அடுத்த வருடத்துடன் 7000 இற்கும் மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் நிலை

வியாழன், 25 பிப்ரவரி, 2021



கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அடுத்த வருடத்துடன் சுமார் 7000இற்கும் மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இவர்களுக்கான மாற்று ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை 
அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும்:-2009இற்கு பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றமசெய்யப்பட்ட போது ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் பல
 நிறுவனங்கள் ஈடுபட்டன.
குறிப்பாக ஹலோ ட்ரஸ்ட்,சார்ப்,டாஸ்,போன்ற நிறுவனங்கள் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களில் அன்று தொடக்கம் இன்றுவரை சுமார் 7000 இற்கு மேற்பட்ட இளைஞர்களும், யுவதிகளும் பணியாற்றி 
வருகின்றார்கள்.
இது இந்த மாவட்டங்களின் சனத் தொகையில் மிகப் பெரியது. ஆனால் வருகின்ற 2022 உடன் கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவுக்குக் கொண்டுவரப்படவுள்ளதால் இதில் பணியாற்றிய 7000 இற்கு மேற்பட்டவர்கள் தங்களின் தொழில் வாய்ப்பினை
 இழக்கின்றனர்.
இதனால் அவர்களின் குடும்பங்களில் வாழ்வாதாரம் இழக்கப்படுகிறது. இந்த நிலைமை மிக மோசமான பொருளாதார மற்றும் சமூக பின்னடைவை ஏற்படுத்தும்.
மேற்படி தொழில் வாய்ப்பினை இழக்கும் 7000 இற்கு மேற்பட்டவர்கள் தொழிலின்றி சமூகத்தில் காணப்படுகின்ற நிலைமையானது ஆபத்தானது அதனால் பல்வேறு சமூக,பொருளாதார
 பாதிப்புக்கள் ஏற்படும்.
எனவே தாங்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் இவர்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.எனத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

READ MORE - அடுத்த வருடத்துடன் 7000 இற்கும் மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் நிலை

நாட்டில் க.பொ.த.(சா/த) பரீட்சைக்குத் தோற்றுவோரின் தேசிய அடையாள அட்டை கிடைக்கவில்லையா

வியாழன், 18 பிப்ரவரி, 2021

 நாட்டில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டை இதுவரை கிடைக்கவில்லை என்றால் பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள பாடசாலைப் பகுதி யில்  விசாரிக்குமாறு அதிபர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களம்
 அறிவித்துள்ளது .
கொரோனா தொற்று காரணமாகப்  பாடசாலைகள் மூடப்பட்டமையால் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகள் பிரதேச செயலகங்களுக்கு அனுப் பி வைக்கப்பட்டதாக இலங்கை ஆட்பதிவுத் திணைக் களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக
 தெரிவித்துள்ளார்.
அத்துடன், இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள
 அட்டைகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை
 யென் றால்,  பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள பாடசாலைப் பகுதியில் விசாரிக்குமாறு அதிபர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களம் 
அறிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நாட்டில் க.பொ.த.(சா/த) பரீட்சைக்குத் தோற்றுவோரின் தேசிய அடையாள அட்டை கிடைக்கவில்லையா

முல்லைத்தீவு பிரதான வீதியில் பட்டப்பகலில் ஒன்பது இலட்சம் கொள்ளை

புதன், 17 பிப்ரவரி, 2021

 
வவுனியா - புளியங்குளம் பகுதியில்,17-02-2021, அன்று  முல்லைத்தீவு பிரதான வீதியில் பட்டப்பகலில் கொள்ளைஒன்பது இலட்சம்  ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புளியங்குளம்  காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
,17-02-2021, அன்றைய தினம் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்காக ஒருதொகைப்பணத்துடன் நபர் ஒருவர் 
சென்றிருந்தார்.
அவரை புளியங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் வழிமறித்த குழுவினர் அச்சுறுத்தி அவரிடமிருந்த 9 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரால் புளியங்குளம் காவல் துறை  நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து 
வருகின்றனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

READ MORE - முல்லைத்தீவு பிரதான வீதியில் பட்டப்பகலில் ஒன்பது இலட்சம் கொள்ளை

மணிபுரத்தில் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சந்தை

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

வவுனியா மணிபுரத்தில் கிராமிய பொதுச்சந்தை,14-02-2021, இன்று திறந்து வைக்கப்பட்டது.சப்ரிகம வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த சந்தை கட்டிடத்தொகுதி உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் கிராமத்தின் உற்பத்தி 
பொருட்களுக்கான
 சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மணிபுரம் கிராமத்திற்கான மரண ஆதார சங்கமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த கட்டித்தினை வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட இணைத்தலைவருமான கு.திலீபன் திறந்து 
வைத்திருந்ததுடன் குறித்த நிகழ்வில் கிராம சேவகர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பொதுமக்கள் என பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - மணிபுரத்தில் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சந்தை

யாழ்.மாவட்டத்தில் 190 குளங்களைக் காணவில்லையாம்

யாழ்.மாவட்டத்தில் 190 குளங்களைக் காணவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் மூத்த புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். 
இது சம்பந்தமாக
அவர் மேலும் கூறுகையில்:-யாழ்.மாநகரத்தின் 1956 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1246 குளங்கள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் தற்போது 1056 குளங்களே காணப்படுகின்றன.
யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 18 குளங்கள் காணாமல்போயுள்ளதோடு 19 குளங்களின் பரப்புகள் மனித செயற்பாடுகளால் குறைக்கப்பட்டுள்ளன.
மாநகரத்தின் தனியார் விடுதிக்கு அருகாமையில் காணப்பட்ட குளம் ஒன்று காணாமல் போயுள்ளதோடு மாநகர கட்டடத் தொகுதி அமைப்பதற்காக குளத்தின் கணிசமான பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.
நகரப் பகுதியில் அமைந்துள்ள 
வழிபாட்டு தலம் 
ஒன்றின் தேர்முட்டி அமைப்பதற்காக அருகிலிருந்த குளத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளதோடு யாழ் பல்கலைக்கழகத்தின் ஆனந்தகுமாரசாமி விடுதி அமைந்துள்ள பிரதேசத்தில் காணப்பட்ட குளம் ஒன்று காணாமல்போயுள்ளது.
யாழ். மாநகரத்தின் பல பகுதிகளில் குங்கள் காணாமல் போயுள்ளதோடு பல குளங்கள் அமைக்கப்பட்ட பின்னர் அதன் அளவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் யாழ் மாநகரத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் குறிப்பாக யாழ். ஸ்டான்லி வீதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை நோக்கும்போது குறித்த பகுதிகளில் வழிந்தோடும் வெள்ள நீர் அருகிலுள்ள புல்லுக் குளத்தை சென்றடைகின்ற நிலையில் அதன் பல பகுதிகளை மூடி யாழ் மாநகர சபை கட்டடங்கள் அமைத்ததே
 காரணமாகும்.
யாழ் மாவட்டத்தில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய குளங்கள் உருவாக்கப்படுவதோடு ஏற்கனவே இருந்த குளங்கள் தூர்வாரப்பட வேண்டும்.
வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு வீடுகளுக்கு அருகாமையில் புதிய குளங்கள் உருவாக்கப்படுவதோடு சிறிய நீர் நிரப்புக் கிணறுகள் உருவாக்குவதன் மூலமும் வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கும் வரட்சியான காலப்பகுதியில் நிலத்தடி நீரை 
பாதுகாக்க முடியும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



READ MORE - யாழ்.மாவட்டத்தில் 190 குளங்களைக் காணவில்லையாம்

நாட்டில் பல நுகர்வுப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டது

புதன், 10 பிப்ரவரி, 2021

சீனி, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் பருப்பு ஆகிய வற்றிற்கான நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிக பட்ச சில் லறை விலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப் பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைகள்,09-02-2021. அன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறித்த பொருட்களை நுகர்வோர் லங்கா சதொச, கூட் டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் (Q-shop ) கியூ கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச் சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 03 மாத காலத்துக்கு இந்தச் சலுகை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நாட்டில் பல நுகர்வுப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டது

நாட்டில் கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை

திங்கள், 8 பிப்ரவரி, 2021

புதிய விலையின் பிரகாரம் கோதுமையினை விற்பனை செய்தால் கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் பெரும் நட்டத்தை எதிர்க் கொள்ள நேரிடும்.ஆகவே நிர்ணயிக்கப்பட்ட புதிய விலையினை ஆறு அல்லது ஏழு ரூபாவால் அதிகரிக்குமாறு கோதுமை மா உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.
கூட்டுறவு சேவைகள்,சந்தைப்படுத்தல்,அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிற்கும் பிரதான நிலை கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று அமைச்சின் காரியாலயத்தில்
 இடம் பெற்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டில் கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை