கிருலப்பனையில் புகையிரதத்தை நிறுத்த மறந்த சாரதி இறுதியில் நடந்த சம்பவம்

செவ்வாய், 31 ஜனவரி, 2023

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து கொஸ்கம நோக்கி சென்ற புகையிரதத்தினை சாரதி கிருலப்பனை புகையிரத நிலையத்தில் நிறுத்த மறந்தமையினால் பயணிகள் மத்தியில் 
குழப்பநிலை
ஏற்பட்டுள்ளது.குறித்த புகையிரதம் 30-01-2023.அன்று மாலை 04.00 மணியளவில் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில் கிருலப்பனை புகையிரத நிலையத்தில் மாலை 04.26 மணியளவில் நிறுத்தப்படவிருந்தது.
இதன்போது தமது கடமைகளை முடித்துக்கொண்டு கிருலப்பனை நிலையத்தில் இறங்கி வீடுகளுக்குச் செல்வதற்காக அதிகளவான பயணிகள் காத்திருந்த நிலையில் சாரதி மறதியாக புகையிரதத்தினை நிறுத்தாது 
சென்றுள்ளார்.
சாரதியின் கவனக்குறைவினால் இறங்கும் இடத்தினை தவறவிட்ட பயணிகள் நுகேகொட புகையிரத நிலையத்தில் நிறுத்திய உடன் இறங்கி அங்கிருந்து நடந்து சென்றுள்ளனர்.இதேவேளை, சாரதியின் பொறுப்பற்ற செயலினால் பாதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன்,சற்று நேரம் அமைதியின்மையும் நிலவியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கிருலப்பனையில் புகையிரதத்தை நிறுத்த மறந்த சாரதி இறுதியில் நடந்த சம்பவம்

நாட்டில் . இனிமேல் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

திங்கள், 30 ஜனவரி, 2023

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 698,603 ரூபாவாக 
பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக தங்கத்தின் விலையில் சிறு வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 197,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,550 ரூபாவாக 
இன்றைய தினம் பதிவாகியுள்ளது.எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் . இனிமேல் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவது குறித்து அமைச்சர் அறிவிப்பு

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

நாட்டில்  புதிய மின் கட்டண திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கினால், அன்றைய தினம் முதல் இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
29-01-2023.இன்று  இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.ஜனவரி முதலாம்
 திகதி முதல் 
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான திட்டத்தை நாம் சமர்ப்பித்திருந்தோம். பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை. இன்றும் கூறுகின்றோம். இன்று அல்லது நாளை அனுமதி வழங்கப்பட்டால், மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்கும் திட்டத்தை செயற்படுத்த எமக்கு முடியும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவது குறித்து அமைச்சர் அறிவிப்பு

நாட்டில் மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிராகரிப்பு

சனி, 28 ஜனவரி, 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கை முகாமைத்துவத் திட்டமானது உயர்தர (A/L) பரீட்சையை மீறும் மற்றும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் உரிமைகளை மீறுவதற்கு CEBயின் கோரிக்கை முகாமைத்துவ வேலைத்திட்டம் நேரடியாக உதவுவதாக PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
CEB இன் அறிவிப்புக்கு பின்னர் இந்த பதில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இதனையடுத்து, உயர்தரப் பரீட்சையின் போது கோரிக்கை முகாமைத்துவ வேலைத்திட்டத்தை தொடரவுள்ளதாக CEB 27-01-2023.
அன்று அறிவித்தது.
நேற்றைய தினம் இது தொடர்பில் பொதுநலவாய சபைக்கு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாட்டில் மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிராகரிப்பு

நாட்டில் மின்துண்டிக்க அனுமதியில்லை - பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவிப்பு

வெள்ளி, 27 ஜனவரி, 2023

நாட்டில்  2022 உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு எழுத்துமூலம் 
அறிவித்துள்ளது.
இன்று (27) மின்தடையை அமுல்படுத்துவதற்கு அனுமதிகோரி, இலங்கை மின்சார சபை பொது முகாமையாளரால் நேற்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கடிமொன்று அனுப்பப்பட்டதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தமது கடிதத்தில் 
தெரிவித்துள்ளார்.
மின்சாரம் பரிமாற்றம் மற்றும் மொத்த விநியோக உரிமம் எண் 30 (10) இன் நிபந்தனையின் கீழ், 2022 பெப்ரவரி 18 முதல் 2023 ஜனவரி 25 ஆம் திகதி வரை மின்சாரத்தை துண்டிக்க அனுமதிக்க விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளதாக ரத்நாயக்க
 தெரிவித்தார்.
எவ்வாறாயினும், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 331,709 பரீட்சார்த்திகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நேற்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின்சாரத் தடையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரிக்காது என்று 
அவர் கூறினார்.
இதன்படி, பெப்ரவரி 17 ஆம் திகதி வரை தடையற்ற மின்சாரத்தை வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவுறுத்துவதாகவும், அதுவரை திட்டமிடப்பட்ட மின்சாரத் தடைகளுக்கான அனுமதிக் கோரிக்கைகளை சமர்ப்பிப்பதைத் தவிர்க்குமாறும் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும், மேற்கூறிய காலத்தில் மின் தடைகள் விதிக்கப்பட்டால், மின்சார பரிமாற்றம் மற்றும் மொத்த விநியோக உரிமம் எண் EL/T/09-002 இன் நிபந்தனை 30(10)ஐ மீறுவதற்கு மின் விநியோக உரிமதாரர் சட்டப்பூர்வமாக பொறுப்பேற்க வேண்டும் அவர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மின்துண்டிக்க அனுமதியில்லை - பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவிப்பு

நாட்டில் பெற்றோரினை இழந்த மாணவி.. புலமைப்பரிசில் சிறப்பு சித்தி பெற்று சாதனை.

வியாழன், 26 ஜனவரி, 2023

கடந்த 2021 அம ஆண்டு பசறை விபத்தில் பலியான தம்பதியினரின் மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவியான நோவா யூஜீனியா
, புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப்பெற்று, சித்தியடைந்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில், பசறை கல்வி வலயத்தில் இம்மாணவியே அதிக புள்ளிகளைப்பெற்றுள்ளார். பதுளை , பசறை 13 ஆம் கட்டை பகுதியில் 2021 மார்ச் 20 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் பலியாகினர்.
இவ்விபத்தில்
அந்தோனி நோவா (வயது – 32) என்பவரும், அவரது மனைவியான பெனடிகக் மெடோனோ (வயது 31) உயிரிழந்தனர். அவர்களின் மகளே யூஜீனியா.பெற்றோர் உயிரிழக்கும்போது இவர் தரம் மூன்றில் கல்வி பயின்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை
 சேர்த்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






READ MORE - நாட்டில் பெற்றோரினை இழந்த மாணவி.. புலமைப்பரிசில் சிறப்பு சித்தி பெற்று சாதனை.

இலங்கையில் உயர்தரப் பரீட்சை முடியும்வரை மின்வெட்டு இல்லை

புதன், 25 ஜனவரி, 2023

இலங்கையில் இன்று (25.01.2023) முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை  க.பொ.த உயர்தரப் பரீட்சை முடியும் மின்சாரத்தை துண்டிப்பதில்லை என இணக்கம்
 காணப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே அது
 இடம்பெற்றுள்ளது.
உயர்தரப் பரீட்சை காலத்தில் எவ்வித வெட்டுமின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக இன்று (25ஆம் திகதி) காலை மின்சார அமைச்சு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபை அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்திருந்தது.
இதேவேளை, இன்று (25) பிற்பகல் 4 மணியளவில், இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினரை மீண்டும் அழைத்து கலந்துரையாடுவதற்கு தீர்மானித்ததாகவும், அதற்கமைவாக உயர்தரப் பரீட்சை முடியும் வரை வெட்டுக்களை மேற்கொள்ள வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் உயர்தரப் பரீட்சை முடியும்வரை மின்வெட்டு இல்லை

மிக முக்கிய அறிவிப்பு கொழும்பு கண்டி வீதியினை பயன்படுத்தும் சாரதிக்கு

செவ்வாய், 24 ஜனவரி, 2023

கொழும்பு- கண்டி பிரதான வீதியில் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு இடையிலான வாகன போக்குவரத்து இன்று முதல் ஒரு வார காலத்திற்கு ஒரு பாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இன்று காலை முதல் பெப்ரவரி முதலாம்
திகதி வரை குறித்த பகுதியில் காபட் இடப்படவுள்ள பணிகள் காரணத்தினால் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதன்படி கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.அதற்கமைய,
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாவனெல்ல – ரம்புக்கனை வீதியின் குருணாகல் வரை பயணித்து, மீரிகம ஊடாக பஸ்யால சந்திக்கு பிரவேசித்து அல்லது கேகாலை
 வரை பயணித்து 
அலவ்வ, மீரிகம, பஸ்யால ஊடாக பஸ்யால சந்திக்கு பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் போது, பஸ்யால சந்தியிலிருந்து மீரிகம ஊடாக குருணாகல் வழியாக கண்டி நோய்யி பயணிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - மிக முக்கிய அறிவிப்பு கொழும்பு கண்டி வீதியினை பயன்படுத்தும் சாரதிக்கு

நாட்டில் மீண்டும் திடீரென அதிகரிக்கபடவுள்ள எரிவாயுவின் விலை

திங்கள், 23 ஜனவரி, 2023

எரிவாயு சர்வதேச சந்தையின் தற்போதைய விலையுடன் ஒப்பிடும் போது 12.5 கிலோ கிராம் நிறைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை பெப்ரவரி மாதத்திற்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உள்ளக தகவல்கள் 
தெரிவிக்கின்றன
இதன்படி 12.5 கிலோகிராம் நிறைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இறுதியாக, கடந்த ஜனவரி 4ஆம் திகதி சமையல் எரிவாயு விலை 
குறைக்கப்பட்டது
தற்போது சந்தையில் 12.5 கிலோ கிராம் நிறைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு 4,409 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.அத்துடன், 12.5 கிலோ கிராம் நிறைக்கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு 5,300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மீண்டும் திடீரென அதிகரிக்கபடவுள்ள எரிவாயுவின் விலை

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு.நடைமுறையில் திடீர் மாற்றங்கள்

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.இதற்கமைய நாளைய தினம் (23.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள்
மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட 
பகுதிகளில்
இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணிநேரமும் இரவில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு.நடைமுறையில் திடீர் மாற்றங்கள்

இலங்கையில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின் மின் வெட்டு இல்லை

சனி, 21 ஜனவரி, 2023

இலங்கையில் உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மின்சார சபையின் தேவைகளையும் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இதேவேளை, இன்றும் (21) நாளையும் (22) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


READ MORE - இலங்கையில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின் மின் வெட்டு இல்லை

நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பெரும்பான்மை ஒப்புதல்

வெள்ளி, 20 ஜனவரி, 2023

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டுத் தீர்மானம் 
மாற்றப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை உட்பட பல நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பணிப்பாளர் சபை மற்றும் அதிகாரிகள் தேசிய சபையில் மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக 
அழைக்கப்பட்டனர்.
அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இலங்கை மின்சார சபையினால் கொண்டு வரப்பட்டுள்ள மின் கட்டணத்தை உயர்த்தும் பிரேரணை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விரைவில் தீர்மானம் ஒன்றை வழங்க வேண்டுமென மின்சார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலுக்கு முன்னர் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்ததன் பின்னர் மின்சார 
கட்டண அதிகரிப்பு தொடர்பான கூட்டு தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக.20-01-2023. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் 
சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். .
ஆணைக்குழுவின் சுயாதீனத்தை பாதுகாக்க சட்டத்தின் ஆதரவை நாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மின்சார சபையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் கலந்தாலோசித்து மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது 
தெரிவித்தார்.
எனவே, அந்த கலந்துரையாடல்களின் பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி இந்த கட்சிகள் அனைத்தையும் மீண்டும் தேசிய பேரவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பெரும்பான்மை ஒப்புதல்

நாட்டில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு

வியாழன், 19 ஜனவரி, 2023

நாட்டில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் தான் செல்வாக்கு செலுத்த போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி 
இதனை கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் நான் செல்வாக்கு செலுத்த போவதில்லை, அது முஸ்லிம் சமூகத்தின் விஷயம்.ஆனால் முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலையும் 
மீளவும் செய்ய 
வேண்டாம். முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்திற்கு எதிராக சில முஸ்லிம் பிள்ளைகள் ஆர்ப்பாட்டம் செய்வதை நான் கண்டுள்ளேன்.
அது அவ்வளவு நல்லதல்ல. அதனை அங்கீகரிக்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.அது உண்மையில் பிள்ளைகளை ப
ராமரிக்கும் சட்டத்தை மீறுவதாகும்வயது வந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது வேறு விடயம், ஆனால் பிள்ளைகள் ஆர்ப்பாட்டம் செய்வது இருக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி கூறினார்.
பிள்ளைகள் இப்படி ஆர்ப்பாட்டம் செய்யுமிடத்து முஸ்லிம்கள் குறித்த ஒரு எதிரான புரிதலை ஏனைய சமூகத்திற்கு எத்திவைப்பது போன்றதாகும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில், அதனால் தான் நான் கூறுகிறேன். நாம் அடித்துக் கொண்டது போதும் இன நல்லுறவுடன் இணையும் காலம் இது எனவும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு

நாட்டில்12 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு. விலைப்பட்டியல் உள்ளே.

புதன், 18 ஜனவரி, 2023

நாட்டில் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விலை குறைப்பு லங்கா சதொச ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கமைய, 1kg பெரிய வெங்காயம் 5 ரூபா குறைக்கப்பட்டு தற்போதைய விலை180 ரூபா.1kg வெள்ளை சீனி 2 ரூபா குறைக்கப்பட்டு தற்போதைய விலை 216 ரூபா.1kg சிவப்பு பச்சை அரிசி 8 ரூபா குறைக்கப்பட்டு தற்போதைய விலை187 ரூபா

1kg வெள்ளை பச்சை அரிசி (உள்நாடு) 10 ரூபா குறைக்கப்பட்டு தற்போதைய விலை 179 ரூபா.1kg சம்பா(உள்நாடு)10 ரூபா குறைக்கப்பட்டு தற்போதைய விலை 210 ரூபா.1kg வெள்ளை நாடு அரிசி (உள்நாடு)9 ரூபா குறைக்கப்பட்டு தற்போதைய விலை 189 ரூபா

1kg வெள்ளை நாடு அரிசி (இறக்குமதி)8 ரூபா குறைக்கப்பட்டு தற்போதைய விலை 180 ரூபா.1kg கீரி சம்பா 6 ரூபா குறைக்கப்பட்டு தற்போதைய விலை 239 ரூபா.1kg சிவப்பு பருப்பு 7 ரூபா குறைக்கப்பட்டு தற்போதைய விலை 370 ரூபா

1kg காய்ந்த மிளகாய் 50 ரூபா குறைக்கப்பட்டு தற்போதைய விலை 1730.1kg ரூபா கோதுமை மா 5 ரூபா குறைக்கப்பட்டு தற்போதைய விலை 235 ரூபா.1kg நெத்தலி 20 ரூபா குறைக்கப்பட்டு தற்போதைய 
விலை 1100 ரூபா

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில்12 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு. விலைப்பட்டியல் உள்ளே.

நாட்டில் எரிபொருள் நிலையங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்:

செவ்வாய், 17 ஜனவரி, 2023

 நாட்டில் எச்சரிக்கை விடுத்த பெற்றோலிய கூட்டுத்தாபனம் QR தொழில்நுட்ப முறைமைக்கமைய சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை விற்பனை செய்யத் தவறியுள்ளதாகவும் அதனை
 பின்பற்றாத எரிபொருள் நிலையங்களின்  உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.
குறியீட்டு முறைமையைப் பின்பற்றாமை கண்டுபிடிக்கப்பட்டால் எரிபொருள் விநியோகம் மற்றும் அத்தகைய நிரப்பு நிலையங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
QR தொழில்நுட்ப முறைமைக்கமைய சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை விற்பனை செய்யத் தவறியுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் எரிபொருள் நிலையங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்:

நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.இரண்டு மாதத்திற்கு இலவச அரிசி.

திங்கள், 16 ஜனவரி, 2023

இலங்கை வாழ் மக்களுக்கு  சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 02 மாத காலத்திற்கு வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் 
வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதற்காக 40,000 மெட்ரிக் தொன் அரிசி தேவைப்பதோடு, அதற்கு அரசாங்கம் 61,600 மெட்ரிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும்.சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் ஆதரவுடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள்
 ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச
 செயலாளர்களின்
 கீழ் தற்பொழுது காணப்படும் முறையை பயன்படுத்தி அடையாளங் காணப்பட்ட சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதோடு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக இது தொடர்பில் மாவட்ட செயலாளர்களின் ஒருங்கிணைப்புடன் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.
நெல் கொள்வனவுக்கு 6,200 மில்லியன் ரூபா, நெல் உலர்த்துவதற்கு 290 மில்லியன் ரூபா, கதிரடிக்கு வாடகைக்கு 590 மில்லியன் ரூபா, பொதிச் செலவுக்கு 200 மில்லியன் ரூபா, நெல் ஆலை 
உரிமையாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 160 மில்லியன் ரூபா, அரிசி போக்குவரத்துச் செலவுக்கு 600 மில்லியன் ரூபா என்ற வகையில் 8,040. மில்லியன் ரூபா இதற்காக மதிப்பிடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.இரண்டு மாதத்திற்கு இலவச அரிசி.

