நாடாளாவிய ரீதியில் முட்டை விலையில் வித்தியாசம் ஏன் இந்த நிலை

வெள்ளி, 4 அக்டோபர், 2024

 நாட்டில் முடடையின் விலையை அண்மைய காலங்களில் விலை குறைப்பு ஏற்படுத்தினாலும் சில கடைகளின் இன்னும் முட்டையின் விலை குறைக்கப்படவில்லை என மக்கள் விசனம்
 தெரிவித்துள்ளனர்.
 வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் உள்ள கடைகளில் சில பெரிய கடைகளிலும் சில சிறிய உள்ளூர் கடைகளிலும் முட்டையின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என நுகர்வோர்
 தெரிவித்துள்ளனர்.
 முட்டையின் விலை 28 ரூபாவிற்கு விலைக்குறைப்பு ஏற்படுத்தினாலும் அதற்கு அதிகமாகவே விற்கப்படுகின்றது. 
சில கடைகளில் முட்டையின் விலை 75 ருபாவிற்கும் விற்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்தள்ளர்னர்.என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாடாளாவிய ரீதியில் முட்டை விலையில் வித்தியாசம் ஏன் இந்த நிலை

யாழில் புலம்பெயர் தமிழரிடம் ஒரு கோடி ரூபாவை கொள்ளையிட்ட இருவர் கைது

வியாழன், 3 அக்டோபர், 2024

யாழில் தனது காணியை விற்ற பணம் ஒரு கோடியே 5 லட்ச ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரை தாக்கி விட்டு பணத்தை இருவர் கொள்ளையடித்து சென்ற குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சங்குவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவர் புதன்கிழமை (02) தனது காணியை விற்ற பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்து வந்த இருவர் அவரை வீதியில் வழிமறித்து அவரை தாக்கி விட்டு பணம் , கடவுச்சீட்டு , இலட்ச ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பணத்தினை பறிக்கொடுத்தவர், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில், சந்தேகநபர்கள் ஊரெழு பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரை 
கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் , கையடக்க தொலைபேசி உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழில் புலம்பெயர் தமிழரிடம் ஒரு கோடி ரூபாவை கொள்ளையிட்ட இருவர் கைது

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இலங்கையின் நாணயம் வளர்ச்சி கண்டுள்ளது

புதன், 2 அக்டோபர், 2024

அமெரிக்க, ரஷ்ய, அவுஸ்ரேலிய ,கியூபாஅரசுகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அனுரவை இலங்கையில் சந்தித்து உரையாடியுள்ளதோடு தங்களின் பூரண ஆதரவையும் நாட்டின் வளர்ச்சிக்கு வர்த்தக 
ஒப்பந்தங்களையும் செய்வதாக
 உறுதியளித்துள்ளனர்.
 இவ் நடவடிக்கை காரணமாக இலங்கையின் நாணயம் வளர்ச்சி கண்டுள்ளது 1அமெரிக்க டாலர் =315/= ரூபாயாக இருந்தது தற்போது295 /= வாக வீழ்ச்சி கண்டுள்ளது. 1 சுவிஸ் பிராங் = 364= வாக இருந்தது தற்போது 347/= வீழ்ச்சி கண்டுள்ளது . 
 இலங்கை நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான காரணம். முன்னாள் அரசியல்வாதிகளின் அனாமதேய செலவுகள் துடைக்கப்பட்டதால் இலங்கை ரூபா தன்னை ஸ்திரப்படுத்தி வருவதும் , உலகநாடுகளின் நல்லலெண்ண சமிக்ஞைகளுமே 
காரணமாகும்.
 அத்தோடு புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பொருளாதார பலத்தையும் இலங்கைக்கு திருப்பி பல தொழில் வளங்களை
 இலங்கை மண்ணில் உருவாக்கவும் , புலம்பெயர் சமூக 
சமய அமைப்புக்கள் இலங்கையில் சுயாதீனமாக
 செயற்பட்டு மக்கள் சேவைகளை செய்ய 
அமைப்புக்களை சட்டரீதியாக விரைந்து 
பதிவுசெய்து கொடுத்து ஒழுங்குமுறைப்படுத்த வேண்டியதும் ஜனாதிபதியின் கவனத்திற்குரியதாகும்.
 முடிந்தவரை அன்னியச் செலாவணியை இலங்கைக்கு கொண்டுவந்தால் மட்டுமே இலங்கையின் பொருளாதார வீக்கத்தைக் குறைக்கமுடியும்; வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அன்றாடங்காச்சிகளான பாட்டாளி மக்கள் வாழ்வு சிறக்கும் அவர்களுக்கான ஆதாரமான 
ஓர் நல்அரசு விரைந்து உருவாகும் .என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இலங்கையின் நாணயம் வளர்ச்சி கண்டுள்ளது

நாட்டில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் பேருந்து கட்டண திருத்தம்

செவ்வாய், 1 அக்டோபர், 2024

நாட்டில்.01-10-2024. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. 
 அதன்படி பஸ் கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் திருத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
 மேலும், குறைந்தபட்ச பஸ் கட்டணம் ஒரு ரூபாய் குறைக்கப்படும், மேலும் புதிய குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபாயாக இருக்கும்.
குறிப்பிடத்தக்கது என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் பேருந்து கட்டண திருத்தம்