கிளிநொச்சியில் தன் தாயாரை கண்கலங்க வைத்த ஆசிரியரின் பழிவாங்கியா மகன்.

சனி, 1 ஏப்ரல், 2023

மாணவர்களை திட்டும் ஆசிரியர்களுக்கு இது சமர்பணம்..!இது கிளிநொச்சியில்…!
30-03-2023.அன்று  கிளிநொச்சி மத்திய கல்லூரியின் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
வைத்திய கலாநிதி ஜெயக்குமார் ஜெனாரொசிங்ரன் அழைக்கப்பட்டிருந்தார்.இன்றைக்கு பத்து வருடங்களிற்கு முன்னர் 2013 அதே பாடசாலையில் உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த
ஜெனாரொசிங்ரன் தன் நண்பர்களுடன் இணைந்து பாடசாலைக்கால குறும்பு ஒன்றை செய்து விட்டான் என்று அதிபர் அலுவகத்திற்கு அழைக்கப்பட்டான்.பின்னர் பெற்றோரை அழைத்து வருமாறு உத்தரவிடப்பட்டது
தந்தையை இழந்திருந்த ஜனா அண்ணா தாயாரை 
அழைத்து வந்தான்
ஆசிரியர்களும் அத்தனை மாணவர்களும் சூழ்ந்து நிற்க ஒரு கொலை குற்றவாளியை போல தலைகுனிய நிறுத்தப்பட்டான்.ஒரு ஆளுமையற்ற ஆசிரியர் அவனை தாறுமாறாக ஏசினார் கீழ்த்தரமான 
வார்த்தைகளால் தாக்கினார்
அவனுடைய தாயாரை அழைத்து உங்கட பிள்ளைக்கு படிப்பு சரிவராது.கொண்டு போய் எங்கயும் மாடு மேய்க்க விடுங்கோ.இவன் ஏயல்ல ஓல் f எடுக்காட்டி நான் மொட்டையடிக்கிறன் என்றார்.தொடர்ச்சியாக பழிவாங்கப்பட்டான்.
இந்த சம்பவத்தை அவனும் தாயாரும் கண்ணீருடன் கடந்து சென்றனர்.காலங்கள் கடந்தது ஏயல் பரீட்சை முடிந்தது பெறுபேறும் வந்தது மருத்துவ துறைக்கு தெரிவானான் ஜனா அண்ணா ,மருத்துவ பீட படிப்பை முடித்து தனது சொந்த ஊரிலே வைத்திய சேவையை 
ஆற்றுகின்றான்..
இன்று 10 வருடத்தின் பின்னர் அதே பாடசாலையில் வாத்தியங்கள் முழங்க மாலைகள் சூழ பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டான்.இத்தனைக்கும் அந்த வாத்தி அதே பாடசாலையில தான் இப்பயும் படிப்பிச்சிட்டு இருக்கார்
இத விட தன் தாய்க்கு அவன் வேறு என்ன கெளரவத்தை கொடுத்து விட முடியும்.
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆகிட்டு வாழ்த்துக்கள் ஜனா அண்ணா
நாடி நரம்பில எல்லாம் வைராக்கியம் ஊறிப்போய் ஒன்பது கிரகமும் ஒன்று சேர்ந்து சப்போட் பண்ற ஒருத்தனால தான் இப்பிடி திருப்பி அடிக்க முடியும்.இவன் எங்கள் காலத்தில் ஓர் தோமஸ் அல்வா எடிசன்
இப்படிக்கு அவனுக்கு அடுத்த பட்ச்ல இருந்து இத எல்லாம்
 அவதானித்த ஒருவன் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக