சாமிமலை பிரதேசத்தில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் வீட்டு தோட்டத்தை அகற்றுமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்தல்

செவ்வாய், 22 நவம்பர், 2022

மஸ்கெலியா - சாமிமலை பிரதேசத்தில் உள்ள ஹொரன பிலான்டேசனுக்கு கவரவில்லை தோட்டத்தில் .22-11-2022.இன்று  தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சிறு சிறு காணிகளில் காணப்பட்ட வீட்டு தோட்டத்தை அகற்றுமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 1997 முதல் 2021 ஆண்டு காலப் பகுதியில் 125 வீடுகள் அமைக்கப்பட்ட வீடுகளில் உள்ள தரிசு நிலத்தில் வீட்டு தோட்டம் உருவாக்கி அதில் அன்றாட தேவைகளுக்கு மரக்கறி உற்பத்தி செய்வதை உடன் அகற்றும் படி தோட்ட நிர்வாகம் பொலிஸ் மூலம் நடவடிக்கை 
எடுத்துள்ளது.
இதனை எதிர்த்து இன்று மதியம் அத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அக் குடியிருப்பு பகுதிகள் வாழும் தொழிலாளரின் பிள்ளைகள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்
இன்றைய அரசு மற்றும் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் (Ranil Wickremesinghe) உணவு உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ள போது ஏன் இந்த நிலை தோன்றியுள்ளது என அந்த மக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர்.
விவசாய தோட்டத்தை அழித்து குடியிருப்பு பகுதிகளில் டேப்பன்டைன் மர கன்றுகள் நடும் திட்டம் உருவாக்கபட்டு உள்ளது என தோட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
தேயிலை தோட்ட பகுதியில் பல ஹெக்டயர் தேயிலை செடிகளில் காடாக உள்ளது. அதில் அந்த மரக் கன்றுகள் நடும் திட்டம் உருவாக்க வேண்டும் என தொழிலாளர்கள் கூறுவதுடன் பல வருடங்களாக செய்து கொண்டு உள்ள விவசாயத்தை அகற்ற முடியாது என தொழிலாளர்கள் 
தெரிவித்தனர்.
அதேவேளை குறித்த பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் மற்றும் ஜீவன் தொண்டமானும் (Jeevan Thondaman) ஆராய்ந்து வருவதாகவும் குறித்த பிரச்சினைக்கு அவர்கள் தீர்வு பெற்றுத் தருவார்கள் என நம்புவதாகவும் தோட்ட தொழிலாளர்கள் 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக