நாட்டில் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் தகவல்

செவ்வாய், 15 நவம்பர், 2022

நாட்டில் தற்போதைய நெருக்கடி நிலைமையை நிர்வகித்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு இவ்வருட வரவு செலவு திட்டம் முக்கியமானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க
 தெரிவித்துள்ளார்.
விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர், அரசாங்கம் பணவியல் கொள்கைகளை கடுமையாக்காமல், வட்டி விகிதங்கள் மற்றும் வரிகளை அதிகரிக்கவில்லை என்றால், நாட்டில் பணவீக்கம் 100% ஐ 
தாண்டியிருக்கும்.
பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க நாம் இருந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்தோமோ அதைச் செய்ய வேண்டும். பணக் கொள்கையை கடுமையாக்காவிட்டால், வட்டி விகிதங்கள், அதிகரிக்கவில்லை என்றால், அரசு வரியை அதிகரிக்கவில்லை என்றால், இன்னும் காத்திருந்திருந்தால், பணவீக்கம் 100ஐ தாண்டியிருக்கும்.
இந்த நெருக்கடி நிலவியிருக்காது.நாம் எடுத்த முடிவுகளால் இந்த நிலைமையில் இருக்கின்றோம், ஆனால் இப்போது 100 சதவீதம் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மையில் இருக்கிறோம்.
சில தொழில்கள் துறைகள் சிறப்பாக இயங்குகின்றன. ஆனால் சில துறைகள் இன்னும் அந்த செல்வாக்கைக் அடையவில்லை. இருப்பினும் நாங்கள் தற்போது ஒரு நிலையான நிலையில் 
இருக்கின்றோம்.
இதனை வேறு விதமாக செய்திருக்கலாம் என்று சொல்பவர்களிடம் சிறந்த வழி எது என கேள்வியெழுப்புகின்றேன். இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் முன்னேறுவதற்கும் இந்த வரவு செலவுத் திட்டம் முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக