முக்கிய அறிவித்தல் அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு

சனி, 6 ஜூலை, 2024

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலியா
 அறிவித்துள்ளது.
அதன்படி, 710 அவுஸ்திரேலிய டொலராக இருந்த விசா கட்டணம் தற்போது 1,600 டொலராக அதிகரித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் தலைமையிலான அரசாங்கம், மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டண உயர்வை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் 
தெரிவிக்கின்றன.
இந்த விசா கட்டண உயர்வு, சர்வதேச கல்வி முறையின் தரத்தை மேம்படுத்தவும், இடம்பெயர்வை குறைக்கவும், சிறப்பாகவும் மாற்ற அவுஸ்திரேலியாவிற்கு உதவும் என, அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் கிளேர் ஓநீல் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த முடிவு சர்வதேச மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நம்பியுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பொருளாதாரம் இரண்டுக்கும் உகந்ததல்ல என, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகக் குழுவின் தலைவர் லூக் ஷீஹி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானிய நாடுகளை விட அவுஸ்திரேலியாவின் மாணவர் விசா கட்டணம் உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் வெளியான தரவுகளின் படி, கடந்தாண்டு செப்டம்பர் வரை அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் 60 வீதத்தால் உயர்ந்து 5 இலட்சத்து 48 ஆயிரத்து 800 பேரை
 எட்டியுள்ளதாகத் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றமை
என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - முக்கிய அறிவித்தல் அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு

இலங்கைக்கு நெதர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மோப்ப நாய்கள்

வெள்ளி, 5 ஜூலை, 2024

பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவுக்கு நெதர்லாந்திலிருந்து 35 நாய்கள் இன்று
 (05-07-24) வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த நாய்கள் நெதர்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதனையடுத்து இந்த நாய்கள் கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிறுவனத்திற்கு கொண்டு 
செல்லப்பட்டுள்ளன.
நாய்களின் மொத்த மதிப்பு 50 கோடியே 80 இலட்சம் ரூபா ஆகும். இந்த நாய்களில் 21 பெண் நாய்களும் 14 ஆண் நாய்களும் உள்ளன.
இந்த நாய்களை ஏற்றுக்கொள்வதற்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர்நிஹால் தல்துவ கட்டுநாயக்க 
விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிறுவனத்திற்கு 
வருகை தந்தார்.
 இந்த நாய்கள் விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கால்நடை வைத்திய 
அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், நாய்களின் பயிற்சியாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கைக்கு நெதர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மோப்ப நாய்கள்

நாட்டில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உடனடியாக குறைப்பு

வியாழன், 4 ஜூலை, 2024

நாட்டில்  உடன் அமுலாகும் வகையில், சில வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சத்தொச நிறுவனம் 
குறைத்துள்ளது. 
 இதன்படி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மொத்தக் கொள்வனவின் போது கிலோ ஒன்றுக்கு 15 ரூபாய் குறைக்கப்பட்டு, 215 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 சிவப்பு பருப்பு மொத்தக் கொள்வனவின் போது, 
கிலோ ஒன்று 14 ரூபாவால் குறைக்கப்பட்டு 282 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 அதேநேரம் வெள்ளை சீனி மொத்தக் கொள்வனவின் போது கிலோ ஒன்று 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 269 ரூபாவாக நிலவுகிறது.
. என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உடனடியாக குறைப்பு

நாட்டில் சத்திர சிகிச்சை நிபுணர்களுக்கு பற்றாக்குறை நோயாளர்கள் ஆபத்தில்

புதன், 3 ஜூலை, 2024

இதய சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் காத்திருப்பு காலம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவ 
தெரிவித்துள்ளார்.
 நாட்டில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
 ஆனால், நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான இருதய சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் இருப்பதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்க 
வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகளின் உயிருக்கு 
ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 சில வைத்தியசாலைகளில் காத்திருப்போர் பட்டியல் 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்குமெனவும், இது தொடர்பில் அவதானம் செலுத்தி
 அரச மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து சத்திர சிகிச்சைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியது அவசியம் எனவும் 
அவர் தெரிவித்தார்.  என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சத்திர சிகிச்சை நிபுணர்களுக்கு பற்றாக்குறை நோயாளர்கள் ஆபத்தில்

நாட்டில் கண்டி நீதிமன்றத்தை கதி கலங்கச் செய்தவர் கைது

செவ்வாய், 2 ஜூலை, 2024

நாட்டில் கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்த வட்டவளை 
பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் ஜூலை 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் பொலிஸ் அவசர பிரிவுக்கு (119) தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து பொலிஸார் உடனடியாக 
நடவடிக்கையில் இறங்கின​ர்.
இராணுவ வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்டனர். ஸ்தலத்துக்கு விரைந்த வெடிகுண்டு 
செயலிழப்பு பிரிவு நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப்படவில்லை.  என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கண்டி நீதிமன்றத்தை கதி கலங்கச் செய்தவர் கைது

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அம்பது இலட்சம் ரூபாய மோசடிசெய்த பெண் கைது.

திங்கள், 1 ஜூலை, 2024

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி , 50 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞனிடம் இருந்து 50 இலட்சம் ரூபாய் பணத்தினை மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
நீண்ட நாட்களாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காத நிலையில், இளைஞன் தனது பணத்தினை திருப்பி கேட்ட வேளை, அதனை கொடுக்க மறுத்ததால், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 
பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணை கைது செய்து , விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அம்பது இலட்சம் ரூபாய மோசடிசெய்த பெண் கைது.