பத்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு யாழில்

புதன், 9 ஜனவரி, 2019

யாழ். சாவகச்சேரி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.இக்கொள்ளைச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
.குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தின் மேற்கூரையை பிரித்து சி.சி.ரீ.வி கமரா இணைப்புக்களை துண்டித்து விட்டு, 
உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் தொலைப்பேசி மீள்நிரப்பு அட்டைகளையும் கொள்ளையிட்டு
 சென்றுள்ளனர்.இதன்போது சுமார் ஏழு இலட்சம் ரூபா பணம் மற்றும் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தொலைப்பேசி மீள்நிரப்பு 
அட்டைகள் என சுமார் 10 இலட்சம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இக்கொள்ளை
 சம்பவம் இடம்பெற்ற போது, கடையின் பின்புறம் வர்த்தக நிலையத்தின் பணியாளர்கள் உறக்கத்தில் இருந்துள்ளனர்.இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரோடு இணைந்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







READ MORE - பத்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு யாழில்

யாழ். மாணவன் உயர்தர பரீட்சையில் சாதனைப் படைத்துள்ளார்

திங்கள், 31 டிசம்பர், 2018

தனது இரு கண்களை இழந்தபோதும், கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றி மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்று யாழ். மாணவன் சாதனைப் படைத்துள்ளார்.
யாழ். யூனியன் கல்லூரி மாணவன் தவராசா அன்ரூ ஜெக்சன், கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் மூன்றாவது இடத்தைப்பெற்று இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார்.
தனது 15ஆவது வயதில் கிரிக்கெட் விளையாடும்போது, பந்து நெற்றியில் பட்டதால் இரு கண்களின் பார்வையையும் 
அவர் இழந்துள்ளார்.
சிகிச்சைகள் காரணமகா இரண்டு வருடங்கள் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டாலும் அவரது அயராத முயற்சியின் காரணமாக சிறந்த பெறுபேறினைப்பெற்று இன்று அவர் தனது குடும்பத்திற்கும் பாடசாலைக்கும் பெறுமை சேர்த்துள்ளார்.
அவர் கல்வி பொதுத்தராதர சாதாரண தரத்திலும் சிறந்த பெறுபேறினைப்பெற்று ஜனாதிபதியிடம் இருந்து பரிசில்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
யாழ். சுன்னாகத்தில் அமைந்துள்ள விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகத்தில் தங்கியிருந்து, யாழ். யூனியன் கல்லூரியில் கல்வி பயின்று இவர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
இவரது தந்தை கடற்தொழிலாளியாகவும், தாய் வீட்டுப்பணிப்பெண்ணாகவும் உள்ளதுடன் நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மூன்றாமவராக
 இவர் உள்ளார்.
இது குறித்து ஜெக்சன் குறிப்பிடுகையில்,

எனது ஆசை சட்டத்தரணியாவதே, அதற்கு பாரிய முயற்சியும் பொருளாதார வசதியும் தேவை.
முயற்சி என்னிடம் உள்ளது, போதிய பொருளாதார வசதி என்னிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - யாழ். மாணவன் உயர்தர பரீட்சையில் சாதனைப் படைத்துள்ளார்

யாழ். மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கத்தின் சோதனை!

வெள்ளி, 28 டிசம்பர், 2018

யாழ். மாநகர சபை எல்லைக்குள் 672 இடங்கள் டெங்கு பெருகுவதற்கு ஏதுவான சூழலாக இனம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், 25 இடங்களில் நுளம்பு குடம்பிகள் காணப்பட்டதால், 17 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று 947 இடங்களில் சோதனை நடவடிக்கைகள் 
முன்னெடுக்கப்பட்டன.
யாழ்.பிரேதச செயலகம், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு, சுகாதார திணைக்களம், பொலிஸார் , பிராந்திய சுகாதர வைத்திய அதிகாரிகள் , ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த சோதனை நடவடிக்கையில்
 ஈடுபட்டனர்.
அதன் போது 947 இடங்களில் சோதனையிட்டதில், 672 இடங்களில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழல்கள் காணப்பட்டுள்ளன.
அதனையடுத்து அத்தகைய இடங்களை உனடியாக துப்பரவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதேவேளை குறித்த விசேட சோதனை நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களிலும் முன்னெடுக்கப்படும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>



READ MORE - யாழ். மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கத்தின் சோதனை!

அச்சுவேலியில் புத்தக கடையொன்று தீப்பிடித்ததில் எரிந்து நாசம்

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் புத்தக கடையொன்று திடீரென தீப்பிடித்ததில், அங்கிருந்த பல இலட்சம் பெறுமதியான புத்தகங்களும், பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடமபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய மேலும் வருவதாவது,
இந்தப் புத்தகக் கடையை நேற்று மாலை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில் இன்று அதிகாலை இப் புத்தகக் கடை எரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியடையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள்
 கொண்டுவந்துள்ளனர்.
ஆனாலும் அங்கிருந்த பொருட்களும் அந்தக் கடையும் முற்றுமுழுதாக எரிந்துள்ளது. இதில் பல இலட்சம் ரூபா
 பெறுமதியான பொருட்கள் நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் எவையும் இதுவரையில் கண்டறியப்படவில்லையெனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >

READ MORE - அச்சுவேலியில் புத்தக கடையொன்று தீப்பிடித்ததில் எரிந்து நாசம்

முதல் முறையாக யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் Browns ice போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பண்டத்தரப்பு பகுதியை சேர்ந்த ஒருவர் 85g Browns ice எனப்படும் அதி சக்தி வாய்ந்த போதைப்பொருளுடன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால்
 கைது செய்யப்பட்டுள்ளர்.
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக இந்த தைப்பொருள் கைது செய்த சம்பவம் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
பண்டத்தரிப்பு இலங்கை வங்கிக்கு அருகாமையில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>


READ MORE - முதல் முறையாக யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

பெண்மணியின் தங்கச் சங்கிலி யாழ் வர்த்தக நிலையத்தில் அறுப்பு

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் வர்த்தக நிலையத்தில் நின்ற பெண்மணியின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
 பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் தொலைபேசி மீள் நிரப்பு அட்டை கொள்வனவு செய்வது போல் பாசாங்கு செய்த இளைஞர்கள் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச்
 சென்றுள்ளனர்.
 யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள நீர்த்தாங்கி அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உள்ளே வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் நின்றிருந்த சமயம் வர்த்தக நிலையம் முன்பாக உரிமையாளரின் தாயார் கதிரையில் அமர்த்திருந்தார். 
இதனை அவதானித்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தொலைபேசி மீள் நிரப்பு அட்டை ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். குறித்த சமயம் இரண்டாம் நபர் மோட்டார் சைக்கிள் தயார் நிலையில் வைத்திருந்தார்.
 இந்த நிலையில் மீள் நிரப்பு அட்டையை கொள்வனவு செய்தவர் வர்த்தக நிலையத்தின் முன்னாள் அமர்ந்திருந்த பெண்மணி அணிந்திருந்த 3 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு மிகவேகமாக ஓடிச் சென்று மோட்டார் சைக்கிளில் ஏறிய நிலையில் வேகமாகத்
 தப்பிச் சென்றுள்ளனர்.
 வர்த்தக நிலையத்தின் உள்ளே நின்ற உரிமையாளர் அவர்களை தடுக்க முயன்றும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.
  சம்பவமானது நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.



READ MORE - பெண்மணியின் தங்கச் சங்கிலி யாழ் வர்த்தக நிலையத்தில் அறுப்பு

யாழ் உரும்பிராய் பகுதியில் உயரமான கிறிஸ்மஸ் மரம்

செவ்வாய், 25 டிசம்பர், 2018

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள புனிதமிக்கல் ஆலய பங்கு இளைஞர்களின் அயராத முயற்சியினால் 68 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளமை அனைவரது 
கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தென்னம் ஈர்க்குகள், சம்பு புற்கள், கயிறு, எஸ்லோன் பைப் மற்றும் 160 வண்ண மின் விளக்குகள் கொண்டு இந்த கிறிஸ்மஸ் மரம் 
அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த கிறிஸ்மஸ் மரத்தின் கீழ் யேசுநாதரின் பிறப்புக்களை பிரதிபலிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள், அலங்கார பொருட்கள், சாண்டோபாப்பா, சிறுவர்களை மகிழ்விக்கும் வகையிலான பல்வேறு வினோத வடிவங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் உரும்பிராய் பகுதியில் உயரமான கிறிஸ்மஸ் மரம்