யாழ் சங்கானையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானை வைத்தியசாலை 
வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற வேளை ஊரவர்கள் மடக்கி பிடித்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை கணவன் - மனைவி இருவரும் சுன்னாகம் பகுதியிலும் கடந்த வாரம் நபர் ஒருவருடைய சங்கிலியை அறுத்ததாகவும், அதனை யாழ். நகர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாகவும்
 தெரிவித்துள்னர்.
விசாரணைகளின் பின்னர் இருவரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - யாழ் சங்கானையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

.நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

வியாழன், 19 செப்டம்பர், 2024

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும்
நாளை வெள்ளிக்கிழமை. 20-09-2024.  விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு 
தெரிவித்துள்ளது.
எதிர்வரும்.21-09-2024. சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் திங்கட்கிழமை .23-09-2023.வழமை போன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.என்பதாகும் 

 </ இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 



READ MORE - .நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பு

புதன், 18 செப்டம்பர், 2024

நாட்டில் வைத்தியசாலைகளுக்கு தேவையான 40 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
 கடந்த வருடம் இந்த நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும் இதுவரையில் அவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு 
தெரிவித்துள்ளது.
 இந்நிலையில், வெளிப்படையான முறையில் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தொடர்ந்தும் 
வைத்தியசாலைகளுக்கு மருந்துகள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பு

.நாட்டில் புலமை பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்களை நீக்குவதற்கு தீர்மானம்

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

நாட்டில் சர்ச்சைக்குரிய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாள், முறையான பரீட்சையின் பின்னர் மூன்று கேள்விகளை நீக்குவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.
 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் உள்ள
 மூன்று வினாக்களைப் போன்று மூன்று கேள்விகளை 
அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாதிரித் தாள் மூலம் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் விளக்கமளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
அதன்படி இன்று புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளை தயாரித்த குழு ஒன்று கூடி கலந்துரையாடப்பட்டு அது தொடர்பான மூன்று வினாக்களை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
 இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாளை (18) புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்லவுள்ளதாகவும், அவர்களின் அறிக்கையின் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
.  என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - .நாட்டில் புலமை பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்களை நீக்குவதற்கு தீர்மானம்

வரலாறு காணாத அளவு இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

திங்கள், 16 செப்டம்பர், 2024

இலங்கையின் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு 
அதிகரித்துள்ளது. 
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மக்கள் அதிகளவு கொள்வனவு செய்யும் ஆபரண தங்கமான 22 கரட் ஒன்றின் விலை 2 இலட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வரலாறு காணாத அளவு இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

நாட்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று.15-09-2024. நடைபெறவுள்ளது.  
இந்த ஆண்டுக்கான பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 323,879 பரீட்சார்த்திகள் இதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 
பரீட்சைகள் காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் பரீட்சார்த்திகள் அனைவரும் காலை 09.00 மணிக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்தில் அமருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 
பரீட்சையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 
புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ 
தெரிவித்துள்ளார்.  
புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னரும் பரீட்சைக்கு பின்னரும் குழந்தைகளின் மன நிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென உளவியலாளர்  ரூமி ரூபன் கூறுகிறார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் முகவர் ஒருவர் கைது

சனி, 14 செப்டம்பர், 2024

 இலங்கையில்  வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண் முகவர் ஒருவர் தப்பிச் செல்லும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுக்கு நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பத்து இளைஞர், யுவதிகளிடம் இருந்து 60 இலட்சம் ரூபா
 பெற்றுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரான குறித்த பெண் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது 
செய்யப்பட்டுள்ளார். சிலாபம் களுகம பிரதேசத்தில் 
வசிக்கும் 28 வயதுடைய பெண்ணொருவரே கைது
 செய்யப்பட்டுள்ளார்.
 வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட இளைஞர், யுவதிகள் விமான நிலையத்திற்கு சென்ற நிலையில், அவர்களின் ஆவணங்களுடன் அவர் தப்பிச் செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் முகவர் ஒருவர் கைது