உழவு இயந்திரம் செலுத்தி கிளிநொச்சியில் கொண்டாடிய பெண்கள்

வியாழன், 28 மார்ச், 2024

பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திர பயணத்துடன் பெண்கள் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. 
.28-03-2024.கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைந்து மகளீர் தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
 குறித்த நிகழ்வு.28-03-2024 இன்று காலை 9.30 மணியளவில் குமரபுரம் பகுதியில் இடம்பெற்றது. உழவு இயந்திர சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளவுள்ள 8 பெண்கள் உழவு இயந்திரத்தை செலுத்தி நிகழ்வில்
 பெறுமதி சேர்த்தனர்.
குறித்த பெண்களிற்கு ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட விருந்தினர்கள் கைலாகு கொடுத்து உட்சாகப்படுத்தினர். தொடர்ந்து குறித்த பெண்கள் உழவு இயந்திரத்தை செலுத்தி 
விழா மண்டபம் வரை சென்றதை தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் ஆரம்பமானது.
நிகழ்வில், ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றமை
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - உழவு இயந்திரம் செலுத்தி கிளிநொச்சியில் கொண்டாடிய பெண்கள்

நாட்டில் அரிசி விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

புதன், 27 மார்ச், 2024

நாட்டில்  ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி.27-03-2024. இன்று  முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03-03-2024. ஆம் திகதி வரை ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
 அத்துடன் பெரிய வெங்காயத்தின் இறக்குமதிக்கான வரி 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை கிலோ கிராம் ஒன்றுக்கு 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் அரிசி விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணம் குறைக்கப்படுமாம்

செவ்வாய், 26 மார்ச், 2024

நாட்டில் விவசாயத் தேவைகளுக்காக மின்சாரத்தைப் பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என 
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
 விவசாய நடவடிக்கைகளில் பெரும் முயற்சியுடன் அனைத்துப் பணிகளையும் முன்னெடுப்பதற்கு வடமாகாண மக்களின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
 அபிவிருத்தி நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது 
அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தின் பெரும்பகுதியை 
வடக்கு, கிழக்கு
 மாகாண மக்களுக்கே ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக அமைச்சர் தெரிவித்தார். 
 வடமாகாணத்தில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அவர்கள் விவசாயத்தை கைவிடவில்லை. எனவே வடமாகாண 
விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்தும் போது ஓரளவு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை 
விடுத்துள்ளனர். 
 அதற்கமைவாக விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரக் கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணம் குறைக்கப்படுமாம்

இலங்கையில் வெங்காய ஏற்றுமதி தடை:யால் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் அபாயம்

திங்கள், 25 மார்ச், 2024

இலங்கையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை இந்தியா காலவரையின்றி நீடிப்பதால், நாட்டில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 டிசம்பரில் இந்தியா விதித்த தடை வரும் 31ம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த நாட்டில் வெங்காயத்தின் வருடாந்த நுகர்வு சுமார் 250,000 மெட்ரிக் டன்கள் மற்றும் அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் இருந்து இறக்குமதி 
செய்யப்படுகின்றன.
 இந்தியா விதித்துள்ள இந்த தடையால் பல நாடுகளில் வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ள நிலையில், ஏற்கனவே இலங்கை சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 600 முதல் 700 ரூபா வரையில் விற்பனை 
செய்யப்படுகிறது.
 எவ்வாறாயினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 375 ரூபா தொடக்கம் 400 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் நுகர்வோருக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் வெங்காய ஏற்றுமதி தடை:யால் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் அபாயம்

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைக்க தீர்மானம்

ஞாயிறு, 24 மார்ச், 2024

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால்மா பொதி ஒன்றின் விலையை 150 ரூபாவினால் குறைக்க
 தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 அத்துடன் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைக்க தீர்மானம்

தைவானின் டிக்டோக் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறியுள்ளார்

சனி, 23 மார்ச், 2024

தைவானின் டிஜிட்டல் விவகார அமைச்சர் ஆட்ரி டாங், சீனாவை தளமாக கொண்டு இயங்கும் TikTok ஐ தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக விவரித்துள்ளார்.
வெளிநாட்டு எதிரிகளுடனான தளத்தின் தொடர்பு அமெரிக்காவின் முன்னோக்குடன் ஒத்துப்போகிறது என்று டாங் 
வலியுறுத்தினார்.
தைவானின் தரநிலைகளின்படி, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வெளிநாட்டு எதிரிகளால் கட்டுப்படுத்தக்கூடிய எந்தவொரு
 தயாரிப்பும் தேசிய தகவல் மற்றும் தகவல் தொடர்பு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் மேலும் 
கூறியுள்ளார்.
 டிக்டோக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸை குறிவைத்து அமெரிக்க பிரதிநிதிகள் சபை சமீபத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளமை
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - தைவானின் டிக்டோக் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறியுள்ளார்

யாழில் கனடா அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது

வெள்ளி, 22 மார்ச், 2024


கனடாவிற்கு அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
மூன்று மாதங்களாக இளைஞனின் பயண ஏற்பாடுகள் நடைபெறாததால், இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் 
முறைப்பாடு செய்தார்.
 முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து யாழ். நீதவான் நீதிமன்றில்
 முற்படுத்தினர்.
நீதிமன்றில் தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள இளைஞனிடம் கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்ச ரூபாய் பணத்தினை இளைஞனிடம் குறித்த பெண் மீள் அளித்தார். அதனை 
அடுத்து பெண்ணை 06 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்தது..என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழில் கனடா அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது