நாட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் எரிவாயு

புதன், 4 மே, 2022

நாட்டில் சந்தையில் கொள்வனவு செய்ய போதிய தொகை எரிவாயு கொள்கலன்கள் இல்லாத போதிலும் கறுப்புச் சந்தையில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாவுக்கு எரிவாயு கொள்கலன் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சமையல் எரிவாயு கொள்கலன்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள், தொகையை மறைத்து வைத்து இடைத்தரகர்கள் ஊடாக அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்து 
வருகின்றனர்.
இதனை தவிர மேலும் சில தரப்பினர் திடடமிட்டு எரிவாயு வரிசைகளில் நின்று எரிவாயுவை கொள்வனவு செய்து, அவற்றை 4 ஆயிரம் இலாபத்துடன் வெளியில் விற்பனை செய்து வருவதாகவும் நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சில எரிவாயு விற்பனை முகவர்கள் எரிவாயு தட்டுப்பாட்டுடன் எரிவாயு  சர்வாதிகாரத்தை கையில் எடுத்து விற்பனைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
நுகர்வோர் அதிகார சபை உட்பட பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினர் தலையீடுகளை மேற்கொண்டு இந்த அநீதியான செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுகர்வோர் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக