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கச்சா எண்ணெயின் விலை உலக சந்தையில் அதிகரிக்க வாய்ப்பு

நாட்டில் மருந்து விநியோகம்: நெருக்கடியை உருவாக்கிய நிறுவனத்திற்கு ஓடர்கள் ரத்து

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

மருந்து விநியோகம் தொடர்பில் பாரிய பிரச்சினையில் உள்ள நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் உடனடியாக 
இடைநிறுத்தி ரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சர் 
கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் 
அறிவித்துள்ளார்.
 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அனைத்து விசாரணைகளும் நிறைவடையும் வரை இந்த நிறுவனத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
 Isolez Bio Tech Pharma எனப்படும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவுகளை இடைநிறுத்தவும் ரத்து செய்யவும் அத்துடன் அதற்கேற்ப பெறப்படும் பொருட்களையும் இடைநிறுத்தவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
 இந்த மருந்து நிறுவனம் தொடர்பில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு
 முறைப்பாடுகள் அனுப்பப்பட்டு விசாரணைகள் கோரப்பட்டு
 சந்தேகத்திற்குரிய
 பொருட்களை அந்த நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் அவ்வாறான பொருட்கள் கிடைக்கப்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 அத்துடன், இந்த பிரச்சினைக்குரிய மருந்து நிறுவனம் மற்றும் சம்பவம் தொடர்பில் சட்ட ஆலோசனை வழங்குமாறும் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மருந்து விநியோகம்: நெருக்கடியை உருவாக்கிய நிறுவனத்திற்கு ஓடர்கள் ரத்து

நாட்டில் வறட்சியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு அடுத்த மாதம் இழப்பீடு

சனி, 14 அக்டோபர், 2023

நாட்டில் வறட்சியினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு அடுத்த மாதம் இழப்பீடு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 விவசாயிகளுக்கு காலதாமதமின்றி உரம் உரிய நேரத்தில் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 அதேபோல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் கடந்த திங்கட்கிழமை முதல் உரவிநியோகம் இடம்பெற்றுவருகின்றது. 
எந்த இட்திலும் உரப் பற்றாக்குறை ஏற்டாதவாறு உர மானியம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
 வவுனியா பெரியகட்டு கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய 
அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வறட்சியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு அடுத்த மாதம் இழப்பீடு

நாட்டுக்கு தரமற்ற Antibiotic தடுப்பூசிகளை கொண்டு வந்த அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு

வெள்ளி, 13 அக்டோபர், 2023

 

தரமற்ற Antibiotic தடுப்பூசிகளை இறக்குமதி செய்து போலி ஆவணங்களை தயாரித்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் 13-010-2023.இன்று 
உத்தரவிட்டுள்ளது.
 குறித்த நபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாளிகாகந்த நீதவான் திருமதி லோச்சனா அபேவிக்ரம குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மேலும் உத்தரவிட்டுள்ளார்.
 லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜை சக்தி அமைப்பு மற்றும் சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்பினரால் குற்றப் 
புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய
 மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான 
உண்மைகளை தெரிவித்த போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டுக்கு தரமற்ற Antibiotic தடுப்பூசிகளை கொண்டு வந்த அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு

கைக்கடிகார தொழிற்றுறை சுவிஸ் இந்தியாவை அடுத்த வளர்ச்சி சந்தையாக பார்க்கிறது

வியாழன், 12 அக்டோபர், 2023

சுவிஸ் கை மணிக்கூட்டு தொழில்துறையானது, வரும் ஆண்டுகளில் இந்தியா ஒரு சிறந்த வாய்ப்புள்ள சந்தையாக அதிக நம்பிக்கை 
கொண்டுள்ளது.
 கூடுதலாக, ஆன்லைன் வர்த்தகத்தை விட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை தொடர்ந்து முக்கியமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
 வியாழனன்று ஆலோசனை நிறுவனமான டெலாய்ட் வெளியிட்ட அறிக்கையின்படி, சுவிஸ் கை மணிக்கூட்டு தொழில் ஏற்றுமதி துறையில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது மற்றும் மாற்றத்திற்கு 
உட்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கைக்கடிகார தொழிற்றுறை சுவிஸ் இந்தியாவை அடுத்த வளர்ச்சி சந்தையாக பார்க்கிறது

இலங்கைக்கு போலி ஆவணங்களை பயன்படுத்தி போதைப்பொருள் இறக்குமதி செய்த நிறுவனம்

புதன், 11 அக்டோபர், 2023

தேசிய போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகார சபையினால் வழங்கப்பட்டதாக போலி ஆவணங்களை தயாரித்து 
இலங்கைக்கு போதைப்பொருள் 
இறக்குமதி செய்த
 நிறுவனம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை 
தெரிவித்துள்ளது.  
தேசிய போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகார சபையின் 
 அதிகாரிகள் 11-10-2023.இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.  
நாட்டிற்குள் தரம் குறைந்த போதைப்பொருட்களை கொண்டு வருவதாக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்ற போதிலும், போதைப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். 
இது தவறான நிலைமை என்று மருந்து ஒழுங்குமுறை ஆணையம் கூறுகிறது. மருந்துகளை வாங்குவதற்கு அதிகாரசபைக்கு அதிகாரம் இல்லை. சில மருந்துகளால் பல நோயாளிகள் இறந்தனர். அதற்காக நாங்கள் வருந்துகிறோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர். 
மருந்துகளை கொண்டு வரவில்லை என்றால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். அமைச்சகம் அவசரகால கொள்முதலுக்கு சென்றோம். அவற்றிற்கு அனுமதி வழங்க வேண்டும். இப்போது 
மருந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் 
எழுந்துள்ளது. இது போலி ஆவணங்களை தயாரித்து செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 
என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இலங்கைக்கு போலி ஆவணங்களை பயன்படுத்தி போதைப்பொருள் இறக்குமதி செய்த நிறுவனம்

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

செவ்வாய், 10 அக்டோபர், 2023

அனைத்து தரங்களிலும் உள்ள மாணவர்கள் நாளாந்தம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டியது கட்டாயமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் நாளாந்த பாடசாலை வருகை வீழ்ச்சியடையுமாயின், எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் பரீட்சைகளில் 
அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது எனவும் 
தெரிவித்துள்ளார்.
* அத்துடன், அடுத்த வருடம் ஜனவரி மாதம், கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்திலும் ஆரம்ப பிரிவுகளுக்கான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் வடமாகாணத்தின் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு சந்தை வாய்ப்பு

திங்கள், 9 அக்டோபர், 2023

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமான மெசிடோ நிறுவனம் வட மாகாணத்தில் சுயதொழில் முயற்சிகளில் 
ஈடுபடுகின்ற சுய தொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு அவர்களுக்கான சுய தொழில் பயிற்சிகளை வழங்கி பயனாளிகளை ஊக்குவித்து 
வருகின்றது. 
 அந்த வகையில் கருவாடு பதனிடுதல், பனை உற்பத்தி பொருட்கள்,சவர்க்கார உற்பத்தி என  இன்னும் பல சிறு தொழில் பயிற்சிகளை 
வழங்கி வருகிறது. 
 இப் பயிற்சிகளின் ஊடாக பயனாளிகள் தங்களுடைய உற்பத்திகளை அதிகரித்து வருமானம் ஈட்டி வரும் நிலையில், இலங்கை 
கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் சந்தை வாய்ப்பு ஒன்று ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. 
இவ் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் முகமாக பயனாளிகளான தொழில் முயற்சியாளர்களுக்கு தங்களுடைய உள்ளூர்
 உற்பத்திகளான கருவாடு, சவர்க்கார் உற்பத்திகள்,
 பனை உற்பத்தி பொருட்களை கண்டிக்கு கொண்டு சென்று மூன்று நாட்கள் கடந்த (6,7,8) ஆகிய  திகதிகளில் சந்தை வியாபாரத்தில் 
ஈடுபட்டிருந்தனர். 
அவர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து பல இலட்சம் லாபம் ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அத்தோடு உள்ளுர் உற்பத்தித் தொழில் முயற்சியாலர்களை ஊக்குவித்த நிறுவனமான மெசிடோ நிறுவனத்திற்கும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டிருந்தது. 

 அது மட்டும் இன்றி சர்வதேச சந்தை வாய்ப்பு மற்றும் கண்காட்சி இம்மாதம் 30ம் திகதி தொடக்கம் எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை (Vietnam,Hanoi. 2023.October 30 to November 02 2023) வியட்நாம் நாட்டில் நடைபெற இருப்பதும் 
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் வடமாகாணத்தின் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு சந்தை வாய்ப்பு