அல்பர்ட் டா மாகாணத்தில் உருவாகும் உலகின் மிகப்பெரிய ஐஸ் குச்சி

வியாழன், 27 ஜூன், 2024

கனடாவில் அல்பர்ட் டா மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய ஐஸ் குச்சியை உருவாக்கும் சாதனை முயற்சி முன்னெடுக்கப்பட்டு 
வருகிறது. உலகில் மிகவும் உயரம் கூடிய 
ஐஸ் குச்சியை
 உருவாக்குவதற்கு தென் அல்பர்ட்டாவின் ஹட்டரைட் மக்கள் முயற்சி
 எடுத்து வருகின்றனர். மியாமி ஹட்ரைட் பாடசாலையின் மாணவர்கள் இந்த மிகப்பெரிய ஐஸ் குச்சி வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரையில் இந்த ஐஸ் குச்சி 88.9 அடி உயரம் வரையில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக மாணவர்கள் இவ்வாறான ஓர் ஐஸ் குச்சியை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர்.
ஒகியோவை சேர்ந்த ஒருவர் 21 அடி உயரமான ஐஸ் குச்சி வடிவத்தை உருவாக்கி இருந்தார்.
அதன் பின்னர் ஆல்பர்ட்டா பள்ளி மாணவர்கள் இந்த ஐஸ் குச்சி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு 41 அடி உயரமான ஐஸ் குச்சியை
 உருவாக்கி இருந்தனர்.
இது கின்னஸ் உலக சாதனையாக காணப்பட்டது.
ஆறு மாத கால இடைவெளியில் பிரேசிலை சேர்ந்த ஒருவர் 77.9 அடி உயரமான ஐஸ் குச்சியை உருவாக்கி இந்த சாதனையை 
முறையடித்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் அல்பர்ட்டா பள்ளி மாணவர்கள் இந்த சாதனையை முறியடிக்கும் நோக்கில் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 40,000 ஐஸ் குச்சிகளை ஒன்றிணைத்து பாரிய 
அளவிலான ஓர் ஐஸ் குச்சியை உருவாக்க
 திட்டமிட்டுள்ளனர்.
சுமார் 125 அடி உயரமான ஐஸ் குச்சியை உருவாக்குவது தங்களுடைய நோக்கம் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது இந்த ஐஸ் குச்சி 88 தசம் 9 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஐஸ் குச்சி கட்டமைப்பை உருவாக்கும் போது பல்வேறு சவால்களை எதிர் நோக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



READ MORE - அல்பர்ட் டா மாகாணத்தில் உருவாகும் உலகின் மிகப்பெரிய ஐஸ் குச்சி

யாழ், ஊர்காவற்றுறையில் போலிச் சாவி மூலம் ஆலயத்தில் பவுண் நகைகள் திருட்டு

புதன், 26 ஜூன், 2024

யாழ், ஊர்காவற்றுறையில் உள்ள ஆலயமொன்றில் 64 பவுண் தங்கநகைகள் மற்றும் சுமார் 08 இலட்சம் ரூபாய் பணம் என்பன 
திருடப்பட்டுள்ளன.
ஆலயத்தினுள் பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணமே திருட்டுப் போயுள்ளன. போலி திறப்புக்களை பயன்படுத்தி பூட்டை திறந்து பொருட்களை திருடியிருக்கலாம் என
 சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ், ஊர்காவற்றுறையில் போலிச் சாவி மூலம் ஆலயத்தில் பவுண் நகைகள் திருட்டு

யாழ் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளை

செவ்வாய், 25 ஜூன், 2024

யாழ்- அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் பாதுகாப்பாக
 வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டார் வீடு திரும்பிய போதே, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
 அந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி 
பொலிஸ் நிலையத்தில் வீட்டார் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளை

புதிய வசதி யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளிகளின் உறவினர்களுக்கான தங்குமிடம்

திங்கள், 24 ஜூன், 2024

தூர இடங்களில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள். 
இவ்வாறானவர்கள் நோயாளிகளை யாழ் போதனா வைத்தியசாலை விடுதிகளில் வைத்திருக்கும் நாட்களில் ஓய்வெடுக்க, குளித்து உடை மாற்றி கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இல.76, வைத்தியசாலை வீதியில் (சத்திரச்சந்திக்கு அப்பால்) மேற்படி இல்லம்
 அமைந்துள்ளது.
 தனது வீட்டினை மேற்படி சேவைக்காக தந்துதவிய Dr. இரட்ணேஸ்வரன் UK அவர்கள் இதற்காக வருகை தந்து மேற்படி
 நிகழ்வினை சிறப்பித்தார். தொடர்புகளுக்கு: 1.வைத்திய சாலை நலன்புரிச் சங்கம் - 0761000046. சிவசி இல்ல இணைப்பாளர் - 0770054829 மேற்படி சேவைக்காக படுக்கை அறைகள், குளியலறைகள் உள்ளடங்கலாக வசதிகள் செய்யப்பட்டுள்ளதன.
இந்த இலவச சேவையை யாழ் போதனா வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. நோயாளர் நலன்புரிச் சங்க பொருளாளர் Dr. பிறேமகிருஸ்ணா இதற்கான அனைத்து ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்புகளை ஏற்படுத்தி ஆரம்ப நாள் நிகழ்வை தலைமையேற்று நடாத்தியிருந்தார்.
 The Saivite Tamil Foundation, USA அமைப்பு இதற்கான நிதி அனுசரணையை வழங்கி செயற்படுத்துகின்றது. நலன்புரிச் சங்க நோயாளர் பராமரிப்பு காரியாலயத்தில் விண்ணப்பப்படிவத்தை பெற்று பூர்த்தி
 செய்து நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் விடுதிகளுக்கு பொறுப்பான தாதிய சகோதரர்களிடம் சிபார்சு படிவத்தை 
கையளிக்க வேண்டும்.
 தகுதியானவர்கள் இந்த இலவச சேவையை பெற்றுக்கொள்ளலாம். கடந்த திங்கட்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. ஆகவே பொதுமக்கள் இந்த சேவையை சரியான முறையில் பாவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - புதிய வசதி யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளிகளின் உறவினர்களுக்கான தங்குமிடம்

நாட்டில் நாளைய தினம் பாடசாலை நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஞாயிறு, 23 ஜூன், 2024

நாட்டில் நாளை (24-06-26-ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் 
குறிப்பிட்டுள்ளது. 
 கல்வி சாரா ஊழியர்கள் நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
 கல்வி மற்றும் கல்விசாரா சேவையிடம் தேசிய கொள்கையை தயாரிக்குமாறு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 
 இந்நிலையிலேயே நாளை (24ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு 
அறிவித்துள்ளமை என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



READ MORE - நாட்டில் நாளைய தினம் பாடசாலை நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

திடீரென இலங்கையில் அதிகரித்த மரக்கறிகள் விலைகள்

சனி, 22 ஜூன், 2024

இலங்கையில் பல பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இதர காரணங்களினால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென 
அதிகரித்துள்ளது. 
 மரக்கறி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 550 முதல் 750 ரூபாய் வரையிலும், ஒரு கிலோகிராம் கறி மிளகாய் மற்றும் மிளகாய் 500 முதல் 650 ரூபாய் வரையிலும், 
ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 350 முதல் 500 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளதுடன் ஏனைய மரக்கறி
 வகைகள் அதிகளவில்
 உயர்ந்த நிலையில் உள்ளதாக பாவனையாளர் கூறுகின்றனர்.
 அத்துடன், ஒரு கிலோ கிராம் கரட் 460 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் வெண்டைக்காய் 500 ரூபாவிற்கும், இஞ்சி ஒரு
 கிலோ 3,500 ரூபாவிற்கும், தேசிக்காய் ஒரு கிலோ 1,800 ரூபாவிற்கும் 
விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, கடந்த 
நாட்களில் 100 ரூபாவிற்கு குறைவாக விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள்.
22-06-2023. இன்று 300 முதல் 500 ரூபாவைக் கடந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர். 
 கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளதால் மரக்கறிகளின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாகவே
 நாடளாவிய ரீதியில் இவ்வாறு மரக்கறிகளின் 
விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது மரக்கறிகள் நுகர்வோரின் தேவைக்கு
 ஏற்ற வகையில் வரத்து இல்லாததால் காய்கறிகளின் விலைகள் மேலும் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - திடீரென இலங்கையில் அதிகரித்த மரக்கறிகள் விலைகள்

தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரு இலங்கையர்கள் கைது

வெள்ளி, 21 ஜூன், 2024

இலங்கையிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இரு இலங்கையர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
 தமிழகத்தின் இராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்றில் இருவர் வந்திறங்கியுள்னர்.
 இவ்வாறு வந்திறங்கியவர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இருவரையும் பிடித்து மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 விசாரணையில் அவர்கள் இருவரும் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக
 தமிழகத்திற்குள் 
தஞ்சமடைய வந்தார்களா அல்லது கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை 
நடைபெற்று வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரு இலங்கையர்கள் கைது