ஆயுர்வேத வைத்தியம் வழுக்கை தலையில் முடி வளர வைக்குமாம்

ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

தற்போது இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பினருமே இளம் வயதிலே தலைமுடி உதிர்வு பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறார்கள். முதுமைக்கு முன்னரே தலையில் உள்ள முடி 
உதிர்ந்து தலை வழுக்கையாக ஆரம்பிக்கின்றது. இது ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், மன அழுத்தம், மருந்து பாவனை, 
தூக்கமின்மை உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகின்றது. வழுக்கை பிரச்சினை பெண்களை விட ஆண்களுக்கே 
அதிகம் வருகின்றது. இந்த பிரச்சினை அனுபவிப்பவர்கள் ஆங்கில மருத்துவத்தில் முயற்சிப்பதை விட ஆயுள் வேத முறைப்படி 
வைத்தியம் பெறலாம்
இது வழுக்கை தலையில் உள்ளவர்களுக்கு நிரந்தரமான 
நிவாரணத்தை கொடுக்கும்.
அந்த வகையில் வழுக்கை தலையில் முடி வளர வைக்க என்னென்ன ஆயுள் வேத வைத்திய முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வழுக்கை பிரச்சினையால் ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான முக்கிய காரணம் அவர்களின் வயதாக இருக்கலாம். 45 - 50 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு 
வழுக்கை வரலாம்.
மரபியல் அல்லது குடும்ப வரலாறு காரணமாகவும் சிலருக்கு வழுக்கை பிரச்சினை ஏற்படும்.
ஆயுர்வேதத்தின் படி, பித்த தோஷம் உள்ளவர்களுக்கு வழுக்கை வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் ரசாயன பொருட்களின் பாவனை தொடர்ச்சியாக இருந்தால் அந்த விஷத்தன்மையால் முடி உதிர்வு ஏற்பட்டு தலை வழுக்கையாகலாம்.
1. வழுக்கை பிரச்சினையுள்ள ஆண்கள் அஸ்வகந்தாவை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக அரைத்து பேஸ்ட் பதம் வந்தவுடன் தலை
முடியில் தடவி, 30 நிமிடம் ஊறவைத்து, பின்னர் அதை
 அலசவும். இது வழுக்கையில் முடியை வளர வைக்கும். வாரத்திற்கு 2 தடவைகள் செய்து பார்க்கலாம்.
2. வல்லாரை கீரையில் தலைமுடியை வளர வைக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது வழுக்கையில் முடியை வளர வைக்கும். வல்லாரை இலைகளை நசுக்கி, தண்ணீரில் கலந்து, உங்கள் தலைமுடி 
முழுவதும் தடவவும். இதனை வாரத்திற்கு மூன்று முறை 
தொடர்ந்து செய்ய வேண்டும்.
3. ஆயுள்வேத வைத்தியத்தில் வெந்தயத்திற்கு முக்கிய இடம் உள்ளது. ஆண், பெண்களுக்கு வரும் முக்கிய பிரச்சினைகளுக்கு 
மருந்தாக வெந்தயம் பயன்படுகின்றது. வெந்தயத்தை 
கடாயில் பொன்னிறமாக
 வறுத்து, ஆறிய பின் நைசாக அரைக்கவும். இந்த 
கலவையை தலையில் பூசவும். இது தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்துமாம்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக