ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இலங்கையின் நாணயம் வளர்ச்சி கண்டுள்ளது

புதன், 2 அக்டோபர், 2024

அமெரிக்க, ரஷ்ய, அவுஸ்ரேலிய ,கியூபாஅரசுகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அனுரவை இலங்கையில் சந்தித்து உரையாடியுள்ளதோடு தங்களின் பூரண ஆதரவையும் நாட்டின் வளர்ச்சிக்கு வர்த்தக 
ஒப்பந்தங்களையும் செய்வதாக
 உறுதியளித்துள்ளனர்.
 இவ் நடவடிக்கை காரணமாக இலங்கையின் நாணயம் வளர்ச்சி கண்டுள்ளது 1அமெரிக்க டாலர் =315/= ரூபாயாக இருந்தது தற்போது295 /= வாக வீழ்ச்சி கண்டுள்ளது. 1 சுவிஸ் பிராங் = 364= வாக இருந்தது தற்போது 347/= வீழ்ச்சி கண்டுள்ளது . 
 இலங்கை நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான காரணம். முன்னாள் அரசியல்வாதிகளின் அனாமதேய செலவுகள் துடைக்கப்பட்டதால் இலங்கை ரூபா தன்னை ஸ்திரப்படுத்தி வருவதும் , உலகநாடுகளின் நல்லலெண்ண சமிக்ஞைகளுமே 
காரணமாகும்.
 அத்தோடு புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பொருளாதார பலத்தையும் இலங்கைக்கு திருப்பி பல தொழில் வளங்களை
 இலங்கை மண்ணில் உருவாக்கவும் , புலம்பெயர் சமூக 
சமய அமைப்புக்கள் இலங்கையில் சுயாதீனமாக
 செயற்பட்டு மக்கள் சேவைகளை செய்ய 
அமைப்புக்களை சட்டரீதியாக விரைந்து 
பதிவுசெய்து கொடுத்து ஒழுங்குமுறைப்படுத்த வேண்டியதும் ஜனாதிபதியின் கவனத்திற்குரியதாகும்.
 முடிந்தவரை அன்னியச் செலாவணியை இலங்கைக்கு கொண்டுவந்தால் மட்டுமே இலங்கையின் பொருளாதார வீக்கத்தைக் குறைக்கமுடியும்; வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அன்றாடங்காச்சிகளான பாட்டாளி மக்கள் வாழ்வு சிறக்கும் அவர்களுக்கான ஆதாரமான 
ஓர் நல்அரசு விரைந்து உருவாகும் .என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக