கண் பார்வையற்ற ஹிமாஷா காவிந்தியா பரீட்சையில் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்லார்

ஞாயிறு, 27 நவம்பர், 2022

பிறப்பிலேயே பார்வையிழந்த காவிந்தியா 9A பெறுபேறு பெற்றுள்ளார். 
பெற்றோர் பெருமிதம். 
குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த கண் பார்வையற்ற மாணவி ஒருவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெற்று 
சாதனை படைத்துள்ளார்.
ஹிமாஷா காவிந்தியா என்ற இந்த மாணவி பிறப்பிலேயே கண் பார்வையிழந்தவர். அனுராதபுரத்தில் பிறந்த இந்த மாணவி 
சிறுவயதிலேயே எதனையும் புரிந்துக்கொள்ளும் 
திறமை பெற்றவராக இருந்தார் எனவும் திறமையாக சவாலை வெற்றிக்கொள்வார் 
என உணர்ந்து அவரது பெற்றோர், அவரை குருணாகல் பிரதேசத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆரம்பத்தில் குருணாகல் சந்தகட விசேட பாடசாலையில் பயின்று வந்த காவிந்தியா, 2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்றதுடன் 173 புள்ளிகளை பெற்றார். 
இதனையடுத்து பெற்றோர் அவரை குருணாகல் மகிந்த கல்லூரியில் சேர்த்துள்ளனர்.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள காவிந்தயாவின் தாய் கீதானி, “எனது மகள் சாதாரண தரத்தில் படிக்க மிகவும் ஆர்வம் 
காட்டினார். 
அது மாத்திரமல்ல பாடசாலையில் சங்கீதமும் கற்றாள். பாடுவதில் அவர் திறமையானவள். பல சான்றிதழ்களை பெற்றுள்ளாள்” 
எனக் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக