வடமாகாண மக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

வெள்ளி, 8 மே, 2020

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்நிலையில், உணவகங்களில்
 பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கான ஆலோசனைகள் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.தற்போது
 மிகவும் ஆபத்தான கொரோனா தொற்றுநோய் பரவி வருவதனால் உணவகங்களில் உணவு உண்ணும் போது 
பின்வரும் நடைமுறைகளை அவதானமாகக் கடைப்பிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இயலுமானவரை 
உணவினை வாங்கிச் சென்று உண்ணுங்கள்.உணவகத்தின் உள்ளே 
இருவருக்கு இடையில் ஆகக் குறைந்தது 3 அடி இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.உணவு
 கையாளும் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் முகக் கவசம் அணிந்திருப்பதையும் சுத்தமாக இருப்பதையும் உறுதிப்படுத்துங்கள்.உணவு 
கையாளும் நிறுவனத்தில் கடமையாற்றும் வேலையாள்கள், 2 மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஓடும் நீரில் சவர்க்காரமிட்டு சரியான முறையில் 20 செக்கன்களாவது கைகளை 
கழுவுவது உறுதி செய்யப்படவேண்டும். உள் நுழையுமிடத்தில் வாடிக்கையாளர்கள் கைகளை கழுவுவதற்கான
 வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.சிறிதளவேனும் காய்ச்சல், இருமல், தொண்டை நோ போன்ற கோரோனா 
தொற்றின் குணங்குறிகளுடைய வேலையாள்கள் எவரும் உணவு கையாளும் நிறுவனத்தினுள்ளோ வளவினுள்ளோ
 கடமையில் ஈடுபடலாகாது. பொதுமக்கள் உணவங்கள் தொடர்பான முறைப்பாடுகளைத் தங்களது பகுதிப் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு மேற்கொள்ள முடியும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - வடமாகாண மக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

யாழில் மக்களை வீடுகளுக்குள் முடக்கி விட்டு பாரிய மின் வெட்டு

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளிற்காக நாளை (9) சனிக்கிழமையும் யாழின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.கடந்த சனிக்கிழமையும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அப்போதும் பராமரிப்புப் பணியென கூறப்பட்டது.
கடந்த சனிக்கிழமையும், நாளைய சனிக்கிழமையும் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதி.
 கொரொனாவை கட்டுப்படுத்த மக்கள் வீடுகளிற்குள் தங்கியிருக்க வேண்டும் என அரசு அறிவித்து வரும் நிலையில், மின் துண்டிப்பு நடைபெறுகிறது.வீடுகளிற்குள் முடங்கியிருக்கும் மக்களிற்கு மின்சாரம் மிக அவசியமான தேவைகளில் ஒன்று
. மக்களை வீடுகளிற்குள் முடக்கி வைத்திருக்க, அரசுக்கும் மின்சாரம் தேவை. ஆனால், இரண்டு தரப்பு பார்வையிலும் இந்த
 விவகாரத்தை நோக்காமல், யாழில் அடுத்தடுத்த சனிக்கிழமைகளில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படுகிறது.இது மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஒரு புறம் முடுக்கி 
விடப்படுகிறது. அனைத்து அரச நிறுவனங்களும் அதற்கு ஆதரவாக செயற்பட வேண்டியது அவசியம். மக்களை வீடுகளிற்குள் தங்க வைப்பதற்கு எதை செய்ய முடியுமோ, அதை அரச 
நிறுவனங்கள் செய்ய வேண்டியது அவசியம்.ஆனால், யாழில் அமுல்ப்படுத்தப்படும் மின்வெட்டு அந்த வகையானது அல்ல. அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது உண்மைதான். ஆனால், இரண்டு நாட்கள் பகல் பொழுது முழுவதும் மின் துண்டிப்பை
 மேற்கொண்டு, சாதாரண காலத்தில்
 மின்சாரசபை மேற்கொள்ளும் பராமரிப்பு பணிக்கு இது உகந்த தருமணமல்ல.யாழில் அமுல்ப்படுத்தப்படும் மின்வெட்டு குறித்து தொடர்புடைய அதிகாரிகள், அரச அதிபர், வடக்கு ஆளுனர் கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.நாளை காலை 8.30 தொடக்கம் மாலை 5 மணி வரை மின்வெட்டு 
அமுல்ப்படுத்தப்படும் இடங்கள்-

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - யாழில் மக்களை வீடுகளுக்குள் முடக்கி விட்டு பாரிய மின் வெட்டு

பணிக்குச் செல்லும் அரச, தனியார் ஊழியர்களுக்கு 11 ஆம் திகதி முதல் புதிய நடைமுறை

வியாழன், 7 மே, 2020

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிய பணியாளர்களின் பெயர்களின் பட்டியலுக்கமைய ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள குறுந்தகவலில் உள்ளவர்கள் மாத்திரமே ரயிலில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வே 
கட்டுப்பாட்டாளர் திலந்த பெர்ணான்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும் 11ஆம் திகதி நாட்டு மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்கக்ப்படுகின்றது.அத்தியாவசிய அலுவலக கடமைகளைத் தொடங்கும் போது ஊழியர்களின் போக்குவரத்தினை எளிதாக்குவதற்கு 
தேவையான வகையில் அலுவலக ரயில்களை பயன்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பத்து முக்கியமான ஆலோசனை குறிப்புகள் வழங்கப்படவுள்ளது
. இந்நிலையில், இதற்கு இணங்காத பயணிகள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க பொலிஸார், இராணுவம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைகள் எச்சரிக்கையுடன் இருப்பதாக 
ரயில்வே கட்டுப்பாட்டாளர் திலந்த பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.ரயில் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்,பயணிகளுக்கு இடையில் ஒரு மீட்டர் தூரத்தை 
கடைபிடித்தல்,ரயில் நிலையத்தில் கைகளை கழுவுதல்,கிருமிநாசினி தெளித்தல்ரயில் நிலையத்திற்கு
 சீக்கிரம் வந்து சேருதல்,ரயிலில் பயணிப்பதற்கு குறுந்தகவல் பெற்றிருத்தல்,கூட்டாக ஒன்றுகூடுவதை தவிர்த்தல்,எச்சில் துப்புதல் மற்றும் குப்பை போடுதலை தவிர்த்தல்,பொதுக் கழிப்பறைகள் பயன்படுத்தவதனை முடிந்தளவு
 தவிர்த்தல்,ஒதுக்கப்பட்ட இடங்களில் மாத்திரமே பயணித்தல்,போன்ற அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதென ரயில்வே கட்டுப்பாட்டாளர் மேலும் 
தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பணிக்குச் செல்லும் அரச, தனியார் ஊழியர்களுக்கு 11 ஆம் திகதி முதல் புதிய நடைமுறை

நாட்டில் 7 வயது சிறுவனுக்கும் கொரோனா.நேற்று 29 பேருக்குத் தொற்று

இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 29 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
 சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இந்த நோயாளிகளில் 24 பேர் கடற்படை சிப்பாய்கள் எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.ஏனைய
 நோயாளிகள் 5 பேரில் ஒருவர் யாழ்ப்பாணம், பலாலி பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏனைய நால்வர் கடற்படை சிப்பாய்களுடன் நெருங்கி பழகியவர்கள் என 
தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த நால்வருக்குள் 7 வயது சிறுவனும் உள்ளடங்குவதாக சுகாதார பணிப்பாளர் மேலும் 
தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் 7 வயது சிறுவனுக்கும் கொரோனா.நேற்று 29 பேருக்குத் தொற்று

கொரோனா நுவரேலியாவிற்குள்ளும் புகுந்தது முதலாவது நோயாளி கண்டுபிடிப்பு

ஞாயிறு, 3 மே, 2020

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவிய முதலாவது நபர், ஹங்குராங்கெத்த திக்கல்பொத்த பகுதியில் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று ரிகில்கஸ்கட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.வெலிசறை
 கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், இவர் கடந்த 22 ஆம் திகதி விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.எனினும், கடற்படையினரின் விடுமுறைகள் ரத்து 
செய்யப்பட்டதையடுத்து கடந்த 25 ஆம் திகதி இவர் முகாமுக்கு திரும்பியுள்ளார். வீட்டில் இருந்த காலப்பகுதியில் இவர் பலருடன் தொடர்பை பேணியுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 50 பேர் வரை தொடர்பை பேணியுள்ளனர் என்றும், இவர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும், கடற்படை சிப்பாயின் மனைவி, பிள்ளைகளை தியத்தலாவை கொரோனா
 தொற்று தடுப்பு முகாமுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிகில்கஸ்கட பொதுச் சுகாதார பரிசோதகர் ராஜநாயக்க தெரிவித்தார்.  குறித்த கடற்படை
 சிப்பாய் முகாமுக்கு சென்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலமே கொரோன தொற்று
 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - கொரோனா நுவரேலியாவிற்குள்ளும் புகுந்தது முதலாவது நோயாளி கண்டுபிடிப்பு

இலங்கை அரசு மருத்துவப் பொருட்களை துரித கதியில் விநியோகம் செய்ய திட்டம்

வெள்ளி, 1 மே, 2020

ரோன் கெமராக்களை பயன்படுத்தி மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக நாடளாவிய ரீதியில் ட்ரோன் (Drone) கெமராவை இயக்குபவர்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபை
 தீர்மானித்துள்ளது.ட்ரோன் கெமராவை இயக்கக்கூடிய 450 இற்கும் அதிகமானோர் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான
 சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.அத்துடன், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து ட்ரோன் கெமரா இயக்கக்கூடியவர்களை துரிதமாக பதிவு செய்துகொள்ளுமாறு அதிகார சபை 
அறிவுறுத்தியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - இலங்கை அரசு மருத்துவப் பொருட்களை துரித கதியில் விநியோகம் செய்ய திட்டம்

இணையத்தள சேவையை இலங்கை மாணவர்களுக்கு ஆரம்பித்தது பரீட்சைகள் திணைக்களம்

பரீட்சைகள் திணைக்களத்தினால் புதிய இணையத்தள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பரீட்சை பெறுபேற்றை அங்கீகரித்து உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்கும் நோக்கில் இந்த இணையத்தள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இணையத்தளத்தில் பார்வையிடுவதற்கு மேலதிகமாக இந்த சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் 
ஆலோசனைக்கமைய, இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் இந்த உறுதிப்படுத்தும் சேவை முன்னெடுக்கப்படுவதாக 
கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தச் சேவையினூடாக 2001ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை நடத்தப்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம்
 நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்கீழ் வௌிநாட்டு பல்கலைக்கழகங்கள், வௌிநாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பரீட்சை விண்ணப்பதாரிகள் உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு அங்கீகரித்து உறுதி
செய்யப்பட்ட ஆவணங்கள் வழங்கப்படவுள்ளன.பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக விண்ணப்பதாரர்கள் தமது பெறுபேற்றை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - இணையத்தள சேவையை இலங்கை மாணவர்களுக்கு ஆரம்பித்தது பரீட்சைகள் திணைக்களம்