நாட்டில் வாக்காளர்களை கவர இன்றிரவு எரிபொருள் விலை குறைக்கப்படுமா

சனி, 31 ஆகஸ்ட், 2024

நாட்டில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று இடம்பெறவுள்ளது. மாதாந்திர எரிபொருள் விலை சூத்திரத்தின்படி,
 கடந்த ஜூன் 30 ஆம் திகதி கடைசியாக விலை 
திருத்தம் செய்யப்பட்டது. ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவில்லை என்பதுடன், ஜூலை மாதத்தில் திருத்தப்பட்ட விலைகள் ஓகஸ்ட் மாதம் வரை மாற்றமின்றி உள்ளது..
என்பதும்  குறிப்பிடத்தக்கது-

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வாக்காளர்களை கவர இன்றிரவு எரிபொருள் விலை குறைக்கப்படுமா

கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் இருபத்தேழு ஓட்டங்களால் முன்னிலையில்

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகள் மோதும் 13வது வடக்கின் நீலங்களின் சமர் இன்று 
ஆரம்பமாகியது 
இன்றைய முதல் நாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி 37.04 பந்துப்பரிமாற்றத்தில் 168 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தனர்.
அணி சார்பாக J-மதுஷன் 38ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.பந்து வீச்சில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி சார்பாக T-கிருசாந்தன், K.கரிசாந்தன் ஆகியோர் தலா மூன்று இலக்குகளை வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு முதலாவது இனிங்சை ஆரம்பித்த கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி 47.4 பந்து பரிமாற்றத்தில் 141 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்திருந்தனர்.
அணி சார்பாக T.தமிழவன் 46ஓட்டங்களையும்,k.கரிசாந்தன் 45ஓட்டங்களையும் அதிகபட்சமா பெற்றனர்.பந்து வீச்சில் G.கெளசிகன் 08இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.
இரண்டாவது நாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதுவரை நடந்த 12போட்டிகளில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி 4போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதுடன் 3போட்டிகளில் மத்திய கல்லூரி
 அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐந்து போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன குறிப்பிடத்தக்கது. என்பதாகும்.
 
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் இருபத்தேழு ஓட்டங்களால் முன்னிலையில்

இலங்கையில் ஒரு சில மாவட்டங்களில் மாத்திரம் மழைக்கு வாய்ப்பு

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது. 
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில பகுதிகளில்50 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.  
மேலும் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றானது  40-50 கி.மீற்றர் 
வரை வீசக்கூடும்.
 வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அந்த அறிவிப்பில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.  என்பதாகும்
 
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - இலங்கையில் ஒரு சில மாவட்டங்களில் மாத்திரம் மழைக்கு வாய்ப்பு

நாட்டில் இன்று முதல் செப்டெம்பர் ஆறாம் திகதி வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும்

புதன், 28 ஆகஸ்ட், 2024

பி.ப. 12:11 மணியளில் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவான்கோட்டை, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும்
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2024 ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2024 ஓகஸ்ட் 27ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு
 வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ 
அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பொதுவாக சீரான வானிலை காணப்படும்
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான 
வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம்
 காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற இடப்பெயர்ச்சி காரணமாக, இன்று (28) முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும்.
அதற்கமைய, இன்று (28) பி.ப. 12:11 மணியளில் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவான்கோட்டை, சுண்டிக்குளம் ஆகிய 
பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் குறிப்பிடத்தக்கது என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் இன்று முதல் செப்டெம்பர் ஆறாம் திகதி வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும்

ஆசிய சுற்றுப்பயணத்தை அடுத்த வாரம் ஆரம்பிக்கும் போப் பிரான்சிஸ்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

அடுத்த வாரம் போப் பிரான்சிஸ்  தனது ஆசிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அவர் இந்தோனேசியாவின் சின்னமான இஸ்திக்லால் மசூதிக்கு செல்லவுள்ளதாக 
கூறப்படுகிறது.
87 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், நாட்டின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆறு மதங்களின் பிரதிநிதிகளுடன் ஒரு சமயக் கூட்டத்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடைய பயண அட்டவணையின்படி, செப்டம்பர் மூன்றாம் திகதி ஜகார்த்தாவில் பயணத்தை துவங்கும் அவர், அங்கு இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவை சந்திக்கிறார்.
 இந்த பயணத்தை முடித்துக் கொண்டு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவிற்கு செல்லவுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - ஆசிய சுற்றுப்பயணத்தை அடுத்த வாரம் ஆரம்பிக்கும் போப் பிரான்சிஸ்

இலங்கை பெண்களுக்கு தென் கொரியாவில் கிடைக்கும் வாய்ப்பு

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

இலங்கைப் பெண்களுக்கும் தென் கொரியாவில் சுரங்கத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு  கிடைத்துள்ளது. 
கடற்றொழில் துறையில் தொழில் வாய்ப்பைப் பெற்ற 120 பேர் கொண்ட குழு நேற்று (25) கொரியாவுக்குச் சென்றதாக 
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அந்தக் குழுவில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர், தென்கொரிய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான 
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கைக்கு இந்த தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது. 
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.குறிப்பிடத்தக்கது. என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கை பெண்களுக்கு தென் கொரியாவில் கிடைக்கும் வாய்ப்பு

நாட்டுக்கு நாற்பத்தி ஏழு மருந்துகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

இந்திய ஏகபோகத்தின் கீழ் 47 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் சமர்ப்பித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் அறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது சுகாதார சேவைக்கும் இந்நாட்டு குடிமக்களுக்கும் எவ்வாறு பயனுள்ளதாக அமையும் என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என 
அந்த சங்கத்தின் தலைவர் திரு.ரவி குமுதேஷ் 
தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து பதிவு செய்யப்படாத மருந்துகளை இறக்குமதி செய்வதன் மூலம் மருந்துகளின் தரம் மற்றும் நிலை மீண்டும் ஒருமுறை சீரழிந்துவிடும் என்றும் திரு.ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டுகிறார்.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டுக்கு நாற்பத்தி ஏழு மருந்துகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

இலங்கையில்அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இ-ஓட்டுநர் உரிமம் அறிமுகம்

சனி, 24 ஆகஸ்ட், 2024

நாட்டில்  2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இ-ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே 
அவர் தெரிவித்தார்.
 அத்துடன் அடுத்த வருடம் முதல் வழமை போன்று சாரதி அனுமதி அட்டைகளை வழங்க முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்தார் குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில்அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இ-ஓட்டுநர் உரிமம் அறிமுகம்

தொடர்ந்தும் இலங்கையில் அதிகரிக்கும் பணவீக்கம்

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

இலங்கையில் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 
 தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதற்கமைய, கடந்த ஜூன் மாதத்தில் 2.4 சதவீதமாகக் காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான 
முதன்மை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 2.5 சதவீதமாக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - தொடர்ந்தும் இலங்கையில் அதிகரிக்கும் பணவீக்கம்

நாட்டில் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை அனுமதி

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

நாட்டில் வயல் நிலங்களில் பயிரிடப்படும் நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் 
வழங்கியுள்ளது. 
இதன்படி, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேருக்கு ஹெக்டேருக்கு 15,000 ரூபா நிதி மானியமாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
மேலும், 2024/2025 உயர் பருவத்திற்கு, அரசு உர நிறுவனம், அரசு உர நிறுவனம் மற்றும் தனியார் துறையினர் உரத்தை இறக்குமதி செய்து
 போட்டி விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். 
இதன் மூலம், நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து, பயிர் உற்பத்தியை அதிகரிக்க அரசு எதிர்பார்க்கிறது.குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை அனுமதி

நாட்டில் வெள்ள நிலைமை குறித்து அவதானமாக இருங்கள் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

புதன், 21 ஆகஸ்ட், 2024

நாட்டில் பல நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக களுகங்கையின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் திருமதி ஜி.எஸ். சகுரா தில்தாரா தெரிவிக்கிறார்.
அதனடிப்படையில் புலத்சிங்ஹல, மதுராவல,பாலிந்தநுவர 
மற்றும் மில்லனிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்வான 
பகுதிகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக
 இருக்குமாறும் இந்த பிரதேசங்களில் இடிந்து விழுந்திருக்கும் வீதிகளை பயன்படுத்தும் மக்கள் இந்த நிலவரம் தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறும் அவர் மேலும் கூறினார்.
கடந்த சில மணித்தியாலங்களில் கணிசமான அளவு மழை பெய்து வருவதால் குக்குலேகங்கை நீர் தேக்கத்தின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 60 கன மீற்றராக அதிகரித்துள்ளதுடன் குடா கங்கைகளின் தாழ்வான
 பகுதிகளில் நீரின் மட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என்பதோடு களுகங்கை, மகுரு கங்கை மற்றும் குடாகைகளின் தாழ்வான
 பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அதிக அவதானமாக செயல்படுமாறும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் அத்தனகலு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளான ஜாஎல வத்தளை போன்ற பிரதேசங்கள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அடுத்த 24 மணித்தியாலங்களில் இப்பிரதேசங்களில் கணிசமான மழை வீழ்ச்சி ஏற்பட்டால் இந்த நிலை வெள்ள அபாயமாக அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.
விசேடமாக களுகங்கையின் குடாகங்கை மற்றும் மகர கங்கையைச் சூழ தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் அதே 
போன்று ஜாஎலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அப்பகுதிகளின் தாழ்வான பகுதிகளில் காணப்படும் இடிந்து விழுந்திருக்கும் வீதிகளை 
பயன்படுத்தும் போதும் மிக அவதானமாக செயல்படுமாறு அவர் கேட்டுக் கொள்கின்றார் குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வெள்ள நிலைமை குறித்து அவதானமாக இருங்கள் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

நாட்டில் வெள்ள அபாயம் அவதானமாக இருங்கள் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

களுகங்கையின் உயர்ந்த பகுதிகளுக்கு 70மில்லிமீட்டர் அளவில் மழைவீழ்ச்சியுடன் வெள்ள அபாயத்திற்கான எச்சரிக்கை தொடர்ந்தும் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பொறியியலாளர் ஜி.டபிள்யு. ஏ. சகுரா தில்தாரா தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கடும் மழையுடன் கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்தில் வெள்ள அபாயத்திற்கு உட்பட்ட பிரதேசமாக கங்கையின் தாழ்நிலப் பகுதிகளும் அத்தனகலு ஓயாவின் தாழ்ந்த பிரதேசங்களும் கருத்திற்கொள்ள கூடியதாகவும், இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அவர்  சுட்டிக்காட்டினார்.  

அவ்வாறே இத்தாழ்ந்த பகுதிகளுக்கு ஊடாக செல்லும் பாதைகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக அவ்வீதிகளில் பயணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், களுகங்கையின் சிறிய ஆறு வழிந்தோடும் தாழ்ந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் கவனத்திற் கொள்ளுமாறு பொறியியலாளர் ஜி. டபிள்யு. ஏ. சகுரா தில்தாரா அறிவித்துள்ளார்.

தற்போது அத்தனகலு ஓயாவில் சிறிய வெள்ள நிலை காணப்படுவதுடன் தாழ்ந்த பிரதேசங்களான அத்தனகல்லை, கம்பஹா, ஜாஎல, கடான போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படும் தாழ்வான இடங்களில் சில வீதிகள் மேலும் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுவதாகவும் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் வாகனங்கள் இது தொடர்பாக மிகவும் அவதானமாக செல்லுமாறும் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பொறியியலாளர் ஜி. டபிள்யு. ஏ. சகுரா தில்தாரா கோரிக்கை விடுத்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் வெள்ள அபாயம் அவதானமாக இருங்கள் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் சீரற்ற காலநிலையால் குடா கங்கை உபகுழியின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களுகங்கை மற்றும் குடா கங்கை உபகுழியின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த
 முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானம் செலுத்துமாறு அத்துறையின் நீர்ப்பாசன 
பொறியியலாளர் திருமதி ஜி.டபிள்யூ.ஏ.சகுரா டில்தாரா 
தெரிவித்தார். 
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், "கடந்த 2-3 நாட்களாக பெய்த கனமழையால், களுகங்கைப் படுகை மற்றும் அத்தனகலு படுகையில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. 
குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யாவிட்டாலும், குடா கங்கை துணைப் படுகையில் இன்னும் வெள்ள
 அபாயம் உள்ளது. 
இந்த நிலைமை காரணமாக களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவில், குக்குலே கங்கை நீர் மின் உற்பத்தி நிலையத்தின் நீர் கொள்ளளவு வினாடிக்கு 25 கன மீட்டராக குறைந்துள்ளது. 
ஆனால் சிறிய ஆற்றுப் படுகையைச் சுற்றியுள்ள வீதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சீரற்ற காலநிலையால் குடா கங்கை உபகுழியின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

நாட்டில் தொடர்ந்து அதிரிகத்து வரும் மழையால் கிளை ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர் மட்டம் கணிசமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.  
அந்நிலைமை காரணமாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ். பி. சி.சுகீஸ்வர குறிப்பிட்டார். 
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இதுவரை பெய்த மழையின் அடிப்படையில் கணிசமான அளவு வெள்ளப்பெருக்கு 
ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 ஆற்றுப் படுகை மிகவும் ஈரமாகிவிட்டதால், அத்தனகலு ஓயா மற்றும் ஊறுவல் ஓயா ஓடைகளில் இன்று கணிசமான மழை பெய்தால், 
அபாயம் உள்ளது. 
ஆற்றுப் படுகை மிக எளிதில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 
இதேவேளை, களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர் மட்டம் மில்லகந்த பிரதேசத்தில் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.  
சில பிரதேசங்களில் களு கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக திரு.சுகீஸ்வர குறிப்பிட்டார்.  
அத்துடன், பத்தேகம பிரதேசத்தில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு ஜிங் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - நாட்டில் தொடர்ந்து அதிரிகத்து வரும் மழையால் கிளை ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு

நாட்டில் தர்மபுரத்தில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் வேறு பகுதியில் மணல் ஏற்றிய நால்வர் கைது

சனி, 17 ஆகஸ்ட், 2024

நாட்டில்  அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் வேறு பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிபர்களும் அதன் சாரதிகளும் இவ்வாறு கைது 
செய்யப்பட்டுள்ளனர்.  
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதிச் சோதனையின் மூலம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளடன், தடையப் பொருட்கள் நீதிமன்ற நடவடிக்கை முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
 தர்மபுரம் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் தர்மபுரத்தில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் வேறு பகுதியில் மணல் ஏற்றிய நால்வர் கைது

இலங்கையில் பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

இலங்கையில் இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள்
 16-08-2024.இன்றுடன் நிறைவடைகின்றன.
 அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
 அதற்கமைய, மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை

இலங்கையில் இடியுடன் கூடிய மழை வானிலை முன்னறிவிப்பு

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

இலங்கையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது 
இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய 
மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இலங்கையில் இடியுடன் கூடிய மழை வானிலை முன்னறிவிப்பு

நாட்டில் இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

புதன், 14 ஆகஸ்ட், 2024

நாட்டில் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள் நிறைவடைவது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 அதன்படி, பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆகஸ்ட் 16ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.
 இதேவேளை, மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



READ MORE - நாட்டில் இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தில் ஆணின் வயிற்றினுள் பெண்ணின் கருப் பை: மருத்துவர்கள் அதிர்ச்சி

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

உத்தரப் பிரதேசத்தில் ஹெர்னியா ஆபரேஷனுக்காக வந்த நபரின் வயிற்றில் கருப் பை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் 
அதிர்ச்சியடைந்துள்ளனர். 
உத்தரப் பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி [Rajgir Mistri] இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. கடந்த ஒரு வாரமாகவே கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட ராஜ்கிர் மருத்துவமனை
 சென்றுள்ளார்.
 அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது அடிவயிற்றில் உள்ள சதை உள்ளுறுப்புகளுடன் இணைந்து காணப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
 அறுவை சிகிச்சையின்போது, அடிவயிற்றில் உள்ள அந்த சதைப் பகுதி உண்மையில் பெண்களுக்கு இருக்கும் கருப் பை [uterus] என்று தெரியவந்துள்ளது. முழுமையாக வளர்ச்சி பெறாத அந்த கருப் பையுடன் கரு முட்டையை உருவாகும் ovary இருந்துள்ளது. 
ஆனால் ராஜ்கிரிடம் பெண் தன்மைக்கான கூறுகள் எதுவும் காணப்படாத நிலையில் இந்த அரிதினும் அரிதான வளர்ச்சியைப் பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
 தற்போது ராஜ்கிரின் கீழ் வயிற்றில் இருந்த ஓவரி மற்றும் கருப்பையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இதனையடுத்து ராஜ்கிர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - உத்தரப் பிரதேசத்தில் ஆணின் வயிற்றினுள் பெண்ணின் கருப் பை: மருத்துவர்கள் அதிர்ச்சி

இலங்கைக்கு மூன்று கோடி இந்திய முட்டைகள் இறக்குமதி செய்யப்படும்

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

இலங்கைக்கு  மூன்று  கோடி இந்திய முட்டைகள் முதல் தொகுதி இம்மாதம் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
 இவ்வருடம் முட்டை இறக்குமதி செய்வது தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை 
அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
 உள்ளூர் சந்தையில் ஒரு முட்டை 50 ரூபாவுக்கு மேல் விற்பனையாகி வருவதால் மீண்டும் முட்டை இறக்குமதி செய்யப்படும் 
குறிப்பிடத்தக்கது என்பதாகும்  
.
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கைக்கு மூன்று கோடி இந்திய முட்டைகள் இறக்குமதி செய்யப்படும்

இலங்கையில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாத்தியம்

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2024  ஓகஸ்ட் 11ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2024 ஓகஸ்ட் 10ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டில்  அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை 
விருத்தியடைந்து வருகின்றது
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி
 எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள 
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.குறிப்பிடத்தக்கது என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாத்தியம்

கனடா பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது

சனி, 10 ஆகஸ்ட், 2024

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 09.08.2024.அன்று  நடைபெற்ற ஆடவருக்கான 4x100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் தற்போதைய
 உலக சாம்பியனான அமெரிக்காவை வீழ்த்தி கனடா 
தங்கப் பதக்கத்தை வென்றது. 
பலம் வாய்ந்த அமெரிக்க அணி இங்கு தங்கப்பதக்கத்தை எளிதாக வெல்லும் என கணிக்கப்பட்ட பின்னணியில் இவர்கள் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.
கனடா அணி 37.50 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்தது. ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் கனேடிய அணி தங்கப் பதக்கம் வெல்வது 28 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. 
இதற்கிடையில், இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை தென்னாப்பிரிக்கா (37.57 வினாடிகள்) வென்றது, வெண்கலப் பதக்கத்தை கிரேட் பிரிட்டன் (37.61 வினாடிகள்) வென்றது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கனடா பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது

சிறுமிகளுக்கு ஈராக்கில்ஏற்பட்டுள்ள அவலம் ஒன்பது வயதில் திருமணம்

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024


ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் 
செய்யப்பட்டுள்ளது. 
இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும். தற்போதுவரை ஈரானில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ 
வயது 18 ஆக உள்ளது. 
ஆனால் தற்போது முமொழியப்பட்டுள்ள மசோதவைன்படி, பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.
சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதீவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என்று ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ள நிலையில், தற்போதய இந்த
 வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
 எனவே இந்த மசோதவனுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

  இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




 

READ MORE - சிறுமிகளுக்கு ஈராக்கில்ஏற்பட்டுள்ள அவலம் ஒன்பது வயதில் திருமணம்

கிளிநொச்சியில் உரிய விலையின்றி தவிக்கும் முருங்கை செய்கையாளர்கள்

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

நாட்டில்  கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு, மயில்வானபுரம் பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தமது வாழ்வாதாரமாக முருங்கைச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்பொழுது 40 ரூபாய் 50 ரூபாய்க்கும் என கொள்ளளவு செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.  
தற்பொழுது முருங்கை செய்கையின் அநேகமான விவசாயிகள் முருங்கை செய்கைக்காய் அறுவடையில் ஈடுபட்டுவருகின்றனர்.  
இந்த நிலையில் முருங்கைக்காய்க்கு உரிய விலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை 
தெரிவித்துள்ளனர்.  
கடந்த வருடமும் இதே போன்று முருங்கை செய்கையாளர்கள் பெரும் பாதிப்பை ஏதிர்கொண்டதாகவும் கவலை 
தெரிவிக்கின்றனர்.  
குரங்கு, யானை உள்ளிட்டவற்றுக்கு இரவுபகலாக காவலிருது பாடுபட்டு எந்தப்பயனுமற்றுப்போயுள்ளதாவும், இவரிடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  
அறுவடைக்கு தயாராக உள்ள முருங்கையினை அறுவடை செய்ய முடியாது கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை 
தெரிவிக்கின்றனர்.  
அறுவடை செய்யும் பொழுது அதற்கான கூலி பணத்தை கூட பெற முடியாத நிலையில் விலை காணப்படுவதாக முருங்கைச் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - கிளிநொச்சியில் உரிய விலையின்றி தவிக்கும் முருங்கை செய்கையாளர்கள்

மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளன.யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா

புதன், 7 ஆகஸ்ட், 2024

'யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா - 2024' யாழ்ப்பாணத்தில் மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை வரையில் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறுபட்ட புத்தக விற்பனை நிறுவனங்கள் மற்றும் வெளியீட்டகங்களின் புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை 
செய்யப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில், உள்ளூர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றமானது இந்த புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
புத்தக திருவிழா இடம்பெறும் தினங்களில் புத்தக வெளியீடுகள், அறிமுக நிகழ்வுகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் என்பவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக் கண்காட்சி முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும். 40 காட்சி கூடங்கள் அமைக்கப்படும். அவற்றில் உள்ளூர் வெளியூர் எழுத்தாளர்களின் புத்தகங்களை காட்சிப்படுத்தவுள்ளோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்னர்.
என்பது  குறிப்பிடத்தக்கதாகும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளன.யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா