இதோ தங்கம் வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்

வியாழன், 1 செப்டம்பர், 2022

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்க விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது.
குறிப்பாக சர்வதேச சந்தையில் அவுன்ஸுக்கு 1716 டொலர்கள் என்ற அளவில் காணப்படுகின்றது.
தங்க விலையானது 2018ம் ஆண்டுக்கு பிறகு மாதாந்த அளவில் ஓகஸ்ட் மாதத்தில் சுமார் 3% சரிவினைக் கண்டுள்ளது.
இது தொடர்ந்து 5 வது மாதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் காரணமாக இன்னும் குறைவடையலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இதனை குறைக்க பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.
குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தங்க விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டொலரின் மதிப்பில் பிரதிபலிக்கலாம் என்று 
தெரிவிக்கப்படுகின்றது.
ஆக இனி வரவிருக்கும் மாதங்களிலும் டொலரின் மதிப்பு வலுவடைய காரணமாக இருக்கலாம். இது தங்கத்திற்கு 
ஆதரவாக அமையலாம்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக