நாட்டில் நாளைய தினம் பாடசாலை நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஞாயிறு, 23 ஜூன், 2024

நாட்டில் நாளை (24-06-26-ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் 
குறிப்பிட்டுள்ளது. 
 கல்வி சாரா ஊழியர்கள் நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
 கல்வி மற்றும் கல்விசாரா சேவையிடம் தேசிய கொள்கையை தயாரிக்குமாறு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 
 இந்நிலையிலேயே நாளை (24ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு 
அறிவித்துள்ளமை என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



READ MORE - நாட்டில் நாளைய தினம் பாடசாலை நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

திடீரென இலங்கையில் அதிகரித்த மரக்கறிகள் விலைகள்

சனி, 22 ஜூன், 2024

இலங்கையில் பல பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இதர காரணங்களினால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென 
அதிகரித்துள்ளது. 
 மரக்கறி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 550 முதல் 750 ரூபாய் வரையிலும், ஒரு கிலோகிராம் கறி மிளகாய் மற்றும் மிளகாய் 500 முதல் 650 ரூபாய் வரையிலும், 
ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 350 முதல் 500 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளதுடன் ஏனைய மரக்கறி
 வகைகள் அதிகளவில்
 உயர்ந்த நிலையில் உள்ளதாக பாவனையாளர் கூறுகின்றனர்.
 அத்துடன், ஒரு கிலோ கிராம் கரட் 460 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் வெண்டைக்காய் 500 ரூபாவிற்கும், இஞ்சி ஒரு
 கிலோ 3,500 ரூபாவிற்கும், தேசிக்காய் ஒரு கிலோ 1,800 ரூபாவிற்கும் 
விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, கடந்த 
நாட்களில் 100 ரூபாவிற்கு குறைவாக விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள்.
22-06-2023. இன்று 300 முதல் 500 ரூபாவைக் கடந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர். 
 கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளதால் மரக்கறிகளின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாகவே
 நாடளாவிய ரீதியில் இவ்வாறு மரக்கறிகளின் 
விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது மரக்கறிகள் நுகர்வோரின் தேவைக்கு
 ஏற்ற வகையில் வரத்து இல்லாததால் காய்கறிகளின் விலைகள் மேலும் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - திடீரென இலங்கையில் அதிகரித்த மரக்கறிகள் விலைகள்

தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரு இலங்கையர்கள் கைது

வெள்ளி, 21 ஜூன், 2024

இலங்கையிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இரு இலங்கையர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
 தமிழகத்தின் இராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்றில் இருவர் வந்திறங்கியுள்னர்.
 இவ்வாறு வந்திறங்கியவர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இருவரையும் பிடித்து மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 விசாரணையில் அவர்கள் இருவரும் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக
 தமிழகத்திற்குள் 
தஞ்சமடைய வந்தார்களா அல்லது கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை 
நடைபெற்று வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரு இலங்கையர்கள் கைது

நாட்டில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கி

வியாழன், 20 ஜூன், 2024

இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
 இலங்கையில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இன்டர்நெசல் இன்டஸ்ரியல் எக்ஸ்போ- 2024 (சர்வதேச கைத்தொழில் கண்காட்சி) நேற்று முன்தினம் ஆரம்பமானது. இந்தக் கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
 இந்நாட்டின் கைத்தொழில் துறையின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரன விசேட கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றார். அதன் ஒரு கட்டமாக இந்த தொழில் கண்காட்சியைக் குறிப்பிடலாம். இது நாட்டிலே நடத்தப்படும் மிகப்பெரிய கண்காட்சியாகும்.
 கடந்த காலத்தில் நமது நாடு வங்குரோத்தடைந்த நாடாக மாறியிருந்தது. ஆனால் அடுத்த சில வாரங்களில் நாம் வங்குரோத்தடைந்த நாடு என்ற அவப்பெயரில் இருந்து முற்றிலும் விடுபடுவோம். 
இது தொடர்பான ஒப்பந்தமும் அடுத்த சில வாரங்களில் 
எட்டப்பட உள்ளது. 
இதன்மூலம், தனியார் கடனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எளிதாகிறது. எனவே இந்த பணியை இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்வோம். ஆனால் இதில் மட்டும் திருப்தி அடைய முடியாது.
 இந்தக் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பல வருடங்களுக்கு முன்னர் பெற்ற 
கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு 2042 வரை கால அவகாசம் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கி

நாட்டில் வாடகை வரியால் 90 சதவீதமான மக்கள் நன்மையடைவார்கள்

புதன், 19 ஜூன், 2024

நாட்டில் உத்தேச வாடகை வருமான வரி இந்த நாட்டின் 90% மக்களுக்கு நன்மை பயக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  
10% பணக்காரர்களுக்கு மட்டுமே அந்த வரி விதிக்கப்படும் என்றார். எனவே இந்த வரி தொடர்பில் சாதாரண மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் வலியுறுத்துகின்றார். 
 பாராளுமன்றத்தில் இன்று (19.06)  கசினோக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட வரித் திருத்தங்கள் தொடர்பான கட்டளைகள் மீதான 
விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 
வரிக்கு உட்பட்ட 10% மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிகள் ஏனைய 90% மக்களின் தேவைக்கே செலவிடப்படுவதாகவும் அமைச்சர்
 சுட்டிக்காட்டினார்.  
இதேவேளை, கசினோ நிலையங்களில் இருந்து வரி அறவீடு செய்வது தற்போதைய ஆட்சியில் இடம்பெறுவதாக அமைச்சர் 
தெரிவித்தார். 
அமைச்சர் சியம்பலாபிட்டியவின்  கருத்துப்படி, அரச வருவாயில் கசினோ ஒன்றின் வருவாயில் 60 வீதத்தை அரசாங்கம்
 சேர்க்க முடிந்தது. 
முன்னதாக கசினோக்களில் இருந்து வருமான வரி மட்டுமே வசூலிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது உரிமத்திற்காக 50 கோடியும், ஆண்டு புதுப்பித்தலுக்கு 50 கோடியும், புரள்வுச் செலவில் 15% கசினோக்களில் இருந்து வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.  
மாநில வருமானத்தை உயர்த்துவது மற்றும் சில வணிகங்களை ஊக்கப்படுத்துவது மற்றும் வரி வசூலிப்பது போன்ற எதிர்பார்ப்புகளை அமைச்சர் குறிப்பிட்டார். 
இதன்படி, உலகில் கசினோக்களுக்காக அதிக வரி வசூலிக்கும் நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
  என்பது குறிப்பிடத்தக்கது    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வாடகை வரியால் 90 சதவீதமான மக்கள் நன்மையடைவார்கள்

நாட்டில் மின் கட்டண திருத்த கருத்துக்களை கூற மக்களுக்கு அரிய வாய்ப்பு

செவ்வாய், 18 ஜூன், 2024

நாட்டில்2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் பிரிவு 30 க்கு இணங்க, முன்மொழியப்பட்ட இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தை (பொது 
ஆலோசனை) பெற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 
முடிவு செய்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத் திருத்தப் பிரேரணையை இலங்கை மின்சார சபை தற்போது மீளாய்வு செய்து வருகின்றதுடன் அதற்கான
 ஆலோசனைப் பத்திரத்தை www.pucsl.gov.lk என்ற 
இணையத்தளத்தில் அணுக முடியும்.
உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பாக 2024 ஜூலை 08 ஆம் தேதி வரை பொதுமக்களின் எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 
தெரிவித்துள்ளது. 
இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான வாய்மொழிக் கருத்துகளுக்கான வாய்ப்பு ஜூலை 09, 2024 அன்று நடைபெறும்.
முன்மொழியப்பட்ட கட்டண திருத்தம் தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பின்வரும் முகவரிக்கு அல்லது பின்வரும் முறைகள் மூலம் சமர்ப்பிக்கலாம்.
தொலைநகல் : 011 2392641 மின்னஞ்சல்: consultation@pucsl.gov.lk இணையதளத்திலிருந்து: www.pucsl.gov.lk Facebook கணக்கு: www.facebook.com/pucsl 
 மேலதிக தகவல்களுக்கு 0112392607/8. இந்த இலக்கத்துடன் 
தொடர்பு கொள்ளவும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மின் கட்டண திருத்த கருத்துக்களை கூற மக்களுக்கு அரிய வாய்ப்பு

திருகோணமலையை சேர்ந்தவர் பாக்குநீரினையை கடந்து சாதனை புரிந்த மற்றுமொரு மாணவர்

திங்கள், 17 ஜூன், 2024

திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா 15-06-2024. சனிக்கிழமை  இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்துள்ளார்.  
15-06-2024. சனிக்கிழமை அதிகாலை 02.00 மணிக்குத் தொடங்கி முற்பகல் 11.00 மணியளவில் நீந்தி முடித்துள்ளார்.  
பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது முஸ்லிம் நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார்.
தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வய­தான இவர் கடந்த மூன்று மாதங்­க­ளாக இச் சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டுள்ளார். கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரி­ணையின் இலங்கை கடல் எல்லையில்
 இருந்து தலை­மன்னார் வரை­யான தூரத்தை பயிற்சி அடிப்­ப­டையில்
 நீந்திக் கடந்­துள்ளார்.  
இவ­ருக்­கான நீச்சல் பயிற்­சி­களை விமா­னப்­படை கோப்ரல் றொசான் அபே­சுந்­தர வழங்கி வரு­கின்றார்.  
மேலும் கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த ஹரி­கரன் தன்­வந்­தை­யையும் இவரே பயிற்­று­வித்­தி­ருந்தார்.  
இலங்­கை­ய­ரான இள வய­தை­யு­டைய பஹ்மி ஹஸன் சலாமா நாட்டின் விளை­யாட்டு வர­லாற்­றிலே தனது பெயரை பதிந்து கொள்­வ­தற்­காக தனது இலக்­கினை அடைந்து கொள்ளும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார்.  
அத்துடன், திரு­கோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்­றுலா பணி­ய­கத்­தினால் நடாத்­தப்­பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்­டியில் வெற்­றி­யா­ள­ராக தெரிவாகி இருக்கின்றார்.  
பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத் துறைக்கு அப்பால் சென்று தனது அர்ப்பணிப்புகளூடாக நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற்பாதுகாப்பு செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - திருகோணமலையை சேர்ந்தவர் பாக்குநீரினையை கடந்து சாதனை புரிந்த மற்றுமொரு மாணவர்

நாட்டில் வாடகை வீடு வைத்திருப்பவர்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி அரசாங்கத்தின் புதிய திட்டம்

ஞாயிறு, 16 ஜூன், 2024

இலங்கையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, 2025 ஏப்ரல் 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் காலியாக உள்ள குடியிருப்பு சொத்துக்களுக்கு 
வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது. 
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள சமீபத்திய விரிவான அறிக்கையிலேயே இவ்வாறு
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
 IMF நாட்டு அறிக்கை 24/161 சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நான்கு வருட விரிவான நிதி வசதித் திட்டத்தின் இரண்டாவது
 மதிப்பாய்வைத் தொடர்ந்து வெளியிடப்பட்டது.
 அத்தகைய வரியை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அறிக்கை காட்டுகிறது. 
அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கு இவ்வாறான வரியை அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. 
இதன்படி 2026ஆம் ஆண்டுக்குள் இந்த வரி முறையை முழுமையாக அமுல்படுத்த இலங்கை இலக்கு வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி என்பது ஒரு வீட்டின் உரிமையாளர் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் அவர் பெறும் வருமானத்தின் மதிப்பீடாகும். இந்த வரி வீட்டின் மதிப்பின் அடிப்படையில் 
அல்ல, ஆனால் அதன் மூலம் பெறக்கூடிய வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.  
இந்த வரி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளூராட்சி மட்டத்தில் தரவுத்தளமொன்றை நிறுவுவதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் எனவும், நாட்டிலுள்ள சொத்து 
உரிமையாளர்களுக்குச் 
சொந்தமான சொத்துக்களின் புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டை தரவுத்தளத்தில் உள்ளடக்கியிருக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.  
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தரவுத்தளத்தை உருவாக்கும் பணியை முடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சொத்து 
வரி மற்றும் பரிசு மற்றும் பரம்பரை வரி முறையை
 நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், புதிய '
கட்டண வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டுப்பாடுகள்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வாடகை வீடு வைத்திருப்பவர்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி அரசாங்கத்தின் புதிய திட்டம்

நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில்

சனி, 15 ஜூன், 2024

நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக பதில் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் தினசரி போக்குவரத்து பொலிஸாரால் கிட்டத்தட்ட 1000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மாதாந்தம் கிட்டத்தட்ட 30,0000 பேர் வரையில் கைது செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, மதிப்பெண் முறை அறிமுகப்படுத்திய பின்னர் இவ்வாறு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாரதிகளின் புள்ளிகள் குறைக்கப்படும்.
சாரதி அனுமதி பத்திரத்தில் மொத்தமான 24 புள்ளிகள் சாரதி அனுமதி பத்திரத்தில் வழங்கப்படும். ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றால் 10 புள்ளிகள் குறைக்கப்படும்.
குடி போதையில் வாகனம் ஓட்டினால் 6 புள்ளிகள் குறைக்கப்படும். 24 புள்ளிகள் குறைக்கப்பட்டால் 2 வருடங்களுக்கு சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும்.
2 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து பரீட்சை எழுதி சாரதி அனுமதி பத்திரம் பெறும் பாடசாலைக்கு சென்று அனுமதி பத்திரம் 
பெற வேண்டும்.
விதிகளை மீறும் சாரதிகளுக்கு பயிற்சியளித்த தரப்பினர் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலும் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில்

இலங்கை அலங்கார மீன்கள் ஏற்றுமதி மூலம் பல கோடி வருமானம் ஈட்டியுள்ளது

வெள்ளி, 14 ஜூன், 2024

நாட்டில்2019ம் ஆண்டு முதல் இந்த வருடம் (2024) ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில், அலங்கார மீன்கள் ஏற்றுமதி மூலம் இலங்கை 263.2 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
 இந்த அலங்கார மீன்கள் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கவும், அது தொடர்பிலான தொழில்துறையை
 மேம்படுத்தவும் மீன்பிடி துறை அமைச்சினால் பல புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கை அலங்கார மீன்கள் ஏற்றுமதி மூலம் பல கோடி வருமானம் ஈட்டியுள்ளது

நாட்டில் புகையிரதம் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் தாமதமாகலாம்

வியாழன், 13 ஜூன், 2024

நாட்டில் பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதால் தடைப்பட்டிருந்த கரையோரப் புகையிரதப் பாதை வழமைக்கு திரும்பியுள்ளது. 
எவ்வாறாயினும், அந்த பாதையில் மேலும் ரயில்கள் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 
இன்று (13) காலை பாணந்துறை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்ட புகையிரதம் ஒன்று தடம் புரண்டதுடன், இதன் காரணமாக கரையோரப் பாதையில் புகையிரத சேவை தடைப்பட்டது. 
அருகில் இருந்த சிசிடிவி கேமராவிலும் ரயில் தடம் புரண்டது 
பதிவாகியுள்ளது.  
இதேவேளை, புகையிரதம் தடம் புரண்டமையினால், மலையகப் பாதையில் இயங்கும் புகையிரத சேவையும் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விரைவு ரயில் தலவாக்கலை மற்றும் வடகொட நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் புகையிரதம் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் தாமதமாகலாம்

நாட்டில் மன்னாரில் இரண்டாம் ஆம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை செயற்றிட்டம்

புதன், 12 ஜூன், 2024

நாட்டில் மன்னார் மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை செயற்றிட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு களுக்கு
 எதிராக 12-06-2024.இன்றைய தினம் புதன்கிழமை 
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பல்வேறு தரப்பினரால் எதிர்ப்புக்கள் முன் வைக்கப்பட்டது.
 எனினும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் எவ்வித அனுமதியும் வழங்கப்படாமல் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளிற்கு எதிராக மக்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
 மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலில் அபிவிருத்தி குழுவின் தலைவரான இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் குறித்த கூட்டம் இடம் பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன்,கே.திலீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பல்வேறு விடையங்கள் குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் 2வது கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு குறித்து 
கலந்துரையாட பட்ட போது பல்வேறு தரப்பினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. -மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மீனவ
 அமைப்புகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஆகியவை எதிர்ப்பை தெரிவித்தனர்.
 மன்னார் தீவு பகுதிக்குள் கணிய மணல் அகழ்வு அல்லது ஆராய்ச்சி நடவடிக்கைகள் இனி இடம் பெற கூடாது என பல முறை தெரிவிக்கப்பட்ட போதும்,குறித்த அகழ்வு தொடர்பாக 
அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கதைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த அபிவிருத்தி 
குழு கூட்டத்தின் போது காற்றாலை மின் செயற் திட்டம் தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசுவதாக பாராளுமன்ற 
உறுப்பினர் தெரிவித்த போதும் இதுவரை 
எவ்வித முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.
 மன்னார் தீவில் கணிய மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட கூடாது என்பதே அனைவரினதும் கோரிக்கை.எனினும் கணிய மணல் அகழ்வை முன்னெடுக்கும் நிறுவனத்தை அழைத்து கலந்துரையாடியமை யை ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
குறித்த விடயத்தை திரும்ப திரும்ப கதைப்பதில் அர்த்தம் இல்லை. அதற்கான அனுமதியை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு வழங்காத நிலையில்,கொழும்பில் அனுமதி வழங்குவதாக இருந்தால் இந்த மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் எதற்கு ? என்றும் அவ்வாறு கொழும்பில் 
அனைத்திற்கும் அனுமதி வழங்கினால் இனிமேல் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நடத்துவதில் அர்த்தம் இல்லை என்றும் ,இனிமேல் நடத்த வேண்டாம் என்றும் அவர் பகிரங்கமாக 
கோரிக்கை விடுத்தார். மேலும் பல்வேறு விடயங்கள் 
குறித்து ஆராயப்பட்டது.
குறித்த கூட்டத்தில் திணைக்கள தலைவர்கள்,முப்படையினர்,பிரதேச செயலாளர்கள்,வட மாகாண திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாட்டில் மன்னாரில் இரண்டாம் ஆம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை செயற்றிட்டம்

உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புக்கள்

செவ்வாய், 11 ஜூன், 2024

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மக்களை பெரும்பாலும் உட்கார்ந்த வாழ்க்கைமுறைக்குள் தள்ளிவிட்டது. நீண்ட நேரம் உட்கார்ந்த வாழ்க்கைமுறையானது நம் உடலில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. 
இதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தடுக்க ஒரே வழி அதிக உடல் உழைப்பில் ஈடுபடுவதாகும். போதுமான உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது,
 நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புக்ளை எதிர்த்துப் போராட அவசியமாகும். 
ஆனால் உடல் செயல்பாடுகளுக்கு எத்தனை மணி நேரம் ஒதுக்க வேண்டும், எவ்வளவு நேரம் நிற்க வேண்டும் அல்லது உட்கார வேண்டும்? ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு இந்த முக்கிய கேள்விகளுக்கானப் பதிலைக் கொண்டுள்ளது.
 சிறந்த ஆரோக்கியத்திற்கு, ஒருவரின் நாளானது குறைந்தது எட்டு மணிநேர தூக்கம், மிதமான அல்லது தீவிரமான பயிற்சிகளை உள்ளடக்கிய நான்கு மணிநேர உடல் செயல்பாடுகளை உள்ளடக்கியதாக 
இருக்க வேண்டும். 
மிதமான செயல்பாடு என்பது வேலைகளைச் செய்வதிலிருந்து இரவு உணவு தயாரிப்பது வரை இருக்கலாம், அதேசமயம் மிதமான 
மற்றும் தீவிரமான உடற்பயிற்சியானது 
விறுவிறுப்பான நடை
 அல்லது ஜிம் பயிற்சி போன்ற இயக்கத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புக்கள்

நாட்டில் விற்பனையாகும் சவர்க்காரம் தொடர்பில் வெளியான எச்சரிக்கை

திங்கள், 10 ஜூன், 2024


நாட்டில் தரமற்ற சவர்க்காரங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு ஒவ்வாமைகள் ஏற்படுவதாக அரசாங்க குடும்ப நலச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
 கிராமப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருவதாக அதன் தலைவி தேவிகா கொடித்துவக்கு 
குறிப்பிட்டுள்ளார். 
 தற்போது வீட்டுக் கைத்தொழில்கள் ஊடாக பல்வேறு தரப்பினர் சவர்க்கார தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், இவ்வாறு தயாரிக்கப்படும் சவர்க்காரங்களின் தரம் தொடர்பில் சந்தேகங்கள் நிலவுவதாக 
குறிப்பிட்டுள்ளார்.
 எனவே இவ்வாறான சவர்க்காரங்களைத் தவிர்த்து குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படும், தரமான சவர்க்காரங்களைப் பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
  என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் விற்பனையாகும் சவர்க்காரம் தொடர்பில் வெளியான எச்சரிக்கை

உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக உள்ளதா இவற்றை செய்யுங்கள்

ஞாயிறு, 9 ஜூன், 2024

உங்கள் வீடு என்பது வெறும் கட்டடம் மட்டுமல்ல; அந்த வீட்டில் வசிப்போரின் வாழ்வு, தாழ்வில் அது முக்கியப் பங்கு வகிக்கின்றது. நாம் வசிக்கும் இல்லம் கிட்டத்தட்ட ஒரு கோயிலுக்கு சமமாகிறது. 
அதில் எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் அவை வீட்டில் வசிப்போரின் மனங்களில் பயம், பதற்றம், சோகம் போன்ற உணர்வுகளை உருவாக்கி, ஆரோக்கியம், முன்னேற்றம், செல்வ வளம் நல்வாழ்வு 
போன்றவற்றை பாதிக்கும்.  
வீட்டின் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் விஷயங்கள்:  
1. இரண்டு மூன்று நாட்களுக்கு அழுக்குத் துணிகளை துவைக்காமல் குவியலாக போட்டு வைப்பது, அதேபோல துவைத்த துணிகளை சோபாவிலோ நாற்காலியிலோ அம்பாரமாகக் குவித்து வைப்பது.  
2. சமையலறை சிங்கில் வழிய வழிய எப்போதும் எச்சில் பாத்திரங்களைப் போட்டு வைத்திருப்பது.  
3. வீட்டு உறுப்பினர்கள் எப்போதும் உரத்த குரலில் பேசிக்கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருப்பது. 4. வீட்டின் மூலைகளில் ஒட்டடை பிடித்து இருப்பது.  
5. வீட்டின் தரையைத் துடைக்காமல் அழுக்காக 
வைத்திருப்பது.  
6. வாசலில் செருப்புகளை தாறுமாறாகப் போட்டு வைப்பது. 7. நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாத பொருட்களை பரணிலோ, ஸ்டோர் ரூமிலோ போட்டு அடைத்து வைத்திருப்பது, பழுதடைந்த ஓடாத பழைய 
ஃபேன், ரேடியோ, ஓடாத கடிகாரம், உடைந்த பொம்மைகள், பாத்திரங்கள், மண் தொட்டிகள் போன்றவற்றை வைத்திருப்பது.  
8. நிரம்பி வழியும் குப்பைக் கூடை போன்றவை வீட்டின் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.  
நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வழிகள்:  
1. தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை துணிகளைத் துவைத்து, உலர்ந்ததும் மடித்து பீரோவில் வைக்க வேண்டும். அவ்வப்போது பாத்திரங்களை துலக்கி வைத்து விட வேண்டும். செருப்புகளை 
அழகாக ஒரு ஸ்டாண்டில் அடுக்கி வைக்க வேண்டும்.
 இரண்டு தினங்களுக்கு ஒரு முறை குப்பையை வெளியேற்றி விடவேண்டும். உடைந்த பொருட்களை உடனே அகற்றவும்.  
2. வீட்டு பூஜை அறையில் தினமும் ஊதுபத்தி, சாம்பிராணி பொருத்தி, பச்சைக் கற்பூரம் ஏற்றி, மணியடித்து பூஜை செய்து, சப்தமாக 
ஸ்லோகங்கள் சொல்லும்போது கெட்ட அதிர்வலைகள் வீட்டை விட்டு ஓடிவிடும். நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். மந்திரங்கள், ஸ்லோகங்கள் போன்றவற்றை வீடு முழுக்க 
ஒலிக்கச் செய்ய வேண்டும். 
3. கல் உப்பு தண்ணீர் கொண்டு வீட்டை வாரம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ துடைக்க வேண்டும். படுக்கை அறையில் ஒரு கிண்ணத்தில் கல்லுப்பை வைத்தால் கணவன் - மனைவி இடையே உள்ள
 பிணக்குகள் நீங்கும். 
4. பகலில் எப்போதும் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்து இயற்கையான சூரிய ஒளி வீட்டுக்குள் வர வழி செய்ய வேண்டும்.  
5. வீட்டில் ஆங்கங்கே பொருட்களை போட்டு வைக்காமல், அழகாக அடுக்கி வைக்க வேண்டும்.  
6. வீட்டில் துளசிச் செடி, கற்றாழை வளர்ப்பது நேர்மறை ஆற்றலை உருவாக்கும். அவை சுத்தமான காற்றை வழங்கி, எதிர்மறை ஆற்றலை விரட்டுகின்றன.  
7. தண்ணீர், எலுமிச்சைச் சாறு, வெள்ளை வினிகர் மற்றும் உப்பு கலந்து ஜன்னல்கள் மற்றும் கதவு கைப்பிடிகளை சுத்தம் செய்ய வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் பெருகும். என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக உள்ளதா இவற்றை செய்யுங்கள்

கட்டுநாயக்கவிலிருந்து கனடாவுக்குச் செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது

புதன், 5 ஜூன், 2024

கட்டுநாயக்கவிலிருந்து  வேறொருவரின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, செல்லுபடியாகும் விசாவின் மூலம் கனடாவுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞனை குடிவரவு 
அதிகாரிகள் .குழுவொன்று கைது செய்துள்ளது

அவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.
விமான அனுமதியை முடித்து விட்டு குடிவரவு நிலையத்திற்கு வந்து அங்கு பணிபுரியும் குடிவரவு அதிகாரியிடம் கடவுச்சீட்டை வழங்கினார்.
கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்திற்கும் அவரது முக 
அமைப்புக்கும் ப வித்தியாசம் காணப்பட்டதால், இந்தக் கடவுச்சீட்டைப் பற்றிய மேலதிக தகவல்களைக் கண்டறியும் வகையில், குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உள்ளிடப்பட்டன.
அப்போது, இந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவர் நாட்டை விட்டு வெளியேற திருகோணமலை நீதிமன்றம் தடை விதித்துள்ளமை 
தெரியவந்துள்ளது.
கனடா சென்ற பின்னர் அனுராதபுர நகரத்தில் உள்ள தரகர் ஒருவர் தனக்கு ஒரு கோடி முப்பது இலட்சம் ரூபாவை தரவேண்டுமென உறுதியளித்து கனடாவில் செல்லுபடியாகும் விசா உள்ள இந்த கடவுச்சீட்டை கொடுத்ததாக இந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கட்டுநாயக்கவிலிருந்து கனடாவுக்குச் செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது

நாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் ஏழு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்

செவ்வாய், 4 ஜூன், 2024

நாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை பல பிரதேச செயலகங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  
தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு இந்த நாட்களில் மதுபான கடைகள் மூடப்படும் என இலங்கை கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி, மத்திய நுவரகம் மாகாணம், கிழக்கு நுவரகம் மாகாணம் மற்றும் மிஹிந்தலை பிரிவு 03 ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் அக்காலப்பகுதியில் மூடப்படும்.
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் ஏழு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்

வானிலையில் இலங்கையின் ஏற்பட்ட திடீர் மாற்றம்

திங்கள், 3 ஜூன், 2024

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையானது தற்காலிகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு 
மாகாணங்களில் பல மழைக்காலங்கள் ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 
எவ்வாறாயினும் மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை
 பெய்யக்கூடும்.  
தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வானிலையில் இலங்கையின் ஏற்பட்ட திடீர் மாற்றம்

இலங்கையில் மீண்டும் பல பகுதிகளில் மின் வெட்டு அறிவிப்பு

ஞாயிறு, 2 ஜூன், 2024

நாட்டில் காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.  
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கூறுகையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி
 செய்வதற்கும் 
மின்சார உட்கட்டமைப்பின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வசிப்பவர்கள் அமைதியாக இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் மீண்டும் பல பகுதிகளில் மின் வெட்டு அறிவிப்பு

நாட்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பரில் வெளியாகும்

சனி, 1 ஜூன், 2024

நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.  
387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்கலாக 452,979 பரீட்சார்த்திகள் இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றியதாக அவர் கூறினார்.
 க.பொ.த (சா/த) பரீட்சைகள் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்றமை
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பரில் வெளியாகும்