சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுதல் உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா

வெள்ளி, 17 மார்ச், 2023

நாகரீகம் வளர வளர புதுப்புது மின்னணு சாதங்கள் வந்துள்ளன. அதனால் உணவை சமைத்து உண்ணுதல் குறைவடைந்து வருகிறது. மொத்தமாக உணவை சமைத்து மீஞ்சுவதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டு விட்டு வேலைக்குச் செல்கின்றனர். அவ்வாறு 
செய்தல் ஆகாது. 
அப்படிச் செய்வதனால் உணவு விஷமாகிவிடுகிறது. இன்றைய ஆரோக்கியம் பதிவில் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத உணவுகள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
சோறு
நாம் உண்ணும் உணவுகளில் மிகவும் முக்கியமான உணவு தான் சாதம். நாம் வடித்த சோற்றை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. சோற்றை சூடுபடுத்துவதால் அதில் நச்சுத்தன்மை அதிகரித்து அது விஷமாக மாறுகிறது. இதனால் குடல் சம்மந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படுகிறது. 
முட்டை:
முட்டையில் அதிகளவு புரோட்டின் சத்து நிறைந்துள்ளது. இருந்தாலும் முட்டையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்துவதால் அது விஷமாக மாறுகிறது. இதனால் செரிமான கோளாறுகள் மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உருளைக்கிழங்கு:
நாம் சமைத்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்துவதால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விடுகின்றன. இதனால் உருளைக்கிழங்கில் நச்சுத்தன்மை அதிகரித்து விடுகிறது. இதன் காரணமாக வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நல பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
கீரை: 
கீரையில் இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. நாம் கீரையை சூடுபடுத்தும் போது நைட்ரேட்ஸ் சத்துக்கள் நைட்ரைட்டாக மாறுகின்றன. இதனால் குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனால் கீரையை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கோழியிறைச்சி
பொதுவாக கோழி இறைச்சி அதிகம் சாப்பிட கூடாது என்று கூறுவார்கள். கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் மற்றும் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. இதனால் செரிமானம் ஆக அதிக நேரம் தேவைப்படும். அதேபோல சிக்கனை சூடுபடுத்தி சாப்பிடுவதால் அதில் உள்ள புரதச்சத்து அதிகரித்து விஷமாக மாறுகிறது. அதனால் சிக்கனை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பீட்ரூட்:
பீட்ரூட்டையும் சூடுபடுத்தி சாப்பிட கூடாது. கீரை வகைகளைப் போலவே பீட்ரூட்டிலும் அதிகளவு நைட்ரேட்கள் உள்ளன. அதனால் பீட்ரூட்டை சூடுபடுத்தும் போது அது விஷமாக மாறுகிறது.
எனவே நாம் முடிந்தளவு உணவை சமைத்து உண்ணுதலே சிறந்தது. எவ்வளவு நெருக்கடியானலும் அதனை தகுந்த விதத்தில் கையாண்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போமாக.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக