உலக சுகாதார அமைப்பு செயற்கை இனிப்பு சுவைகள் குறித்து எச்சரிக்கை

சனி, 15 ஜூலை, 2023

1980ஆம் ஆண்டு முதல் உணவு மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பு சுவைகளே புற்றுநோய்களுக்கு வழிவகுப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் செயற்கை இனிப்புகள் குறித்து அபாயமான அறிவிப்பொன்றை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.
 அஸ்பார்டேம் (aspartame) மனித உடலில் புற்றுநோய் 
செல்களை வளரச் செய்வதாகவும் கல்லீரல் தொடர்பான புற்றுநோய்கள் அதிகமாக வரலாம் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீண்ட காலமாக, இந்த செயற்கை இனிப்பு இனிப்பு பானங்கள் சூயிங் கம், ஜெலட்டின், ஐஸ்கிரீம், தயிர் போன்ற பால் பொருட்கள், காலை உணவு தானியங்கள், பற்பசை, இருமல் மருந்துகள், மற்றும் குறைந்த சர்க்கரை உணவுகளை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக