ஶ்ரீஹரிகோட்ட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் -3

வெள்ளி, 14 ஜூலை, 2023

ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்ட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலம். பிற்பகல் 2:35 மணிக்கு 
விண்ணில் பாய்ந்தது.
40 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்டு 23 ஆம் திகதி நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். அன்று மாலை 5.47 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்கும் என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.
தாமதம் ஏற்பட்டால், செப்டம்பர் மாதம் தரையிறங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்.
கடந்த ஜூலை 22, 2019 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 3 திட்டத்தில் சந்திராயன் 2 இல் இருந்தது போல ஆர்பிட்டர் இருக்காது. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு 
மட்டுமே உள்ளது.
இதில் ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு செல்லும்.என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக