சமுர்த்தி நிவாரணம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் மஸ்கெலிய தோட்டப் பகுதி

வெள்ளி, 27 அக்டோபர், 2023

மஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் சாமிமலை கவரவில கிராம சேவகர் பிரிவிலுள்ள ஆறு தோட்டங்களை சேர்ந்த மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் கிடைக்கவில்லை என மக்கள் 
குற்றச்சாட்டியுள்ளனர்.
கவரவில , பாக்றோ, சின்ன சோளங்கந்த, பெரிய சோளங்கந்த, மல்லியப்பு, டீசைட் ஆகிய தோட்ட மக்களுக்கே இவ்வாறு சமுர்த்தி
 நிவாரணத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கவலை 
வெளியிட்டுள்ளனர்.
 இது தொடர்பில் பிரதேச மக்கள் தெரிவிக்கையில், “அரசாங்கத்தால் வழங்கப்படும் சமுர்த்தி நிவாரணம் எமது தோட்டங்களுக்கு
 பொறுப்பான உரிய அதிகாரிகள்தான் வழங்காது 
புறக்கணிக்கப்படுகிறது.
சமுர்த்தி நிவாரணம் தொடர்பில் அரசாங்கம் உரிய வகையில் செயற்பட்டாலும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் நோர்வூட் சமூர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் பாகுபாடுடனே செயற்படுகின்றனர்.
சமுர்த்தி அதிகாரிகளின் தரகர்களாக செயல்படுபவர்களின் சிபாரிசுகளுக்கு அமையவே குறித்த நிவாரணம் வழங்கப்படுகிறது.
குறிப்பாக இப்பிரதேசத்திலுள்ள தரகர்களின் உறவினர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மாத்திரமே சமுர்த்தி நிவாரணம் 
கிடைக்கப்பெறுகிறது.
வறுமை கோட்டின் கீழ் வாழும் எமக்கு சமுர்த்தி நிவாரணம் கிடைப்பதில்லை. இதனால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறோம்.
இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய 
நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களுக்கு
 நியாயமான முறையில் கிடைக்கப்பெற வேண்டிய சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுத்தர வேண்டும்'' எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது




0 கருத்துகள்:

கருத்துரையிடுக