இலங்கையில்மரதன் ஓட்டபோட்டியில் வென்று சாதனை படைத்த சிறுவன்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

நாட்டில் 2 ஆம் தரத்தில் பயிலும் மாணவர் ஒருவர், நேற்று (12) நடைபெற்ற 13 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மரதன் ஓட்டப் போட்டியில் 5 கிலோமீற்றர் தூரத்தை 27 நிமிடங்களில் கடந்து சாதனை 
படைத்துள்ளார்.
கெக்கிராவ கல்வி வலயத்திலுள்ள பல்லலுவ முஸ்லிம் கல்லூரியில் 2ம் தரத்தில் கல்வி கற்கும் எப்.எம்.ருஷ்டி என்ற மாணவன், மரதன் போட்டியில் 13 பேரை பின்தள்ளி இந்த சாதனையை புரிந்துள்ளார்.போட்டியில் இணைந்துகொண்ட 13 வயதுக்குட்பட்ட 30 போட்டியாளர்களில் 17வது இடத்தை அவர் பெற்றுக் கொண்டார்.
பல்லலுவெவ – திக்கடியாவ – கலாவ போன்ற பிரதேசங்களின் ஊடாக மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றதுடன், கல்கிரியாகம பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் அது நடைபெற்றது.இந்த மாணவனின் தந்தை கிரிக்கெட்
வீரர் என்பதுடன் போட்டியின் நாயகன் உட்பட பல விருதுகள், கோப்பைகள், பதக்கங்களை வென்றுள்ளார்.இந்நிலையில், தன்னை விட வயது கூடியோருடன் போட்டியிட்டு 17 ஆவது இடத்தை பெற்ற குறித்த சிறுவனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில்மரதன் ஓட்டபோட்டியில் வென்று சாதனை படைத்த சிறுவன்.

இலங்கையில் இனி குறிப்பிட்ட காலங்களுக்கு மின்வெட்டு இல்லை

சனி, 14 ஜனவரி, 2023

நாட்டில்  இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது தினசரி ஒரு மாதகாலத்திற்கு மின்வெட்டு இருக்காது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் 
தெரிவித்துள்ளது.தமது
திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை உள்ளிட்ட அதிகாரிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பித்து பெப்ரவரி 17ஆம்
திகதி வரை நடைபெற உள்ளது.அதற்காக 331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.நாடளாவிய ரீதியில் 2,200 நிலையங்களில் பரீட்சையை நடாத்துவதற்கு தேவையான
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளின் போது உயர்தரப் பரீட்சையை சுமூகமாக நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் 
குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் இனி குறிப்பிட்ட காலங்களுக்கு மின்வெட்டு இல்லை

இலங்கையில் கோதுமை மாவின் மொத்த விலை குறைப்பு

வெள்ளி, 13 ஜனவரி, 2023


இலங்கையில் கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா 200 முதல் 195 ரூபாய் வரை விற்பனை
 செய்யப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இலங்கையில் கோதுமை மாவின் மொத்த விலை குறைப்பு

திடீரென வெடித்து தீப்பற்றிய தொலைபேசி தைவான் விமானத்தில்-பரபரப்பில் பயணிகள்

வியாழன், 12 ஜனவரி, 2023

தைவான் நாட்டில் டாவோயுவான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் டி.ஆர்.993 விமானம் ஒன்று பயணிகளுடன் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராகி 
கொண்டிருந்தது.
இந்நிலையில், விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த மொபைல் போன் சார்ஜர் ஒன்று திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது. இதனால், மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக விமான பணிப்பெண்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் சார்ஜரின் உரிமையாளர் மற்றும் அவரது அருகே அமர்ந்திருந்த நபர் என 2 பேர் 
காயம் அடைந்தனர்.
அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், மருத்துவமனையில் அவர்கள் இருவரையும் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. தீயை அணைத்த பின்னர் விமானத்தில் முழு அளவில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது. விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என அதுபற்றி வெளியிட்ட அறிக்கை 
ஒன்றில் தெரிவித்து உள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - திடீரென வெடித்து தீப்பற்றிய தொலைபேசி தைவான் விமானத்தில்-பரபரப்பில் பயணிகள்

யாழ் இளைஞனுக்கு பிறந்த தினத்தன்று காதலி கொடுத்த அன்புப்பரிசு

புதன், 11 ஜனவரி, 2023

யாழில் காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவமானது 10-01-2023.அன்று  இடம்பெற்றுள்ளது.குறித்த நபருக்கு பிறந்தநாள முன்னிட்டு தனது காதலி சப்ரைஸ செய்வோம் என்ற எண்ணத்தில் அனுப்பியுள்ளார்.
இதனை நெட்டிசன்கள் பனிஸ் வாங்கி கொடுக்க கூட ஒரு தோழி இல்லை என போஸ்ட் செய்து தனது துயர்வினை பகிர்ந்து வருகின்றனர்.என்றாலும் சில நண்பர்கள் திருமண வாழ்க்கை கூடிய சீக்கிரம் நடைபெற்று சந்தோசமாக வாழவேண்டுமென்றும் கூறிவருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் இளைஞனுக்கு பிறந்த தினத்தன்று காதலி கொடுத்த அன்புப்பரிசு

இங்கிலாந்து முதல் முதலாக விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட் தோல்வி

செவ்வாய், 10 ஜனவரி, 2023

இங்கிலாந்து முதல் முதலாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கி அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது. 
விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் போயிங் 747 விமானத்தில் 70 அடி 
உயர லாஞ்சர் ஒன் ராக்கெட்டை பொருத்தி அதில் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்தது. 
அதன்பின் போயிங் விமானத்தில் 9 செயற்கை கோள்கள் பொருத்தப்பட்ட ராக்கெட் இணைக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள விண்வெளி தளத்தில் ராக்கெட் வைக்கப்பட்ட விமானம் 
புறப்பட்டது. 
பின்னர் திட்டமிட்டபடி அயர்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் ரெுங்கடலில் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.
ஆனால் ராக்கெட் 9 செயற்கை கோள்களை சுற்று வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தவில்லை. இதனால் இங்கிலாந்தின் ராக்கெட் ஏவுதல் திட்டம் தோல்வியில் முடிந்தது. 
இது தொடர்பாக விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் கூறும்போது, "செயற்கை கோள்கள் சுற்றுப் பாதையை அடைவது பற்றிய எங்களின் முந்தைய டுவிட்டை அகற்றுகிறோம். எங்களால் முடிந்தால் கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்வோம்" என்று தெரிவித்தது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இங்கிலாந்து முதல் முதலாக விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட் தோல்வி

நீர்வேலிப்பகுதியில் புதிய திட்டங்களுடன் கால்பதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்

திங்கள், 9 ஜனவரி, 2023

புதிய திட்டங்களுடன் தாயகத்தில் கால்பதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்.யாழ். நீர்வேலிப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 1500 வரையான மாமரங்களை உருவாக்கி, உள்ளூர் விவசாயிகள் பலருக்கு புதிய வேலைவாய்ப்புக்களை வழங்கியிருக்கிறார் வெளிநாட்டு 
முதலீட்டாளர் ஒருவர்.
கவனிப்பார் அற்றுக்கிடக்கும் நிலங்களைக் கொள்வனவு செய்து ( அல்லது குத்தகைக்கு எடுத்து ) , துப்புரவாக்கி, அதில் பயன்தரும் மரம்செடிகளை நட்டு, 50 வரையான விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கும் இந்த முதலீட்டாளரின் பெய ஜஸ்டின் குமார். தாயகத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசிக்கிறார்.
இவரின் மற்றொரு புதிய முயற்சியாக மஞ்சளைப் பயிரிட்டு அதிலும் வெற்றி கண்டிருக்கிறார். மஞ்சளை ஏற்றுமதி செய்வதன்மூலம் அதிகலாபம் கிடைக்கிறது என்கிறார் அவர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகம் கிராக்கியுள்ள பயிரினங்களை பயிரிட்டு, தாயக விவசாயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது இவரின் நோக்கம்.
வெளிநாடுகளில் அதிகம் பிரபலமான TomEJC எனும் மாம்பழங்களே இவரது தோட்டங்களில் பயிரிடப்படுகின்றன. ஒவ்வொரு பழமும் 500g, 600g வரையான எடையைக் கொண்டவை. மாம்பழ ஜூஸ் தயாரிப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்படுவதும் இந்தவகையான 
மாம்பழங்கள்தான்.
உள்ளூரில் இருக்கும் ஏனைய விவசாயிகளை ஒன்றிணைத்து ஒரு கூட்டுமுயற்சியாக ( Cluster Farming ) செயல்படுவது இவரின் இன்னொரு நோக்கம். அதன்படி இவரிடமிருந்து மாமரச் செடிகளையோ, 
மஞ்சளையோ நீங்கள் கொள்வனவு செய்து பயிரிடமுடியும். மேலும் வெளிநாடுகளில் கடைப்பிடிக்கப்படும் சிறந்த விவசாயப் பயிற்சிகளையும் இவர்கள் வழங்குகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் எத்தனையோ ஏக்கர் காணிகள் கவனிப்பார் இல்லாமல் காடும்மேடுமாக காட்சியளிக்கின்றன. அதேவேளை ஜஸ்டின் குமார் போன்ற முதலீட்டாளர்கள் விவசாயத்துக்கு காணிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவரோடு தொடர்புகொண்டு உங்கள் காணிகளைக் குத்தகைக்கு விடமுடியும்.
நிலங்களையும் வைத்துக்கொண்டு,
அதில் ஒரு முயற்சிகூட செய்யாமல், ‘நாங்கள் வறுமையில் வாடுகிறோம்’ என்று சொன்னால், அது நகைப்புக்கு இடமானது. புதிய புதிய சிந்தனைகளும் முயற்சியுமே எம்மை உயர்த்தும். Jaffna Horticulture Private Ltd எனும் பெயரில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, அதில் முதல்கட்ட வெற்றியும் கண்டிருக்கும் ஜஸ்டின் குமார் அவர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் 
வாழ்த்துக்கள்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நீர்வேலிப்பகுதியில் புதிய திட்டங்களுடன் கால்பதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்

மீண்டும் இலங்கையில் கொரோனா தொற்று அலை ஏற்பட்டால் மிக மோசமானதாக இருக்கும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

மீண்டும் கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது சிரமமாக அமையும் என்று பொது சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன 
தெரிவித்துள்ளார்.
தற்பொழுது பல நாடுகளில் கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று அலை ஏற்பட்டால் அது மிக மோசமானதாக இருக்கக்கூடும்
கொழும்பில் (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இலங்கையிலும் எதிர்காலத்தில் கொவிட் தொற்று நிலை ஏற்படக்கூடிய அனர்த்தம் நிலவுவதாக சுகாதார பிரிவு
 எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் அனைத்து தரப்பினரும் குறிப்பிட்ட வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொது மக்கள் சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் 
தெரிவித்தார்.¨

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மீண்டும் இலங்கையில் கொரோனா தொற்று அலை ஏற்பட்டால் மிக மோசமானதாக இருக்கும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் இலவசமாக விநியோகிக்கப்படப்போகும் எரிபொருள்.இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை

சனி, 7 ஜனவரி, 2023

 

இலங்கை விவசாயிகளுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட டீசல் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு ஹெக்டேரில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு இந்த எரிபொருளை இலவசமாக வழங்குமாறு விவசாய அமைச்சர
இவ்வாறு சீனாவின் நன்கொடையில் கிடைத்த 9,000 மெற்றிக் தொன் டீசலே பங்கீட்டு அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய சீனாவினால் வழங்கப்பட்ட டீசல் நாளை முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட புதிய செயலி மூலம் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.சீனாவின் நன்கொடையான ஒரு தொகை டீசலுடன் “சூப்பர் ஈஸ்டன்” என்ற கப்பல் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வரவுள்ளதாக சீன தூதரகம் முன்னர் அறிவித்திருந்தது.
அந்த கப்பலில் 9,000 மெற்றிக் தொன் டீசல் இலங்கைக்கு அனுப்பப்படுவதாக சீன தூதரகம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தது.இலங்கை விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காகவே சீனாவினால் டீசல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது எனவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் இலவசமாக விநியோகிக்கப்படப்போகும் எரிபொருள்.இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை